For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொடாவுக்கு எதிராக டிசம்பர் 1ல் திமுக சிறை நிரப்பும் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம்:

பொடா சட்டத்தை வாபஸ் பெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்தியும் மாநில அரசுக்கு எதிராகவும் டிசம்பர் 1 ம்தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்த திமுக விழுப்புரம் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட திமுக மாநாட்டின் நிறைவு நாளன்று உரையாற்றிய கருணாநிதி மாநாட்டுத் தீர்மானங்களைவிளக்கிப் பேசினார். அதன் விவரம்:

* நாட்டுக்கே சோறிட்ட தஞ்சை கழனிகள் வறண்டு கிடக்கின்றன. இந்த விஷயத்தில் மத்திய அரசு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் தலைமையில் உள்ள காவிரி ஆணையம் தேவைப்படும் போதெல்லாம்கூடி, உரிய முடிவெடுத்து தமிழக விவசாயிகளை வாழ வைக்க வேண்டும். இதில் அசட்டை கூடாது என இந்தமாநாடு தீர்மானம் நிறைவேற்றுகிறது.

* தமிழை செம்மொழியாக அறிவிக்காமல் இருக்கும் மத்திய அரசின் மெத்தனப் போக்கு சரியல்ல. இந்த விஷயம்தமிழர்களின் உணர்வுப்பூர்வமான விவகாரம். இதில் உடனடியாக உரிய அக்கறை காட்ட வேண்டும் என மத்தியஅரசை மாநாடு கேட்டுக் கொள்கிறது.

* பொடா சட்டம் தொடர்பாக கொடுக்கப்பட்ட உறுதி மொழியை மீறி விட்டது வாஜ்பாய் அரசு. பொடா சட்டம்கடுமையாக தவறாக பயன்படுத்தப்படுகிறது. தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று தெரிந்தவுடனேயே அதைவாபஸ் பெற்றிருக்க வேண்டிய மத்திய அரசு தொடர்ந்து அமைதியாக இருந்து வருகிறது. இதை கடுமையாககண்டிக்கிறோம். அச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையிலிருக்கும் வைகோ,பழ.நெடுமாறன் மற்றும் நக்கீரன் கோபால் உள்ளிட்ட அனைவரையும் உடனே அதிமுக அரசு விடுதலை செய்யவேண்டும்.

* அயோத்தியில் நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை எந்தவித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது. மீறிஏதாவது நடந்தால் நாட்டின் ஒருமைப்பாட்டையே அது சீர்குலைத்து விடும். அயோத்தியில் கோவில்கட்டுவதற்காக சட்டத் திருத்தம் கொண்டு வந்தால் அது கடுமையாக எதிர்க்கப்படும்.

* அரசுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை உடனடியாக மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

* அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் உரிமைகளைப் பறிக்கும் எஸ்மா சட்டத்தையும், எதிர்க்கட்சியினரை ஒடுக்கத் தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளையும் மாநில அரசு திரும்பப் பெற வேண்டும்.

* கெளரவ ரேஷன் கார்டு திட்டம் மக்களின் அடிப்படை உரிமையைப் பறித்துவிட்டது. நடுத்தர மக்களை மேலும்மேலும் வாட்டி எடுக்கும் அதிமுக அரசு இது போன்ற செயல்களை உடனே கைவிட வேண்டும். கெளரவ ரேசன்கார்டு திட்டம் உடனே வாபஸ் பெறப்பட வேண்டும்.

* மதமாற்றத் தடை சட்டத்தை நிறைவேற்றியும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் சட்டத்திற்கு ஆதரவுதெரிவித்தும், சிறுபான்மை மக்களின் மத உணர்வுகளில் அதிமுக அரசு தலையிடுவதை வன்மையாகக்கண்டிக்கிறோம். இந்தப் போக்கினை ஜெயலலிதா அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.

* ஆடு, மாடு, கோழியை உண்பதற்கு பயன்படுத்தலாம் என்ற நிலை இருக்கும் போது அவற்றை நேர்த்திக்கடனுக்குபயன்படுத்தக் கூடாது என்ற அதிமுக அரசின் அறிவிப்பு தவறானது. இந்த சட்டம், திராவிட கலாசாரத்தின் மீதுஆரிய கலாசாரத்தை திணிப்பதாகும்.

* பல ஆயிரம் கோடிசெலவில் புதிய தலைமைச் செயலகத்தை பொருத்தமற்ற இடத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும்நிலையில் அமைத்திட எத்தனிக்கும் அரசின் முயற்சியைக் கைவிட வேண்டும்.

* சென்னை கடற்கரையில் பல நிகழ்ச்சிகளுக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடுவதற்கு அனுமதித்து விட்டுதேசியக்கவி பாரதியாரின் நினைவு நாளையொட்டி கூட்டம் நடத்த முன் வந்த கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு அனுமதிதராத போக்கினைக் கண்டிக்கிறோம். எதிர்க் கட்சியினர் மீது பொய் வழக்குகள் தொடருவதை உடனடியாகக்கைவிட வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்களைப் படித்தார் கருணாநிதி.

தொடர்ந்து அவர் பேசுகையில், மேலே குறிப்பிட்ட இந்தத் தீர்மானங்கள்- கோரிக்கைகளை வலியுறுத்தி வரும்டிசம்பர் 1 ம் தேதி மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன் திமுகவினர் போராட்டங்கள் நடத்தி சிறை செல்வர்என்றார்.

பா.ஜ.கவுடனான கூட்டணி குறித்து எந்தவிதமான அறிவிப்பையும் கருணாநிதி வெளியிடவில்லை. விரைவில் கூடஉள்ள திமுக பொதுக் குழு தான் அது குறித்து முடிவெடுக்கும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X