For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு ஊழியர்களுக்கு விரைவில் விருப்ப ஓய்வு திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசு ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்துவது உள்பட, அரசு ஊழியர்கள் தொடர்பானவிவகாரங்கள் குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்விவாதிக்கப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் நடந்தக் கூட்டத்தில் அரசு ஊழியர்களின் மீதான பிடியை மேலும் இறுக்குவது என முடிவுசெய்யப்பட்டது. பகல் 1.30 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம் நெடு நேரம் நீடித்தது.

புதிய விருப்ப ஓய்வுத் திட்டத்தை அமல்படுத்தவும், தலைமைச் செயலக ஊழியர்களை ஒட்டுமொத்தமாகஇடமாற்றம் செய்யவும், ஓய்வு பெறும் வயது குறைப்பு குறித்தும், வாரத்தில் 6 நாள் வேலையை அமலாக்குவது,வேலை நேரத்தை அதிகரிப்பது ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இது தொடர்பாக நிதியமைச்சர் பொன்னையன் குழு சமர்ப்பித்துள்ள பரிந்துரைகள் குறித்து அமைச்சரவையில்முழுமையாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

விருப்ப ஓய்வுத் திட்டம் என்ற பெயரில் கட்டாயம் ஓய்வு பெறும் அளவுக்கு அரசின் கெடுபிடிகள் இருக்கும் என்றுதெரிகிறது.

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய தலைமை செயலகம் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

த.செ. ஊழியர்களிடம் விசாரணை முடிந்தது:

இதற்கிடையே டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்திவரும் 3 நீதிபதிகள் குழு இன்றுடன் தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த ஊழியர்களிடம் தங்களது விசாரணையைமுடித்துக் கொண்டது.

தலைமைச் செயலகத்தில் பணியாற்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 2,789 ஊழியர்களிடம் இந்தக் குழுவிசாரணை நடத்தியது. நாளை முதல் சென்னை நகரில் பணியாற்றி டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்டமற்ற ஊழியர்களிடம் இந்தக் குழு விசாரணை நடத்தும்.

திங்கள்கிழமை முதல் பிற மாவட்ட ஊழியர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை தொடங்கும். அடுத்த மாதம் 20ம்தேதிக்குள் விசாரணை முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் உரிய முறையில் கமிட்டியை அமைத்து விசாரணையைத் தொடங்கவே 1மாதம் தாமதமானது. இப்போது விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் நவம்பர் ஆகிவிடும். பின்னர் அதைஅரசிடம் தாக்கல் செய்து, அரசு பரிசீலணை செய்து இறுதி முடிவெடுக்க இரு வாரங்கள் ஆகலாம் என்று தெரிகிறது.இதனால் டிசம்பர் மாதத்தில் தான் இந்த ஊழியர்கள் மீண்டும் வேலையில் சேர முடியும்.

இப்போதே 3 மாதங்களாக இவர்கள் ஊதியம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். டிசம்பரில் தான் மீண்டும்வேலை கிடைக்கும் என்றால் கிட்டத்தட்ட மேலும் 2 மாதங்கள் சம்பளம் இல்லாமல் வாட வேண்டிய நிலைக்குஇவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X