For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரெளடி வீரமணியின் சவ ஊர்வலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

By Super
Google Oneindia Tamil News

சென்னை :

சென்னை மெரீனா கடற்கரையில் சுட்டுக் கொல்லப்பட்ட தாதா வீரமணியின் உடல் தகனம் நேற்று மாலை பலத்தபாதுகாப்புடன் நடந்தது.

அயோத்திக்குப்பத்தைச் சேர்ந்த வீரமணி, சென்னை நகர ரவுடித்தனங்களின் தலைவனாக இருந்து வந்தவன்.

நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு அருகே மெரீனா கடற்கரையில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் கிங்க்ஸ்லி,வெள்ளைச்சாமி ஆகியோரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

அவனது உடல் தகனம் நேற்று மாலை நடந்தது. வீரமணியின் வீட்டிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உடல்எடுத்துச் செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் இந்த சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஆயுதம் தாங்கியபோலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ் பகுதிகளின் தெருக்கள் வழியாக கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டை அடைந்தது சவஊர்வலம். அங்கு மாலை 3.15 மணியளவில் வீரமணியின் உடல் தகனம் செய்யப்பட்டது. சவ ஊர்வலத்தில் கலந்துகொண்ட அனைவரும் அழுதபடி வந்தனர். பெண்கள் கதறி அழுதபடியும், தலையில் அடித்துக் கொண்டும்வந்தனர்.

ஊர்வலம் வி.ஆர்.பிள்ளை தெரு வழியாக வந்தபோது அங்கு ஒருவித இறுக்கம் நிலவியது. காரணம், வீரமணியின்பரம விரோதிகள், எதிர்க் கோஷ்டியின் தலைவர்கள் அப்பகுதியில்தான் வசித்து வருகிறார்கள்.

வீரமணி உயிருடன் இருந்த வரை இந்தப் பகுதிக்கு வந்ததே இல்லை. பாதுகாப்பு கருதி, வி.ஆர்.பிள்ளை தெருவில்உள்ள அனைத்து வீடுகளும் பூட்டப்பட்டு வீட்டில் உள்ள அனைவரும் மாடிகளுக்குச் சென்று விட்டனர்.

இங்கு அதிக போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். இருப்பினும் எந்தவித விரும்பத்தாகத செயல்களும்நடைபெறவில்லை.

சவ ஊர்வலத்தில் அயோத்தியாகுப்பத்தில் உள்ள அத்தனை பேரும் கலந்து கொண்டு ஊர்வலத்தில் நடந்துவந்தனர். சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வீரமணியின் ஆதரவாளர்கள் வந்திருந்தனர்.

மீளாத் துயிலில் ஆழ்ந்து விட்ட நீலக்கடலின் நாயகன் என்ற பெயரில் அயோத்தியாகுப்பம், திருவல்லிக்கேணி,ஐஸ்ஹவுஸ் பகுதிகளில் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X