For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழகு மெரீனா திட்டம்: ஜெ. நாளை தொடங்கி வைக்கிறார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்று பெயர் பெற்ற மெரீனா கடற்கரையை அழகுபடுத்தும்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறார்.

சமீபத்தில் கடற்கரையில் இருந்த சீரணி அரங்கம், புகாரி ஹோட்டல், நீச்சல் குளம் உள்ளிட்ட பல கட்டடங்களைஅரசு இடித்துத் தள்ளியது. கடந்த ஆண்டு கண்ணகி சிலையையும் அகற்றியது.

மேலும் மெரீனாவில் பொதுக் கூட்டம், மதக் கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கடற்கரையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றும் நடவடிக்கை தொடங்கவுள்ளது. இதற்காகஜெர்மனியிலிருந்து ரூ. 36 லட்சம் செலவில் நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரம் மூலம் மணிக்கு 20,000 சதுர மீட்டர் மணற் பரப்பை சுத்தப்படுத்த முடியுமாம் மண்ணுக்குள்புதைந்து கிடக்கும் குப்பைகளையும் இந்த இயந்திரம் வெளிக் கொண்டு வந்து நீக்கி விடும்.

துப்புறவுப் பணி தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை நடைபெறவுள்ளது. நாளை பிற்பகல் 12 மணியளவில்முதல்வர் ஜெயலலிதா இந்த துப்புறப்படுத்தும் பணியை தொடங்கி வைக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X