For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவையில் முஸ்லீம் வாலிபர் கொலை: நகரில் பதற்றம் ஒருவர் கைது, வி.எச்.பியினருக்கு வலைவீச்சு

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

பிரபல தமிழாசிரியர் கி.ஆ.பெ.விஸ்வநாதனின் மனைவியான சுப்புலட்சுமி இன்று மரணமடைந்தார். அவருக்குவயது 94.

தன்னுடைய 4 மகள்கள், 2 மகன்கள் மற்றும் பேரன் பேத்திகள்,கொள்ளுப்பேரக் குழந்தைகள் என கிட்டத்தட்ட 80பேருக்காக வாழ்ந்தவர் அவர்.

தன் காலத்தில் திராவிடவாதியாக வாழ்ந்த அவர் திராவிட இயக்கத்தின் தந்தையான பெரியார், திமுக வைத்தொடங்கிய அண்ணா, தற்போதைய திமுக தலைவரான கருணாநிதி ஆகியோருடன் தோழமை கொண்டிருந்தார்.

தமிழியல் மற்றும் இயற்கை மருத்துவம் குறித்த நூல்களை எழுதுவதில் இவர் தன் கணவருக்குப் பேருதவியாகஇருந்துள்ளார்.

    அக்டோபர் 08, 2003

  • கூத்துக் கலைஞர் கண்ணப்ப தம்பிரான் மரணம்

    திருவண்ணாமலை:

    பிரபல கூத்துக் கலைஞர் புரிசை கண்ணப்ப தம்பிரான் மரணமடைந்தார்.

    திருவண்ணாமலை மாவட்டம் புரிசை கிராமத்தைச் சேர்ந்த தம்பிரான், தமிழகத்தின் பழமையான கலையானகூத்துக் கலையில் பிரபலமானவர்.

    ஒரு முதியவரும், பெரிய இறகுகளும் என்ற தலைப்பில் அமைந்த இவரது கூத்து மிகவும் பிரபலமானது. சர்வதேசஅளவில் பல்வேறு பரிசுகளை வென்றுள்ளது.

    கலைமாமணி, சங்கீத நாடக அகாடமி விருதுகளையும் வென்றவர் கண்ணப்ப தம்பிரான்.

    92 வயதான தம்பிரானுக்கு உடல் நலம் குன்றியிருந்தார். இந் நிலையில் புரிசையில் உள்ள தனது வீட்டில் கடந்ததிங்கள்கிழமை மரணமடைந்தார். அவருக்கு இரண்டு மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர்.

      செப்டம்பர் 22, 2003

    • தமிழக முன்னாள் டிஜிபி சர்மா மரணம்

      சென்னை:

      தமிழக காவல் துறையின் முன்னாள் டிஜிபியான எப்.சி. சர்மா இன்று காலமானார். அவருக்கு வயது 63.

      30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக காவல்துறையின் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய ஐ.பி.எஸ்.அதிகாரியான சர்மாவுக்கு மனைவியும் இரு மகன்களும் உண்டு.

      கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சைபலனின்றி இன்று காலமானார்.

        செப்டம்பர் 11, 2003

      • கீதை சொற்பொழிவாளர் சுப்பிரமணிய ஐயர் மரணம்

        சென்னை:

        கீதா மணி என்று அன்புடன் அழைக்கப்பட்ட பிரபல கீதை சொற்பொழிவாளர் டி.கே. சுப்பிரமணிய ஐயர் இன்றுகாலமானார். அவருக்கு வயது 84.

        தனது வாழ்நாளில் 88,850 முறை பகவத் கீதையை அவர் ஒப்பித்துள்ளார். ரயில்வேதுறையில் மூத்த அதிகாரியாகப்பணியாற்றிய இவர் சிறந்த கர்நாடக இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.

        மறைந்த சுப்பிரமணிய ஐயருக்கு மனைவி, 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

          செப்டம்பர் 03, 2003

        • திரைப்பட இயக்குநர் குணசேகர் மரணம்

          மதுரை

          டேவிட் அங்கிள் படத்தை இயக்கிய இயக்குநர் குணசேகர் மதுரையில் மரணமடைந்தார்.

          வில்லனாக நடித்து வந்த நடிகர் ஆனந்தராஜ் முதன் முதலில் ஹீரோவாக நடித்த படம் டேவிட்அங்கிள். இந்தப் படத்தை இயக்கியவர் குணசேகர். மதுரையைச் சேர்ந்த இவர் தற்போது சத்யராஜ்நடிக்கும் ஜோர் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

          மதுரைக்கு வந்திருந்த குணசேகருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார்.

            ஆகஸ்டு 25, 2003

          • பழம்பெரும் திரைப்பட பாடலாசியர் உளுந்தூர்பேட்டை சண்முகம் மரணம்

            சென்னை:

            பழம்பெரும் திரைப்படப் பாடலாசியர் உளுந்தூர்பேட்டை சண்முகம் சென்னையில் காலமானார்.

            அகத்தியர், திருமலை தென்குமரி, ராஜராஜசோழன் உள்ளிட்ட பல்வேறு திரைப் படங்களில் பாடல்களும்,ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களையும் எழுதியவர் உளுந்தூர்பேட்டை சண்முகம். அவருக்கு வயது 71.

            சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த இவருக்கு நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

            இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் சங்கர் சாதகப் பறவைகள் என்றபுகழ்பெற்ற இசைக் குழுவை நடத்தி வருகிறார்.

            இரண்டாவது மகன் சரவணன், திரைப்பட ஒளிப்பதிவாளராக உள்ளார். இவர் நடிகை சங்கீதாவின் கணவராவார்.

            உளுந்தூர்ப்பேட்டை சண்முகத்தின் உடலுக்கு கவிஞர் வைரமுத்து, நடிகை மதுபாலா உள்ளிட்ட திரையுலகப்பிரபலங்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

              ஜூலை 24, 2003

            • காளிமுத்துவின் மனைவி மரணம்: ஜெ., ஸ்டாலின் அஞ்சலி

              சென்னை:

              தமிழக சட்டமன்ற சபாநாயகர் காளிமுத்துவின் மனைவி நிர்மலா, சென்னையில் இன்று அதிகாலை காலமானார்.அவரது உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினர்.

              காளித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு வீட்டில் மனைவி நிர்மலா மற்றும் குழந்தைகளுடன் வசித்துவருகிறார்.

              53 வயதான நிர்மலா கல்லீரல் கோளாரால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வந்தார். இந் நிலையில் நேற்றிரவுஅவருக்கு ரத்த வாந்தி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அதிகாலை அவர் மரணமடைந்தார்.

              குற்றாலத்தில் இருந்த சபாநாயகர் காளிமுத்துவுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்சென்னை விரைந்தார். மனைவியின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.

              இந் நிலையில் இன்று காலை திமுக தலைவர் கருணாநிதி சார்பில் அவரது மகனும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதேபோல, காங்கிரஸ் தலைவர்எஸ்.ஆர்.பாலசுப்ரமணியமும் அஞ்சலி செலுத்தினார்.

              பிற்பகலில் முதல்வர் ஜெயலலிதா, நிர்மலாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளும் இறுதியஞ்சலி செலுத்தினர்.

              நிர்மலாவின் உடல் மந்தைவெளி புனித மேரி கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. கிருஸ்துவரான நிர்மலா,சிறந்த கர்நாடக இசைக் கலைஞராவார். மேலும் ஓவியம் வரைவதிலும் தீராக ஆர்வம் கொண்டிருந்தார்.

                ஜூலை 22, 2003

              • எஸ்.வி.சேகரின் தந்தை காலமானார்

                சென்னை:

                நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகரின் தந்தை, எஸ்.வி.வெங்கட்ராமன் சென்னையில் காலமானார்.

                79 வயதான வெங்கட்ராமன், நாடக நடிகர் ஆவார். தமிழ் தொலைக் காட்சிகளின் முதல் தொடரானவண்ணக் கோலங்களைத் தயாரித்தவர். ரோஜா உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். டிவியில் முதல்தமிழ் விளம்பரத்தைத் தயாத்தவரும் இவரே.

                நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனைக்குக் கொண்டு செலலப்பட்ட வெங்கட்ராமன் சிகிச்சைபலனளிக்காமல் இறந்தார்.

                தமிழ் நாடக உலகுக்கு இவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி 1995ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதுஅவருக்கு வழங்கப்பட்டது.

                  ஜூலை 18, 2003

                • முன்னாள் துணைசபாநாயகர் மரணம்

                  திண்டுக்கல்:

                  தமிழக சட்டசபையின் முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.பாலசுப்ரமணியம் காலமானார்,

                  அதிமுகவின் ஆரம்ப காலத்திலிருந்து அதில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் வி.பி.பாலசுப்ரமணியன்.இவருக்கு சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர். உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ளதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

                  இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார்.

                  1980ம் ஆண்டு முதல் 84ம் ஆண்டு வரை வேடசந்தூர் தொகுதி சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.பின்னர் அதே தொகுதியில் மீண்டும் 1984ம் ஆண்டு முதல் 87 வரை உறுப்பினராக இருந்துள்ளார். அந்த சமயத்தில்சட்டசபை துணை சபாநாயகராக இருந்துள்ளார்.

                    ஜூன் 11, 2003

                  • கம்யூனிஸ்ட் பத்திரிக்கையாளர் முத்தையா மரணம்: கருணாநிதி அஞ்சலி

                    சென்னை:

                    பிரபல பத்திரிக்கையாளரும் சுதந்திரப் போராட்ட வீரருமான கே.முத்தையா காலமானார். அவருக்கு வயது 88.

                    தீவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸவாதியான இவர் அக் கட்சியின் தீக்கதிர் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார்.மேலும் ஜனசக்தி பத்திரிக்கையின் ஆசியராகவும் இருந்த அவர் தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைநிறுவினார்.

                    சிறிது காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்றிரவு காலமானார். அவருக்கு மனைவி, இருமகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

                    இவரது உடல் சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காகவைக்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி, துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் உள்ளிட்டதலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

                    மேலும் பல தொழிற்சங்கத்தினரும், தொழிலாளர்களும், பொது மக்களுக்கும் அவரது உடலுக்கு அஞ்சலிசெலுத்தினர்.

                    அவரது உடல் இன்று மாலை பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. இவரது சொந்த ஊர்தஞ்சாவூராகும்.

                      ஜூன் 09, 2003

                    • எம்.ஜி.ஆரின் மேக்கப் மேன் சாவு

                      சென்னை:

                      முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நடிகராக இருந்தபோது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது மேக்கப்மேனாக இருந்த நாராயணசாமி சென்னையில் மரணம் அடைந்தார்.

                      எம்.ஜி.ஆரின் மேக்கப் மேனாக மட்டும் இல்லாமல், அசோகன், பி.எஸ்.வீரப்பா, தங்கவேலு உள்ளிட்டோருக்கும்இவர் மேக்கப் மேனாக இருந்தார். ஜெயலலிதா, சந்திரபாபுவை வைத்து சொந்தமாக ஒரு படமும் தயாரித்துள்ளார்.

                      74 வயதான நாராயணசாமி, சில காலமாக சிறுநீரக நிாேயால் பாதிக்கப்பட்டிருந்தார். தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

                        மே 27, 2003

                      • அண்ணாவின் பாராட்டை பெற்ற பலகுரல் மன்னன் மரணம்

                        சென்னை:

                        பல குரலில் பேசி அறிஞர் அண்ணாவின் பாராட்டைப் பெற்ற பல குரல் மன்னன் சிவகங்கைசேதுராஜன், சென்னையில் மரணமடைந்தார்.

                        68 வயதாகும் சேதுராஜன், பல குரலில் பேசுவதில் மன்னர். அண்ணாவின் முன்பாகவே அவரைப்போலவே பேசி அவரது பாராட்டையும், பலகுரல் மன்னன் என்ற பட்டத்தையும் பெற்றவர்.

                        எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கிய பிறகு அதில் இணைந்து, பொதுக்கூட்டங்களில்அண்ணாவைப் போல பேசி கூட்டம் சேர்த்தவர்.

                        சென்னையில் உள்ள தனது வீட்டில் அவர் மரணமடைந்தார்.

                          ஏப்ரல் 01, 2003

                        • கார் விபத்தில் எழுத்தாளர் சு. சமுத்திரம் பலி

                          சென்னை:

                          சென்னையில் ஏற்பட்ட கார் விபத்தில் பிரபல எழுத்தாளர் சு. சமுத்திரம் உயிரிழந்தார். அவருக்குவயது 62.

                          சென்னை-அடையாறு பகுதியில் நேற்று இரவு சமுத்திரம் சென்ற காருடன் அரசு பஸ் மோதியதில்அவர் பலத்த காயம் அடைந்தார்.

                          இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் சமுத்திரம். ஆனாலும் சிகிச்சைபலனளிக்காமல் இன்று காலை சுமார் 9 மணிக்கு அவர் இறந்தார்.

                          சமுத்திரத்துக்கு கோகிலா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஒரு மகன்அமெரிக்காவில் உள்ளார். அவர் சென்னை திரும்பியதும் சமுத்திரத்தின் இறுதிச் சடங்குகள்நடைபெறும்.

                          "வேரில் பழுத்த பலா" என்ற நாவலுக்காக "சாகித்திய அகாடெமி" விருது பெற்றுள்ள சமுத்திரம் 17நாவல்கள், 7 குறு நாவல்களை எழுதியுள்ளார். மேலும் 25 சிறுகதைத் தொகுப்புகளையும் அவர்வெளியிட்டுள்ளார். அவர் "சாகித்திய அகாடெமி" விருது தேர்வுக் குழு உறுப்பினராகவும்இருந்துள்ளார்.

                          அவருடைய அனைத்து படைப்புகளிலும் கிராமத்து மண் கமழும். கிராமங்களில் பெண்களுக்கும்,அப்பாவி மக்களுக்கும் நேரும் கொடுமைகளை "நறுக்" தொணியில் தெரிவிப்பதில் வல்லவராகத்திகழ்ந்தவர் சமுத்திரம்.

                          தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி ஆகியவற்றின் செய்தி ஆசிரியராக இருந்துள்ளசமுத்திரம், "பிரஸ் இன்பர்மேஷன் பீரோ" மற்றும் கள விளம்பரத் துறை ஆகியவற்றிலும்பணியாற்றியுள்ளார்.

                          திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள திப்பனம்பட்டி கிராமம்தான் சமுத்திரத்தின்சொந்த ஊராகும்.

                          கருணாநிதி இரங்கல்:

                          சமுத்திரம் இறந்தது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கடும் வேதனைகளையும், ஆழ்ந்தஇரங்கல்களையும் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

                          என் அருமை நண்பர்களில் ஒருவரும் அனைவரின் அன்புக்கும் பாத்திரமானவருமான சமுத்திரம்இறந்து விட்டார் என்று திடீரென வந்த செய்தி என் செவியிலும், சிந்தையிலும் தேள் கொட்டியதுபோன்ற உணர்வை ஏற்படுத்தியது.

                          அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                          சமுத்திரம் காலமாகி இருக்கலாம். ஆனால் சமுத்திரம் என்ற பெருங்கடல் எப்படி வறண்டு போகும்?அவர் படைத்த எழுத்துக்கள் நமக்கு ஊட்டி வரும் உணர்வுகளுக்கு வறட்சியே இல்லை.

                          ஆம், சமுத்திரம் வறண்டு போகாது. வாழ்க் சமுத்திரத்தின் பெயர் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

                          "சமுத்திரத்தின் திடீர் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய இழப்பு" என்றுகாங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஜி.கே. வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் கூறியுள்ளானர். அவருடைய குடும்பத்தினருக்கும்தங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

                            மார்ச் 08, 2003

                          • காயிதே மில்லத்தின் மகன் காலமானார்

                            சென்னை:

                            இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்முன்னாள் தலைவர், மறைந்த காயிதே மில்லத்தின் மகனான மியாகான்சென்னையில் காலமானார்.

                            சில நாட்களுக்கு முன் சாலை விபத்தில் காயமடைந்த மியாகான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுதீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) காலமானார்.

                            அவருக்கு வயது 78. மனைவி, ஒருமகன், இரண்டு மகள்கள் உள்ளனர். தமிழக சட்ட மேலவையில்உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார்.

                            மியாகானின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல்செய்தியில், பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்ட காயிதே மில்லத் அவர்களின் ஒரே மகனான மியாகான்அவர்கள் மறைந்த செய்தி கேட்டு துயருற்றேன்.

                            சட்டமேலவையில் மியாகான் சிறந்தமுறையில் கடமையாற்றியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்குஎனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

                              பிப்ரவரி 28, 2003

                            • மூத்த நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் திடீர் மரணம்

                              சென்னை:

                              பழம் பெரும் நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் இன்று திடீர் மரணமடைந்தார். அவருக்கு வயது 67.

                              நுரையீரல் நோயினாலும் புற்று நோயாளும் அவர் தாக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை எடுத்து வந்தாலும்நன்றாகவே நடமாடி வந்தார். ஆனால், சுந்தரராஜனின் உடல் நிலைமை இன்று திடீரென மோசமடைந்தது. இந்நிலையில் இன்று பகல் 12.30 மணியளவில் அவர் சென்னையில் உள்ள தனது வீட்டிலேயே மரணமடைந்தார்.

                              மேஜர் சந்திரகாந்த் படத்தில் ராணுவ மேஜர் வேடத்தில் நடித்ததால் அதுவே அவரது பெயருடன் ஒட்டிக்கொண்டது. இதுவரை சுமார் 500 படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி என மூத்த கலைஞர்களுடன் மிகநெருக்கமாக இருந்தவர்.

                              நாடாக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்த அவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக திரையுலகில் பிரகாசித்தார்.ஹீரோ, வில்லன், அப்பா, தாத்தா, ஹீரோவின் நண்பன் என பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.கல்தூண் உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்து இயக்கியுள்ளார்.

                              தென்னிந்திய சினிமா வர்த்தக சபையில் செயலாளராகவும் இருந்தவர். சிவாஜி கணேசன் தொடங்கிய தமிழகமக்கள் முன்னேற்ற முன்னணியில் சேர்ந்து சில காலம் அரசியலிலும் ஈடுபட்டார். பின்னர் அக் கட்சி ஜனதா தளத்தில்இணைக்கப்பட்டது. அத்துடன் அரசில் வாழ்வுக்கு முழுக்கு போட்டுவிட்டார்.

                              மேஜரின் உடல் தகனம் நாளை சென்னையில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.அவரது மறைவுக்கு நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

                              தமிழ்த் திரையுலகில் மிக கண்ணியமான இடம் பெற்றவர் மேஜர் சுந்தர்ராஜன். அவருக்கு மனைவி, மகள் மற்றும்மகன் கெளதம் ஆகியோர் உள்ளனர். கெளதமும் வானத்தைப் போல போன்ற படங்களல் நடித்தார்.

                              இப்போது சன் டிவிக்கு தில்லானா தில்லானா என்ற நடன நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கி வருவதோடு, டிவிசீரியல்களிலும் நடித்து வருகிறார்.

                                பிப்ரவரி 11, 2003

                              • பாரதிராஜா தாயார் மரணம்: ஜெ. இரங்கல்

                                தேனி:

                                இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் தாயார் கருத்தம்மாள் என்ற மீனாட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) அவரது சொந்த ஊரான தேனியில்மரணமடைந்தார்.

                                85 வயதான அவர் இன்று காலை மாரடைப்பால் காலமானார். செய்தி அறிந்ததும் சுற்றுப் பகுதி கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானமக்கள் தேனி என்.டி.ஆர். நகரில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் குவிந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

                                தனது கருதம்மா படத்தை தாயாரின் பெயரில் தான் பாரதிராஜா எடுத்தார். அந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்தபோது அதைஜனாதிபதியிடம் இருந்து தனது தாயாரைத் தான் பெறச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                                தனது மகள் ஜனனி வெளிநாடு செல்வதையொட்டி தாயாரிடம் ஆசி பெறுவதற்காகவும், தனது மகன் மனோஜ் நடிக்கும் படத்தின் சூட்டிங்வத்தலகுண்டுவில் நடப்பதாலும் குடும்பத்தோடு தேனி வந்திருந்தார் பாரதிராஜா.

                                திங்கள்கிழமை இரவு மனோஜுடன் வத்தலகுண்டுக்கு படப்பிடிப்புக்க்காப் போய்விட்டார். இந் நிலையில் செவ்வாய்க்கிழமைஅதிகாலையில் கருத்தம்மாளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

                                உடனடியாக அவரைத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் பிழைப்பது கடினம் என டாக்டர்கள்கூறிவிட்டதால் மீண்டும் அவர் வீட்டுக்கே கொண்டுவரப்பட்டார்.

                                வீட்டில் காலை 5.45 மணியளவில் கருத்தம்மாள் மரணமடைந்தார். உடனே இந்தத் தகவல் பாரதிராஜாவுக்குத் தெரிவிக்கப்பட்டது.படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு பாரதிராஜாவும், அவரது மகன் மனோஜும் வீட்டுக்கு விரைந்தனர்.

                                கருத்தம்மாளின் உடல் தகனம் நாளை (புதன்கிழமை) காலை நடக்கிறது.

                                பாரதிராஜா தவிர அவருக்கு மேலும் 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

                                ஜெ.இரங்கல்

                                கருத்தம்மாவின் மறைவிற்குமுதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

                                பாரதிராஜாவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், கருத்தம்மாவின் ஆன்மா சாந்தியடையவும், இந்த துக்கத்தைத் தாங்கும் சக்தியை கடவுள்கொடுக்கவும் கோரி இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

                                  பிப்ரவரி 09, 2003

                                • பழம்பெரும் நடிகர் கே.கே. செளந்தர் மரணம்

                                  சென்னை:

                                  பழம்பெரும் திரைப்பட நடிகரான கே.கே. செளந்தர் நேற்று இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 78.

                                  புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருடைய கடந்த சில நாட்களாக மிகவும் மோசமான நிலைக்குத்தள்ளப்பட்டது.

                                  இந்நிலையில் நேற்று இரவு செளந்தர் தன்னுடைய வீட்டில் மரணம் அடைந்தார். அவருக்கு மனைவியும் மூன்றுமகன்களும் உள்ளனர்.

                                  "மந்திரி குமாரி" படத்தில் அறிமுகமான செளந்தர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான "உன்னை நினைத்து"படம் வரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

                                  எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலமான நடிகர்களுடன் செளந்தர்நடித்துள்ளார்.

                                  இன்று மாலை சென்னை வடபழனியில் உள்ள சுடுகாட்டில் அவருடைய இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

                                    ஜனவரி 29, 2003

                                  • நடிகை பண்டரிபாய் காலமானார்

                                    சென்னை:

                                    பழம்பெரும் நடிகை பண்டரிபாய் இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73.

                                    கர்நாடகத்தைச் சேர்ந்த பண்டரிபாய் தமிழில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆர். முதல் ரஜினி வரை முன்னணிநடிகர்களுக்கு ஜோடியாக, தாயாராக நடித்துள்ளார்.

                                    நீண்ட காலமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு விபத்தில் ஒரு கை அடிபட்டது. பின்னர் அந்தக் கை நீக்கப்பட்டது. இந்நிலையில் சிறுநீரகக் கோளாரால் அவர் பாதிக்கப்பட்டார். இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா உதவியுடன் அவர் அப்பல்லோமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

                                    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கான செயலவுகளை அதிமுக ஏற்றது. கடந்த இரு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.ஆனால் இன்று காலை அவருக்கு மூச்சுத் திணரல் ஏற்பட்டு அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். அவருக்கு கணவர், 2 மகனகள்உள்ளனர்.

                                    இதையடுத்து அவரது ஆசைப்படி அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.

                                    பண்டரிபாயின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு தென் இந்திய திரைப்படத்துறைக்கே ஏற்பட்ட பெரும் இழப்பு என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

                                    வட பழனியில் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு நடிகர்கள் விஜய்காந்த், சத்தியராஜ், நெப்போலியன், தியாகு, ஏ,வி.எம்.சரவணன், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

                                    கன்னட நடிகர் விஷ்னுவர்த்தன் பெங்களூரிலிருந்து சென்னை வந்து பண்டரி பாய்க்கு அஞ்சலி செலுத்தினார்.

                                    1949ம் ஆண்டு ஏ.வி.எம். நிறுவனத்தின் வாழ்க்கை படத்தின் மூலம் இவர் நடிகையாக அறிமுகமானார்.

                                      ஜனவரி 13, 2003

                                    • திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்

                                      திண்டுக்கல்:

                                      திண்டுக்கல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவான தங்கராஜன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 71.

                                      மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தங்கராஜன் பல ஆண்டுகளுக்கு முன் எம்.எல்.ஏவாக இருந்தார்.

                                      கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் அவர்.

                                      இந்நிலையில் இன்று காலை தங்கராஜன் மரணமடைந்தார்.

                                        ஜனவரி 11, 2003

                                      • தமிழக அரசு தலைமை ஷியா காஜி மரணம்

                                        சென்னை:

                                        தமிழக அரசின் ஷியா தலைமை காஜி அல்ஹாஜ் மெளலானா குலாம் அகமது அஸ்கரி சாஹிப் பெங்களூரில் வெள்ளிக்கிழமைமரணமடைந்தார். அவரது உடல் அடக்கம் சென்னையில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

                                        காஜி குலாம் அகமது, தமிழக வக்ப் வாரியம், ஹஜ் கமிட்டி ஆகியவற்றில் உறுப்பினராக இருந்து வந்தார்.

                                        அவரது உடல் நல்லடக்கம் சென்னை ஆயிரம் விளக்கு கல்லறையில் மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

                                          டிசம்பர் 24, 2002

                                        • பழம்பெரும் நடிகர் வி.கே. ராமசாமி மரணம்

                                          சென்னை:

                                          பழம்பெரும் நகைச்சுவை நடிகரான வி.கே. ராமசாமி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76.

                                          ராமசாமிக்கு சில மாதங்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சென்னை அண்ணாநகரில் உள்ள இயற்கை மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார்.

                                          அப்போது நாற்காலியில் உட்கார்ந்தபோது தவறி விழுந்து அவருடைய முதுகெலும்பில் அடிபட்டது. இதைத்தொடர்ந்து அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.

                                          ஆனால், நவீன சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு வசதி இல்லாததால் அவரால் பெரிய மருத்துவமனைக்குச் சென்றுசிகிச்சை செய்து கொள்ள முடியாத அவல நிலை ஏற்பட்டது. ராமசாமியின் நிலை அறிந்ததும் அவரது வீட்டுக்குச்சென்ற நடிகர் வடிவேல் ரூ.25,000 கொடுத்து உதவினார். இதைத் தொடர்ந்து மேலும் பல திரையுலகினர்ராமசாமிக்கு உதவினர்.

                                          ஆனால் முன்னணி நடிகர், நடிகையர் யாரும் வி.கே.ஆருக்கு உதவிக் கரம் நீட்டாததால் அவரால் உரிய சிகிச்சைஎடுக்க முடியவில்லை.

                                          இந் நிலையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் செம்மலைக்கு இந்தத் தகவல் தெரியவந்தது. அவர் ராமசாமியைசெனனை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்குமாறும் அங்கு அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்க ஏற்பாடுசெய்வதாகவும் தெரிவித்தார்.

                                          இதைத் தொடர்ந்து அவர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நல்ல சிகிச்சையும்அளிக்கப்பட்டது. உடல் நலமும் மிக வேகமாகத் தேறியது. இதையடுத்து நேற்று இரவு தி. நகரில் உள்ள தன்வீட்டுக்குத் திரும்பினார் ராமசாமி.

                                          ஆனால், இன்று காலை அவருடைய உடல்நிலை திடீரென மீண்டும் மோசமாகியது. இதையடுத்து அவரை மீண்டும்மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் தயாராகி வந்த நிலையில் பகல் சுமார் 12மணியளவில் ராமசாமியின் உயிர் பிரிந்தது.

                                          வி.கே. ராமசாமிக்கு மனைவி, 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். ரசிகர்களும், பொதுமக்களும் அஞ்சலிசெலுத்துவதற்காக ராமசாமியின் உடல் அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

                                          ராமசாமியின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

                                          ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்து வந்தார் ராமசாமி. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் நாடககம்பெனியில் சேர்ந்து நடித்தார். பின்னர் தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா ஆகியோர் நடித்த படங்களில் சிறுசிறு வேடங்களில் தலை காட்டத் தொடங்கினார்.

                                          மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த ராமசாமியை ஏ.வி.எம். நிறுவனம்தான் தன்னுடைய "நாம் இருவர்"படத்தில் அறிமுகப்படுத்தியது.

                                          நகைச்சுவை, வில்லத்தனம், குணச்சித்திரம் என பல பாணிகளில் தனக்கென தனி வழியை வகுத்துக் கொண்டுநடித்தவர் வி.கே.ஆர். "பராசக்தி" படத்தில் இவரது பூசாரி கேரக்டரும், "நாம் இருவர்" படத்தில் வயோதிகர்வேடமும் மக்களால் பெரிதும் பேசப்பட்டவை.

                                          கடந்த 60 ஆண்டுகளில் ராமசாமி மொத்தம் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான"யூனிவர்சிடி" படத்தில் கூட ராமசாமி நடித்துள்ளார். தனக்கே உரிய நகைச்சுவை பாணி மூலம் தமிழ் ரசிகர்களைவெகுவாகக் கவர்ந்த ராமசாமி, பல குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

                                          எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், டி.ஆர்.மகாலிங்கம், ரஜினிகாந்த், கமலஹாசன் முதல் இன்றையஇளம் நட்சத்திரங்களான விஜய், பிரசாந்த் வரை பல தலைமுறை நடிகர்களுடன் நடித்துப் புகழ் பெற்றவர் ராமசாமி.

                                          தமிழக அரசின் "கலைமாமணி" உள்ளிட்ட பல விருதுகளை ராமசாமி பெற்றுள்ளார். "மக்களைப் பெற்ற மகராசி","வடிவுக்கு வளைகாப்பு" உள்ளிட்ட 15 படங்களைத் தயாரிக்கவும் செய்துள்ளார் அவர். ஆனால், சமீபகாலமாகபொருளாதார ரீதியில் மிகவும் திணறி வந்தார்.

                                          நல்ல மருத்துவ வசதி பெற முடியாத நிலையில், பரிதாபமான நிலையில் ராமசாமி இறந்துள்ளது கலையுலகில்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

                                          இன்னொரு பழம் பெரும் நடிகையான பண்டரிபாயை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து அதற்குரியசெலவையும் அதிமுகவே ஏற்கும் என ஜெயலலிதா அறிவித்தார். அவர் உடல் நிலை தேறி வருகிறார்.

                                          ஆனால், வி.கே.ஆர். போன்ற மிக மூத்த கலைஞன் மருத்துவம் செய்து கொள்ளக் கூட வசதி இல்லாமல் அரசுபொது மருத்துவமனையில் சேர்ந்து உயிரிழக்கும் பரிதாப நிலை ஏற்பட்டது தமிழ் திரையுலகுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழுக்கு என்று தான் சொல்ல வேண்டும்.

                                            டிசம்பர் 12, 2002

                                          • பழம்பெரும் நடிகை சி.டி. ராஜகாந்தம் மரணம்

                                            சென்னை:

                                            பழம்பெரும் நடிகையான சி.டி. ராஜகாந்தம் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 86.

                                            எம்.ஜி.ஆருடன் "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" உள்ளிட்ட படங்கள், சிவாஜியுடன் "பாலும் பழமும்"உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் ராஜகாந்தம்.

                                            கடந் சில நாட்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் பெசன்ட் நகரில் உள்ள தன் வீட்டில்மரணமடைந்தார்.

                                              டிசம்பர் 02, 2002

                                            • பாடகர் மனோவின் தந்தை மரணம்

                                              சென்னை:

                                              பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் தந்தை ரசூல் நேற்று சென்னையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.அவருக்கு வயது 68.

                                              கடந்த சில நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த அவர் நேற்று மரணமடைந்தார்.

                                              பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு ரசூலின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று மனோ குடும்பத்தினர்தெரிவித்தனர்.

                                                நவம்பர் 24, 2002

                                              • டாக்டர் லலிதா காமேஸ்வரன் மரணம்

                                                சென்னை:

                                                எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான டாக்டர் லலிதா காமேஸ்வரன் இன்று பகல்சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 72.

                                                தமிழக அரசு திட்டக் கமிஷனின் முன்னாள் உறுப்பினரான டாக்டர் லலிதா, போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திராமருத்தவக் கல்லூரியின் துணை வேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.

                                                பிரபல தமிழறிஞரான சோமசுந்தர பாரதியின் மகளான டாக்டர் லலிதாவுக்கு கணவர், ஒரு மகன் மற்றும் ஒரு மகள்உள்ளனர்.

                                                அவருடைய கணவரான டாக்டர் காமேஸ்வரனும் மகன் டாக்டர் மோகனும் பிரபல காது, மூக்கு, தொண்டைநிபுணர்களாவர். மகள் டாக்டர் சித்ரா சங்கரன் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.

                                                சென்னை மருத்தவக் கல்லூரியின் முதல் டீனாகவும் இருந்த டாக்டர் லலிதா, கடந்த சில நாட்களாக உடல் நலம்சரியில்லாமல் இருந்தார்.

                                                இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் டாக்டர் லலிதா மரணமடைந்தார்.

                                                டாக்டர் லலிதா தமிழக மருத்துவக் கல்வித் துறையின் முதல் இயக்குநராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற டாக்டர் லலிதா, லண்டன்பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றார்.

                                                  நவம்பர் 09, 2002

                                                • அதிருப்தி தமாகா எம்.எல்.ஏ. திடீர் மரணம்

                                                  சென்னை:

                                                  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சாத்தான்குளம் தொகுதி எம்.எல்.ஏவான மணி நாடார் இன்று சென்னையில்காலமானார். அவருக்கு வயது 66.

                                                  கடந்த ஆகஸ்டு மாதம் காங்கிரஸ் கட்சியுடன் தமாகா இணைந்து விட்ட போதிலும் கிள்ளியூர் எம்.எல்.ஏவானடாக்டர் குமாரதாஸ் உள்ளிட்ட ஐந்து எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் சேர மறுத்துவிட்டனர்.

                                                  மேலும் தாங்கள் தமாகாவிலேயே தொடரப் போவதாகவும் அவர்கள் அறிவித்தனர். தமாகாவின் பெயர், கொடி,சின்னம் போன்றவை காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளின் படி தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்டிருந்தாலும்அந்த ஐந்து அதிருப்தி எம்.எல்.ஏக்களும் தமிழக சட்டசபையில் தமாகா எம்.எல்.ஏக்களாகவே கருதப்படுவார்கள்என்று சபாநாயகர் காளிமுத்து கூறிவிட்டார்.

                                                  அந்த ஐந்து எம்.எல்.ஏக்களில் ஒருவர் தான் மணி நாடார்.

                                                  சமீபத்தில் சிறுநீரகக் கோளாறு மற்றும் நீரிழிவு நோய் காரணமாக சென்னை-அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த மணி நாடார் இன்று பிற்பகல் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

                                                  அவர் இறக்கும் போது கூட டாக்டர் குமாரதாசும், மற்றொரு அதிருப்தி தமாகா எம்.எல்.ஏவான செ.கு. தமிழரசனும்மணி நாடாரின் அருகிலே தான் இருந்தனர்.

                                                  மணி நாடாருக்கு ஜானகி என்ற மனைவியும், நான்கு மகன்களும் உள்ளனர். களக்காடு ஊராட்சி ஒன்றியத்தலைவராக உள்ளார் ஜானகி.

                                                  மணி நாடாரின் உடல் சாத்தான்குளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நாளை அங்கு அவருடைய இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன.

                                                  கடந்த 1996 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் சாத்தான்குளம் தொகுதியில்போட்டியிட்டு தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றவர் மணி நாடார்.

                                                    நவம்பர் 06, 2002

                                                  • எழுத்தாளர் கு.பா. சேது அம்மாள் மரணம்

                                                    சென்னை:

                                                    பிரபல எழுத்தாளர் கு.பா.ராஜகோபாலனின் சகோதரியும், எழுத்தாளருமான கு.ப.சேது அம்மாள் சென்னையில்நேற்று மரணமடைந்தார்.

                                                    அவருக்கு வயது 94. பல்வேறு நாவல்கள், சிறுகதைகளை அவர் எழுதியுள்ளார்.

                                                    அவரது படைப்புகள் அனைத்தும் தமிழக அரசினால் சமீபத்தில்தான் நாட்டுடமையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

                                                      நவம்பர் 03, 2002

                                                    • காமராஜரின் சீடர் மரணம்

                                                      சென்னை:

                                                      காமராஜரின் தீவிர சீடரும், தமிழக ஐக்கிய ஜனதாதள துணைத் தலைவருமான டி.எஸ்.திருமால் யாதவ்வெள்ளிக்கிழமை மரணமடைந்தார்.

                                                      காமராஜரின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் திருமால்.

                                                      காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம் என பல கட்சிகளில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்திருமால் இவர்.

                                                        அக்டோபர் 30, 2002

                                                      • "நம்மவர்" இசையமைப்பாளர் மகேஷ் மரணம்

                                                        சென்னை:

                                                        கமல்ஹாசன் நடித்த "நம்மவர்" படத்திற்கு இசையமைத்த மகேஷ், புற்றுநோய் காரணமாக சென்னையில்மரணமடைந்தார்.

                                                        பெங்களூரைச் சேர்ந்த இசையமைப்பாளர் மகேஷ், மற்றொரு கமல் படமான "குருதிப்புனல்" என்ற படத்திற்கும்இசையமைத்துள்ளார்.

                                                        நீண்ட காலமாக இவருக்கு புற்றுநோய் இருந்து வந்தது. இந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு நோய் தீவிரமானது.

                                                        இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு ரமேஷ்சேர்க்கப்பட்டார்.

                                                        ஆனால் அங்கு சிகிச்சை பலன் தராமல் நேற்று அதிகாலை மகேஷ் இறந்தார்.

                                                        இசையில் நிறைய திறமை இருந்தும் புற்று நோய் காரணமாக திரைப்படங்களுக்கு இசையமைக்கால் இருந்தார்மகேஷ். ஓரிரு விளம்பரப் படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்தார்.

                                                          அக்டோபர் 28, 2002

                                                        • வாழப்பாடி ராமமூர்த்தி மாரடைப்பால் மரணம்

                                                          சென்னை:

                                                          மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடி ராமமூர்த்தி சென்னையில்மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 62.

                                                          நேற்று மாலை 3.30 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாகமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

                                                          மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.

                                                          வாழப்பாடி ராமர்த்திக்கு மனைவி, மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மனைவி சேலம் மாவட்டம்வாழப்பாடியில் வசித்து வருகிறார்.

                                                          வாழப்பாடி ராமமூர்த்தியை பார்த்து விட்டு சனிக்கிழமை தான் ஊருக்குத் திரும்பினார். அவரது மகளும்,மகன்களும் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள்.

                                                          அவரது உடல் அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள வாழப்பாடியாரின் வீட்டில் பொதுமக்கள் பார்வைக்குவைக்கப்பட்டுள்ளது. நாளை சொந்த ஊரான வாழப்பாடிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பின்னர் அங்குஎரியூட்டப்படுகிறது.

                                                            அக்டோபர் 15, 2002

                                                          • காஞ்சி சங்கராச்சாரியாரின் தாயார் மரணம்

                                                            சென்னை:

                                                            காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தாயாரான சரஸ்வதி அம்மாள் சென்னையில்மரணமடைந்தார். அவருக்கு வயது 84.

                                                            சென்னையில் வசித்து வந்த சரஸ்வதி அம்மாளுக்கு ஸ்ரீஜெயேந்திரர் தவிர, விஸ்வநாதன் மற்றும் ராமகிருஷ்ணன்என்ற இரு மகன்களும் உள்ளனர்.

                                                            அவரது இறுதிச் சடங்குகள் பெசன்ட் நகர் இடுகாட்டில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

                                                            சரஸ்வதி அம்மாளின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்தார். தனது இரங்கல் செய்தியில்,ஸ்ரீஜெயேந்திரர் போன்ற துறவியைக் கொடுத்த சரஸ்வதி அம்மாளின் மறைவு தன்னை சோகப்படுத்தியுள்ளதாகஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

                                                              செப்டம்பர் 03, 2002

                                                            • "புரட்சி பாரதம்" தலைவர் பூவை மூர்த்தி மரணம்

                                                              சென்னை:

                                                              சென்னையைச் சுற்றியுள்ள சில வட மாவட்டங்களில் தலித் மக்களிடையே ஓரளவு செல்வாக்குடன் இருக்கும்"புரட்சி பாரதம்" கட்சியின் தலைவர் பூவை. மூர்த்தி மாரடைப்பால் மரணமடைந்தார்.

                                                              சென்னையை அடுத்துள்ள வெள்ளவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பூவை மூர்த்தி. வழக்கறிஞரான இவர் "புரட்சிபாரதம்" என்ற கட்சியை நடத்தி வந்தார்.

                                                              திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தலித் மக்களிடையே ஓரளவுசெல்வாக்குடன் இருந்தவர்.

                                                              இவருக்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனி விஜயா மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார்.

                                                              ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டசபைத் தேர்தலிலும் வழக்கமாகப் போட்டியிட்டு கணிசமானவாக்குகளைப் பெறக் கூடியவர் மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

                                                              மூர்த்தியின் மறைவையடுத்து வெள்ளவேடு பகுதியில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

                                                                செப்டம்பர் 02, 2002

                                                              • கவிஞர் மீரா காலமானார்

                                                                சிவகங்கை:

                                                                கவிஞர் மீரா காலமானார்.

                                                                மீரா என்று அழைக்கப்பட்ட அவரது இயற்பெயர் மீ.ராஜேந்திரன். அவருக்கு வயது 65. சிவகங்கை ஆர்.டி.எம். கல்லூரியில்தமிழ்துறை பேராசிரியராகவும் கல்லூரியின் பொறுப்பு முதல்வராகவும் இருந்தவர் அவர்.

                                                                திராவிட இயக்கத்தில் தீவிர பற்று கொண்டவர். அண்ணாவால் வாழ்த்தப்பட்டவர். பல்வேறு கவிதை நூல்களையும் இலக்கியநூல்களையும் எழுதியவர் மீரா.

                                                                  ஆகஸ்டு 28, 2002

                                                                • காலமானார் தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தன்

                                                                  கம்பராமாயணத்தில் சிறந்த சொற்பொழிவாளரான பேராசிரியர் ஞானசம்பந்தனுக்கு வயது 86. அவருக்கு மனைவி, 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர்.

                                                                  திருச்சி மாவட்டம் அரசங்குடியைச் சேர்ந்தவர் ஞானசம்பந்தன். அவரது தந்தையும் சிறந்த தமிழறிஞர்.

                                                                  துவக்க நிலைக் கல்வியில் இயற்பியலையும், கணிதத்தையும் படித்த ஞானசம்பந்தன், மேற்படிப்பில் தமிழ் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்தார்.

                                                                  சென்னை பச்சையப்பா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவராகவும் இருந்துள்ளார்.

                                                                  இந்திய இலக்கியத்தின் புகழ்மிக்க "சாகித்திய அகாதமி" விருதைப் பெற்றுள்ள ஞானசம்பந்தன், 30 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

                                                                    ஆகஸ்டு 26, 2002

                                                                  • பாகவதரின் மகன் மரணம்

                                                                    சென்னை:

                                                                    சிறந்த தமிழறிஞரும், பக்தி சொற்பொழிவாளருமான அ.ச. ஞானசம்பந்தன் சென்னையில் மரணமடைந்தார்.

                                                                    அந்தக் கால சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகன் எம்.கே.டி. ரவீந்திரன் சென்னையில் காலமானார்.அம்பத்தூர் ராம் நகர் பகுதியில் வசித்து வந்த ரவீந்திரனுக்கு வயது 63. மாரடைப்பு காரணமாக அண்ணா நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.ரவீந்திரனுக்கு, கெளசல்யா என்ற மனைவியும், பிரமிளா என்ற மகளும், தனசேகர் என்ற மகனும் உள்ளனர்.

                                                                      ஆகஸ்டு 20, 2002

                                                                    • பழம் பெரும் நடிகை ரிஷியேந்திர மணி மரணம்

                                                                      சென்னை:

                                                                      பழம் பெரும் நடிகை ரிஷியேந்திர மணி சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 88.

                                                                      1935ம் ஆண்டுகளில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கியவர் ரிஷியேந்திர மணி. சில காலம் ஹீரோயினாகநடித்துள்ள இவர் எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி படங்களில் நிறைய நடித்துள்ளார். குறிப்பாக எம்.ஜி.ஆருக்குஅம்மாவாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

                                                                      "குலேபகாவலி", "எங்க வீட்டுப் பிள்ளை", "மாயா பஜார்", "மிஸ்ஸியம்மா" ஆகியவை இவர் நடித்துப் புகழ் பெற்றசில படங்கள்.

                                                                      நீரிழிவு நோய் காரணமாக அவதிப்பட்டு வந்தார் ரிஷியேந்திர மணி. இதையடுத்து அவரை மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார் ரிஷியேந்திர மணி.

                                                                      இவரது மகள் பவானியும் ஒரு நடிகைதான். நடிகர் சிவகுமார் நடித்த "பத்ரகாளி" என்ற படத்தில் அவர்ஹீரோயினாக நடித்துள்ளார்.

                                                                        ஜூன் 15, 2002

                                                                      • மறைந்தார் சொல் விளங்கும் பெருமாள்

                                                                        மதுரை:

                                                                        பிரபல இலக்கியப் பேச்சாளர் சொல் விளங்கும் பெருமாள் மதுரையில் இன்று (சனிக்கிழமை) காலமானார்.

                                                                        மதுரையைச் சேர்ந்தவர் சொல் விளங்கும் பெருமாள். மிகச் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர்.

                                                                        இவரது மனைவி சக்தி பெருமாளும் சிறப்பான பேச்சாளர்.

                                                                        மதுரை மாநகராட்சி கவுன்சிலராகவும் இவர் இருந்துள்ளார்.

                                                                        சொல்விளங்கும் பெருமாள் மதுரையில் சனிக்கிழமை காலை இறந்தார்.

                                                                        மே 02, 2002

                                                                      • கனகாவின் தாயார் நடிகை தேவிகா மரணம்

                                                                        சென்னை:

                                                                        பழம்பெரும் தென்னிந்திய மொழி நடிகை தேவிகா மாரடைப்பால் சென்னையில் நேற்று (மே 1, 2002)மரணமடைந்தார். அவருக்கு வயது 58.

                                                                        கடந்த ஏப்ரல் 26ம் தேதியிலிருந்தே நெஞ்சுவலியால் துடித்து வந்த தேவிகாவுக்கு நேற்று நள்ளிரவு திடீரெனமாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

                                                                        ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் தேவிகா மரணமடைந்தார்.

                                                                        "முதலாளி" என்ற படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தேவிகா, "நெஞ்சில் ஓர் ஆலயம்", "ஆண்டவன்கட்டளை", "ஆனந்த ஜோதி" உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

                                                                        1960களில் தமிழ் சினிமாவின்முன்னணி கதாநாயகியாக வலம் வந்த தேவிகா, அப்போதைய திரையுலகஜாம்பவான்களாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன் ஆகிய நடிகர்களுடன்இணைந்து நடித்தவர்.

                                                                        தமிழ் தவிர தாய் மொழியான தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் 150 படங்களில் தேவிகா நடித்துள்ளார்.

                                                                        தேவிகாவின் மகள் நடிகை கனகா என்பது குறிப்பிடத்தக்கது. தேவிகாவின் இறுதிச் சடங்குகள் இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது.

                                                                        பிப்ரவரி 12, 2002

                                                                      • மதிமுக துணைப் பொதுச் செயலாளர் உடல் அடக்கம்

                                                                        சென்னை:

                                                                        மரணமடைந்த மதிமுக துணைப் பொதுச் செயலாளர் குடியரசுவின் உடல் இன்று (புதன்கிழமை) அடக்கம்செய்யப்பட்டது.

                                                                        72 வயதான குடியரசு, சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக போரூர் ராமச்சந்திராமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை சிகிச்சை பலனளிக்காமல்குடியரசு மரணமடைந்தார்.

                                                                        இவருடைய உடல் அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்து. திமுக தலைவர்கருணாநிதி அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்தார். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

                                                                        ஆண்டிப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, குடியரசுவின் மறைவுசெய்தி கேட்டவுடன் சென்னை திரும்பினார். இன்று அசோக் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலிசெலுத்தினார்.

                                                                        பின்னர் குடியரசுவின் ஊர்வலம் அசோக் நகரிலிருந்து புறப்பட்டது. இந்த ஊர்வலத்தில் வைகோ, மத்தியஅமைச்சர்கள் செஞ்சி.ராமச்சந்திரன், மு. கண்ணப்பன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

                                                                        அவரது உடல் வடபழனியில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. பிறகு வைகோ தலைமையில் இரங்கல்கூட்டம் நடத்தப்பட்டது.

                                                                        பிப்ரவரி 12, 2002

                                                                      • மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மரணம்

                                                                        சென்னை:

                                                                        மதிமுக துணைப் பொதுச் செயலாளரான குடியரசு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மரணமடைந்தார். அவருக்குவயது 72.

                                                                        சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் குடியரசு சிகிச்சை பெற்று வந்தார்.

                                                                        இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் குடியரசு மரணமடைந்தார்.

                                                                        சிறந்த கவிஞராகவும் விளங்கிய குடியரசுவின் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தன்னுடையஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

                                                                        திமுக தலைவர் கருணாநிதியும் கவிஞர் குடியரசுவின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபவங்களைத் தெரிவித்துள்ளார்.

                                                                      • ஜனவரி 22, 2002

                                                                        சொக்கலிங்க பாகவதர் மரணம்

                                                                        சென்னை:

                                                                        நடிகர் சொக்கலிங்க பாகவதர் நேற்று (திங்கள்கிழமை) காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 92.

                                                                        தமிழ்த் திரைப்படங்களில் அப்பா மற்றும் தாத்தா வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் சொக்கலிங்க பாகவதர்.

                                                                        வீடு, இந்தியன், சந்தியா ராகம் உள்பட பல படங்களில் சொக்கலிங்க பாகவதர் நடித்துள்ளார்.

                                                                        சமீபத்தில் சொக்கலிங்க பாகவதருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை அவர்மரணமடைந்தார்.

                                                                        அவரது இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது. சிதைக்கு அவருடைய மகன் காந்தி தீ மூட்டுகிறார்.

                                                                      • தட்ஸ்கிரிக்கெட்.காம் புள்ளிவிவர நிபுணர் காலமானார்

                                                                        பெங்களூர்:

                                                                        தட்ஸ்கிரிக்கெட்.காம் இணையதளத்திற்காக கிரிக்கெட் புள்ளிவிவர நிபுணராகப் பணியாற்றி வந்த சி.வி.நாகேந்திரநாத் இன்று (சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 50.

                                                                        இவர் அகில இந்திய கிரிக்கெட் ஸ்கோர் வாரிய உறுப்பினராகவும் இருந்தவர்.

                                                                        சிறந்த கிரிக்கெட் அம்பயரான இவர் கர்நாடகா கிரிக்கெட் அம்பயர் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார். 1996ல்நாகப்பூர், கான்பூர், டெல்லியில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு ஸ்கோரராகவும், புள்ளி விவரம்சேகரிப்பவராகவும் பணியாற்றினார்.

                                                                        கடந்த புதன்கிழமையன்று உடல்நலம் சரியில்லாமல் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், நினைவுத் திரும்பாமலேயே இன்று காலை காலமானார்.

                                                                      • கடந்த ஆண்டில் உயிர் நீத்த கலையுலக சகாப்தங்கள்

                                                                        நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

                                                                        திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்.

                                                                        நடிகர் ஜெய்கணேஷ்.

                                                                        வசன கர்த்தா அறந்தை நாராயணன்.

                                                                        இயக்குநர் திருப்பதி சாமி.

                                                                        இயக்குநர் மணி வாசகம்.

                                                                        தமிழ்த் திரையுலகின் முதல் கவர்ச்சி நடிகை தவமணி தேவி.

                                                                        டிசம்பர் 17, 2001

                                                                      • காலமானார் அப்துல் லத்தீப்

                                                                        சென்னை:

                                                                        இந்திய தேசிய லீக் தலைவர் எம். அப்துல் லத்தீப் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மாரடைப்பினால்மரணமடைந்தார். அவருக்கு வயது 65.

                                                                        கடந்த நான்கு ஆண்டுகளாகவே நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்தால் அப்துல் லத்தீப். இந்நிலையில் நேற்றுகாலை அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

                                                                        உடனே அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது.

                                                                        இந்நிலையில் இன்று அதிகாலை 05.30 மணிக்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். அவருடையஉடல் உடனடியாக அவருடைய சொந்த ஊரான வாணியம்பாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

                                                                        வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏவான அப்துல் லத்தீப், நான்கு முறை தமிழக சட்டசபைக்குத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

                                                                        ரம்ஜான் தினமான இன்று (டிச.17) அப்துல் லத்தீப் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

                                                                        டிசம்பர் 06, 2001

                                                                      • முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம் மரணம்

                                                                        சென்னை:

                                                                        தமிழக முன்னாள் அமைச்சரும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளருமான எஸ்.டி.சோமசுந்தரம் (எஸ்.டி.எஸ்.) இன்று (வியாழக்கிழமை) காலை காலமானார். அவருக்கு வயது 78.

                                                                        கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த எஸ்.டி.எஸ். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

                                                                        இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு அவர் காலமானார். அவருக்கு மனைவியும் இரு மகன்களும்உள்ளனர்.

                                                                        அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.இ. படித்த எஸ்.டி.எஸ்., கடந்த 1967ல் தஞ்சாவூர் மக்களவைத் தேர்தலில்முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமனைத் தோற்கடித்து திமுக சார்பில் எம்.பி. ஆனார்.

                                                                        பின்னர் அதிமுகவில் சேர்ந்த எஸ்.டி.எஸ்., எம்ஜிஆருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1984ல் நமதுகழகம் என்ற கட்சியை உருவாக்கினார். பின்னர் மீண்டும் அதிமுகவிலேயே இணைந்தார்.

                                                                        தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.டி.எஸ்., எம்ஜிஆர் ஆட்சிக் காலத்திலும், ஜெயலலிதாஆட்சிக் காலத்திலும் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

                                                                        முந்தைய ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், கார் படியிலும் வேன் படியிலும் நின்று தொங்கிக் கொண்டே பயணம்செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் எஸ்.டி.எஸ்.

                                                                        பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் முன்னேற்றக் கழகம் என்றகட்சியை எஸ்.டி.எஸ். தொடங்கி நடத்தி வந்தார்.

                                                                        அவருடைய உடல் தற்போது சென்னை-ஈக்காடுதாங்கலில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்று எஸ்.டி.எஸ்சின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

                                                                        அக்டோபர் 27, 2001

                                                                      • காங். மூத்த தலைவர் மரகதம் சந்திரசேகர் மரணம்

                                                                        சென்னை:

                                                                        காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மரகதம் சந்திரசேகர் சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.

                                                                        85 வயதான மரககதம் சந்திரசேகர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காது வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

                                                                        மரகதம் சந்திரசேகர் சென்னை அருகே உள்ள பெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.மயிலாடுதுறை எம்.பியாக ஒருமுறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

                                                                        காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மரகதம் சந்திரசேகர், கட்சியின் பொதுச் செயலாளராகவும், பொருளாளராகவுமஇருந்துள்ளார்.

                                                                        இந்திரா காந்திக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர். அவருக்குப் பிறகு ராஜீவ் காந்தியின் அன்பயும் பெற்றிருந்தார்.

                                                                        சமீபகாலமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தார்.

                                                                        செப்டம்பர் 14, 2001

                                                                      • பழம்பெரும் நடிகர் "விகடம்" கிருஷ்ணமூர்த்தி மரணம்

                                                                        சென்னை:

                                                                        பழம்பெரும் நடிகர் "விகடம்" கிருஷ்ணமூர்த்தி சென்னையில் வியாழக்கிழமை காலமானார்.

                                                                        அக்காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கதாநாயகனாக நடித்தவர் "விகடம்" கிருஷ்ணமூர்த்தி.

                                                                        அவருக்கு வயது 89. நோய்வாய்ப்பட்டிருந்த அவர், மாரடைப்பு காரணமாக சென்னையில் வியாழக்கிழமைஇறந்தார்.

                                                                        கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

                                                                      • செப்டம்பர் 07, 2001

                                                                      • தமிழக மனித உரிமை கமிஷன் தலைவர் மரணம்

                                                                        சென்னை:

                                                                        தமிழக மனித உரிமை கமிஷனின் தலைவரான நீதிபதி நயினார் சுந்தரம் இன்று (வெள்ளிக்கிழமை)காலைமரணமடைந்தார். அவருக்கு வயது 69.

                                                                        நீதிபதி நயினார் சுந்தரம் கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால்,சிகிச்சைக்காக சென்னையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டிருந்தார்.

                                                                        இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அவர் மருத்துவமனையில் மரணமடைந்தார். இந்த தகவலை அவரதுஉறவினர்கள் தெரிவித்தனர்.

                                                                        குஜராத் உயர்நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் நீதிபதி நயினார் சுந்தரம். இவர்சிறிது காலம் சென்னை உயர் நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

                                                                        நீதிபதி நயினார் சுந்தரம் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வந்தார்.

                                                                      • ஆகஸ்டு 20, 2001

                                                                      • காமராஜரின் உதவியாளர் மரணம்

                                                                        சென்னை:

                                                                        பெருந்தலைவர் காமராஜரிடம் உதவியாளராக பணிபுரிந்த வெங்கட்ராமன் ஞாயிற்றுக்கிழமை சென்னையில்காலமானார். அவருக்கு வயது 83.

                                                                        இதுகுறித்து அறிந்ததும், அவருடன் நீண்ட காலம் பணியாற்றியவரான தொண்டர் காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன், வெங்கட்ராமனின் வீட்டுக்குச் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

                                                                        காமராஜரின் உதவியாளராக மட்டுமில்லாமல், காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக பல்வேறு சேவைகளைச் செய்துவந்தவர் வெங்கட்ராமன்.

                                                                        சமீபத்தில் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, அவரது மகனும் சென்னை நகர மேயருமான மு.க. ஸ்டாலின்வீட்டில் போலீஸார் அத்துமீறி விசாரணை நடத்தியதாககக் கூறப்பட்ட மனித உரிமை மீறல் வழக்கை நயினார்சுந்தரம்தான் விசாரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                                                                      • ஜுலை 06, 2001

                                                                      • கார் விபத்தில் பிரேம்குமார் வாண்டையார் மரணம்

                                                                        சென்னை:

                                                                        விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர்களில்ஒருவரான பிரேம்குமார் வாண்டையார் வெள்ளிக்கிழமை காலை மரணமடைந்தார்.

                                                                        அவருக்கு வயது 46.

                                                                        சிதம்பரத்தைச் சேர்ந்த பிரேம்குமார் வாண்டையார் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர்களில் ஒருவர்.

                                                                        இவர் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காகக் கடந்த வாரம் தனது காரில் சிதம்பரத்திலிருந்து புறப்பட்டார்.அவரது கார் திருமண வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது மோதிவிபத்துக்குள்ளானது.

                                                                        இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரேம்குமார் வாண்டையார் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

                                                                        அங்கு கைதேர்ந்த டாக்டர்கள் குழு அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தது. ஆனாலும், சிகிச்சை பலனின்றிபிரேம்குமார் வாண்டையார் வெள்ளிக்கிழமை காலை மரணமடைந்தார்.

                                                                      • ஜூன் 26, 2001

                                                                      • தொழிற்சங்க தலைவர் ராமானுஜம் மறைந்தார்

                                                                        சென்னை:

                                                                        பழம்பெரும் தொழிற்சங்கவாதியும், கோவா, ஒரிசா மாநிலங்களின் முன்னாள் கவர்னருமான ஜி.ராஜாமனுஜன் சென்னையில்செவ்வாய்க்கிழமை காலமானார்.

                                                                        84 வயதாகும் ராமானுஜம் செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது இல்லத்தில் காலமானார். சுதந்திரப் போராட்ட காலத்தில் பலபோராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார்.

                                                                        தொழிற்சங்கத்தில் ஈடுபட்டு தொழிலாளர் நலனுக்காகப் போராடியவர். காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான இந்தியதேசிய தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பில் பல காலம் தலைவராக இருந்தவர்.

                                                                        ராமானுஜம் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா, தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி உள்ளிட்ட பலர்இரங்கல் தெரிவித்துள்ளனர்.

                                                                      • ஜூன் 21, 2001

                                                                      • திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் மறைந்தார்

                                                                        சென்னை:

                                                                        திரை இசைத் திலகம் என்று போற்றப்பட்ட பழம் பெரும் திரைப்பட இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் (83)சென்னையில் வியாழக்கிழமை காலமானார்.

                                                                        வியாழக்கிழமை அதிகாலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

                                                                        மெல்லிசை மன்னர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்திக்கு முன்பே பிரபலமாக இருந்தவர் மகாதேவன்.திரை இசையில் கர்நாடக சங்கீதம் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய காலத்தில் கர்நாடக இசையை பாமரர்களும்கேட்கும் விதத்தில் இசையமைத்தவர் கே.வி.மகாதேவன்.

                                                                        திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், கந்தன் கருணை, தாய் சொல்லைத் தட்டாதே, படிக்காத மேதை,வசந்த மாளிகை என பல புகழ் பெற்றத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

                                                                        கந்தன் கருணை மற்றும் சங்கராபரணம் ஆகிய படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் தேசிய விருதைப்பெற்றுள்ளார்.

                                                                        தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்குஇசையமைத்துள்ளார் கே.வி.மகாதேவன்.

                                                                      • மார்ச் 01, 2001

                                                                      • பக்தவச்சலம் மகன் மரணம்

                                                                        சென்னை:

                                                                        முன்னாள் தமிழக முதல்வர் பக்தவச்சலத்தின் மகன் சித்தரஞ்சன் (70) சென்னையில் வியாழக்கிழமை இறந்தார்.

                                                                        சிறிது காலமாக அவர் நோய் வாய்ப்பட்டு இருந்தார். அவரது உடலுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார்மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

                                                                      • தினமணி முன்னாள் ஆசிரியர் சிவராமன் மரணம்

                                                                        சென்னை:

                                                                        பிரபல தமிழ் பத்திரிக்கை தினமணியின் முன்னாள் ஆசிரியர் ஏ. என்.சிவராமன் மாரடைப்பு காரணமாக வியாழக்கிழமை காலை மரணமடைந்தார்.

                                                                        அவருக்கு வயது 96. சிவராமனுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இவர் தினமணி பத்திரிக்கையின் ஆசிரியராக சுமார் 50 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.இவரைப்போல் 50 ஆண்டு காலம் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராக தமிழகத்தில் யாரும் இல்லை எனலாம். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த இவருக்குபுதன்கிழமை இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

                                                                        இதையடுத்து, இவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் வென்டிலேட்டரில் புதன்கிழமை இரவு முழுவதும் வைக்கப்பட்டிருந்தார்.ஆனால் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை 8.45 மணிக்கு மரணமடைந்தார்.

                                                                        சிவராமன் பல துறைகள் குறித்து புத்தகங்கள் எழுதியுள்ளார். 1987 ல் தினமணி பத்திரிக்கையிலிருந்து ஓய்வு பெற்ற பின் வேதபாடங்கள் கற்கத்தொடங்கினார். அவர் திருக்குரானால் அதிகம் ஈர்க்கப்பட்டவர். இவர் சுதந்திர போராட்ட வீரர்.

                                                                        முதல்வர் இரங்கல்:

                                                                        தினமணி முன்னாள் ஆசிரியர் சிவராமன் மரணமடைந்ததற்கு, முதல்வர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியில், தமிழ்பத்திரிக்கை உலகில் பல சாதனைகளை நிகழ்த்தியவர் சிவராமன். குறிப்பாக தினமணி பத்திரிக்கை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியவர் என்று கூறியுள்ளார்முதல்வர்.

                                                                        யு.என்.ஐ.

                                                                      • பிப்ரவரி 10, 2001

                                                                      • மறைந்தார் சாவி

                                                                        சென்னை:

                                                                        பிரபல பத்திரிகையாசியரும், எழுத்தாளருமான சாவி சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.

                                                                        கடந்த மாதம், சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசியசாவிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

                                                                        அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர் சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை வெள்ளிக்கிழமை மோசமடைந்தது. இரவு 8 மணிவாக்கில் அவர் இறந்தார்.

                                                                        சாவிக்கு வயது 85. இருந்தும் கூட சுறுசுறுப்பாக தனது பத்திரிக்கைப் பணியையும், எழுத்துப் பணியையும்தொடர்ந்து கவனித்து வந்தார். முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர்.

                                                                        வாஷிங்டனில் திருமணம் என்ற பிரபலமான நாவலை எழுதியவர் சாவி. தமிழ்ப் பத்திரிகையுலகிற்கு அவரதுசேவை மகத்தானது. நல்ல, பல செய்தியாளர்களை, ஆசிரியர்களை உருவாக்கியவர்.

                                                                        சாவியின் இறுதிச் சடங்குகள் சென்னை பெசன்ட் நகரிலுள்ள மின்சார மயானத்தில் சனிக்கிழமை பிற்பகல்நடைபெறும்.

                                                                      • பிப்ரவரி 09, 2001

                                                                      • எழுத்தாளர் பகீரதன் மறைந்தார்

                                                                        பிரபல எழுத்தாளர் பகீரதன் சென்னையில் புதன்கிழமை காலமானார்.

                                                                        தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரைச் சேர்ந்த பகீரதனுக்கு வயது 81. கல்கிபத்திரிகையில் தனது எழுத்துலக பணியைத் தொடங்கியவர். பல ஆன்மீககதைகள்,தொடர்களை எழுதியுள்ளார்.

                                                                        பல்வேறு ஆன்மீக நூல்களின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அவருக்கு மகன், 2மகள்கள் உள்ளனர்.

                                                                        ஜனவரி 20, 2001

                                                                      • மயிலாடுதுறை எம்.எல்.ஏ. மரணம்

                                                                        தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகரும், மயிலாடுதுறை எம்.எல்.ஏ.வுமான அபுல் ஹசன் வெள்ளிக்கிழமை மரணமடைந்தார்.

                                                                        அபுல் ஹனுக்கு வயது 72. இவருடைய உடலில் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதால் அதற்கான பரிசோதனை செய்ய கடந்த 17 ம் தேதி இருதயஅறுவை சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அபுல் ஹசனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்குஅவர் உயிர் பிரிந்தது.

                                                                        தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் மருத்துவமனைக்குச் சென்று அபுல் ஹசன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

                                                                        எம்.எல்.ஏ. அபுல் ஹசனின் உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடல்அடக்கம் சனிக்கிழமை மாலை அதிராம்பட்டினம் மேலத்தெரு ஜூம்மா பள்ளிவாசலில் நடைபெறுகிறது.

                                                                        நவம்பர் 07, 2000

                                                                      • பாரத ரத்னா சி.எஸ். மறைந்தார்

                                                                        பாரத ரத்னா விருது பெற்றவரும், முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மகாராஷ்டிர கவர்னருமான சி. சுப்ரமணியம் சென்னையில் செவ்வாய் கிழமை காலமானார். அவருக்கு வயது 90.

                                                                        சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வந்த அவர் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்தது.

                                                                        சி.எஸ் என்று எல்லோராலும் அழைக்கப்படும் சி.சுப்ரமணியம் கடதந்த 1910-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி பொள்ளாச்சியில் பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியலில் பட்டப்படிப்பையும், தொடர்ந்து சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார்.

                                                                        காந்தியக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட அவர் காங்கிரசில் இணைந்தார். 1936 ம் ஆண்டு கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவராக தன் அரசியல் வாழ்க்கையை அவர் தொடங்கினார். பின்னர் தனது நேர்மையான அரசியலாலும், ஆற்றலாலும் படிப்படியாக உயர்ந்தார். நாடு முழுவதும் அறிந்த தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.

                                                                        1946-51-ம் ஆண்டு அமைக்கப்பட்ட அரசியல் சட்ட நிர்ணய சபையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விடுதலைக்குப் பின்னர் ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைந்த காங்கிரஸ் அமைச்சரவையில் விவசாய அமைச்சராக சி.எஸ் பொறுப்பேற்றார். பசுமைப் புரட்சி என்ற புரட்சிகரத் திட்டத்தை கொண்டு வந்து நாடு விவசாய வளம் பெற வழிவகை செய்தார்.

                                                                        தமிழகத்தில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தொழில் துறை அமைச்சராக பணியாற்றி பல தொழில் திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். 1979-80ம் ஆண்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார். 1990-ம் ஆண்டு முதல் 93-ம் ஆண்டு வரை மகாராஷ்டிர மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அப்போது மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார்.

                                                                        பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்னை வந்தார். அதன் பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கி பொதுநலப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். பொது நிகழ்ச்சிகள் அனைத்திலும ஊழல் ஒழிப்பு குறித்து தவறாமல் குறிப்பிட்டு வந்தார்.

                                                                        தமிழகத்தில் தி.மு.க.- த.மா.கா. கூட்டணி ஏற்படுவதற்கு பாலமாக இருந்தார். ஜெயலலிதாவையும், அவரது ஊழலையும் கடுமையாக எதிர்த்து வந்த சி.எஸ்., அதற்காக தி.மு.க., - த.மா.கா. கூட்டணி தொடர வேண்டும் என்று பகிரங்கமாக பேசி வந்தார். அவர் கடைசி வரையில் தமிழக காங்கிரஸ் டிரஸ்ட் உறுப்பினராக இருந்து வந்தார்.

                                                                        தமிழகத்தில் கல்வித்துறைக்கு சி.சுப்ரமணியம் ஆற்றியத் தொண்டுகள் பல. இவர் அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக்கல்வி கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

                                                                        மதிய உணவுத் திட்டம், தமிழ் மொழி மூலம் பயிற்றுவித்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்காக அதிக முயற்சிகள் எடுத்தார்.

                                                                        அரசியல் மட்டுமல்லாது வேறு பல துறைகளிலும் விருப்பம் கொண்டவர் சி.எஸ். 1990ம் ஆண்டு முதல் பாரதீய வித்யா பவன் தலைவராக இருந்தார். மெக்ஸிகோவிலிருந்து செயல்படும் கோதுமை மற்றும் மக்காச் சோள ஆய்வுக் கழகத்தின் கவர்னராக இருந்துள்ளார்.

                                                                        ஐ.நா. சபையின் திட்ட அறிக்கையைத் தயார் செய்வதற்காக ஒருமுறை அவரை ஐ.நா. பொதுச் செயலாளர் அழைத்திருந்தார்.

                                                                        பல்வேறு புத்தகங்களையும் சி.எஸ்.எழுதியுள்ளார். பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

                                                                        முதல்வர் இரங்கல்:

                                                                        சிதம்பரம் சுப்ரமணியம் என்ற முழுப் பெயரை கொண்ட சி.எஸ். மறைவு செய்தி கேட்டு தமிழக முதல்வர் கருணாநிதி, த.மா.கா. தலைவர் மூப்பனார் மற்றும் பல தலைவர்கள் அவரது இல்லத்திற்கு சென்று சி.எஸ்.சுப்ரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

                                                                      • அக்டோபர் 27, 2000

                                                                      • நாதஸ்வரக் கலைஞர் எம்.பி.என்.சேதுராமன்

                                                                        பிரபல நாதஸ்வர கலைஞரும், கலைமாமணி விருது பெற்றவருமான எம்.பி.என்.சேதுராமன் (67) மதுரையில், வெள்ளிக்கிழமை மரணமடைந்தார்.

                                                                        பிரபல நாதஸ்வரக் கலைஞரான எம்.பி.என்.பொன்னுச்சாமியின் சகோதரர் சேதுராமன். எம்.பி.என். சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட இருவரும், தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் கூட தங்களது நாதஸ்ரவத் திறமையால் அறியப்பட்டவர்கள.

                                                                        ஒரு மாதத்திற்கு முன்பு சேதுராமனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

                                                                        சிகிச்சை பலனளிக்காது வெள்ளிக்கிழமை காலை அவர் மரணமடைந்தார். சேதுராமனுக்கு மனைவி, ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.

                                                                        சிங்கப்பூர் உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு சேதுராமன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

                                                                      • அக்டோபர் 25, 2000

                                                                      • சீதாராம் கேசரி

                                                                        காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்திய அரசியலில் மறக்க முடியாதவருமான சீதாராம் கேசரி செவ்வாய்க்கிழமை மரணமடைந்தார்.

                                                                        84 வயதாகும் சீதாராம் கேசரி நீண்ட நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் டெல்லி அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

                                                                        கேசரிக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது மனைவி முன்பே மரணமடைந்து விட்டார். கால் முறிவு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கேசரி அக்டோபர் 12-ம் தேதி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

                                                                        ஆறு நாட்கள் கழித்து மாரடைப்பு ஏற்பட்டதால், அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே அவர் இருந்தார்.

                                                                        காங்கிரஸ் கட்சியின் தலைவராக இவர் இருந்தபோது, பல அரசியல் சூறாவளியை இந்திய அரசியல் சந்தித்தது. இந்திரா காந்தியால் அரசியலுக்கு வந்தவர் கேசரி. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

                                                                        1976-ம் ஆண்டு பீகார் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தார். அதன் பிறகு அவருக்கு தோல்வியே கிடைத்ததில்லை. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அவர் உயர்ந்தபோது, கட்சியின் பெயர் படுமோசமான நிலையில் இருந்தது.

                                                                        16 ஆண்டுகள் கட்சியின் பொருளாளராக இருந்த கேசரி, 1996-ம் ஆண்டு கட்சித் தலைவரானார். பின்னர் நரசிம்மராவை லோக்சபா காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கினார். கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.

                                                                        தொண்டர்களின் ஆதரவு குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவே கேசரிக்கு இருந்தது. ஒரே ஒரு முறை மட்டுமே அவர் லோக்சபா தேர்தலில் (1971, கத்தியார் தொகுதி) வெற்றி பெற்றார். அதன் பிறகு பலமுறை ராஜ்சயபா எம்.பி.யாக இருந்துள்ளார்.

                                                                        1997-ம் ஆண்டு பிரதமர் பதவியைப் பிடிப்பதற்காக கடுமையாக முயன்றார்.ஆனால் அதற்கு ஐக்கிய முன்னணியும், காங்கிரஸ் கட்சியும் ஒத்துழைப்பு தராததால் அவரது ஆசை நிராசையானது.

                                                                      • செப்டம்பர்24, 2000

                                                                      • எழுத்தாளர் ரகமி

                                                                        பிரபல எழுத்தாளர் ரகமி என்ற ரங்கசாமி சனிக்கிழமை சென்னையில் காலமானார்.

                                                                        ரகமிக்கு வயது 70. அண்ணாசாலையில், உள்ள ஒரு தியேட்டரில் பாரதி படம்பார்ப்பதற்காக நண்பர் ஒருவருடன் சென்றிருந்தார். மதியக் காட்சி துவங்குவதற்கு முன்நண்பரிடம் சிறிது உடல்நிலை சரியில்லை என்று கூறிய சில நிமிடங்களில் இறந்தார்.

                                                                        திருவல்லிக்கேணியில் உள்ளஅவரது வீட்டிற்கு சடலம் கொண்டு வரப்பட்டது.ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்குகள் நடக்கின்றன.

                                                                        மறைந்த எழுத்தாளர் ரகமி முன்பு சுதேசமித்திரன் பத்திரிகையில் பணியாற்றியவர்.பாரதி, வாஞ்சிநாதன் பற்றி பல நூல்கள் எழுதியுள்ளார். சுதந்திரப் போராட்ட வரலாறுதொடர்பான கட்டுரைகள் எழுதியவர்.

                                                                        கடந்த சில ஆண்டுகளாக இருதய நோய் காரணமாக சிரமப்பட்டு வந்தார் ரகமி.இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவி மட்டும் இருக்கிறார்.

                                                                      • செப்டம்பர் 06, 2000

                                                                      • விஸ்வநாதன் செட்டியார்

                                                                        தேவகோட்டை கண்ணாடியார் வீடு அ.சி.தெ.தெ. விஸ்வநாதன் செட்டியார் கடந்த 5ம் தேதி காலமானார்.

                                                                        அவருக்கு வயது 85. தேவகோட்டையில் அவரது இல்லத்திலேயே அவர் இறந்தார்.

                                                                        அவருக்கு மனைவி, 4 மகள்கள் உள்ளனர்.

                                                                      • ஆகஸ்ட் 23, 2000

                                                                      • ரங்கராஜன் குமாரமங்கலம்

                                                                        மத்திய மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 48.

                                                                        மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் ரத்தப் புற்றுநோய் காரணமாக டெல்லி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

                                                                        கடந்த 12 ம் தேதி டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

                                                                        அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திங்கள்கிழமை அமைச்சருக்கு ரத்த ஓட்டத்தில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டதாகடாக்டர்கள் தெரிவித்தனர்.

                                                                        அதற்குப் பின் செவ்வாய்க்கிழமை மாலை அவருக்கு சீரான ரத்த ஓட்டம் இல்லை. நினைவு திரும்பாத நிலையில் உயிர்காக்கும் கருவிகளின் துணையோடுஅமைச்சர் ரங்கராஜன் உயிருக்குப் போராடி வந்தார்.

                                                                        டாக்டர்கள் குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. இதற்கிடையே நினைவு திரும்பாமலேயே அமைச்சர் ரங்கராஜன் புதன்கிழமை அதிகாலை4.30 மணிக்கு மரணமடைந்தார்.

                                                                      • ஆகஸ்ட் 18, 2000

                                                                      • இசைக் கலைஞர் எஸ். கோபால கிருஷ்ணன்

                                                                        தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர் வித்வான் எஸ். கோபால கிருஷ்ணன் (வயது 82) டெல்லியில் காலமானார்.

                                                                        டெல்லி அகில இந்திய வானொலியில் இசை அமைப்பாளராக பணியாற்றியவர். பண்டிட் ரவி சங்கர், டி.கே. ஜெயராம அய்யர்ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்துள்ளார்.

                                                                        காலமான கோபால கிருஷ்ணனுக்கு ஒரு மகன் உள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X