For Daily Alerts
Just In
சென்னையில் 2 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை: 120 பவுன் நகை திருட்டு
சென்னை:
சென்னை நகரில் 2 வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் 120 பவுன் நகைகளைத் திருடி சென்றனர்.
சென்னை, சூளைமேடு கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். சுங்க இலாகாவில் பணியாற்றும் இவர் அப்பகுதியில் பிளாட்டில் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் பாண்டிச்சேரி போயிருந்தார்.
இந் நிலையில் நள்ளிரவில் இவரது வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 50பவுன் நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிவிட்டனர்.
அதேபோல, பாலவாக்கம் கந்தசாமி நகர் பகுதியில் வசிக்கும் பூங்கோதை என்பவரது வீட்டிலும் கொள்ளைநடந்தது. இவர் நேற்றிரவு தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்பினார்.
அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 70பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தன.


