வெங்கடேச பண்ணையாரின் எண்கெளன்டர் சாவு: இளங்கோவன் சந்தேகம்
சென்னை:
தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல பணக்காரர் வெங்கடேச பண்ணையார் சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்டதுதொடர்பாக போலீஸார் கூறும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை. இது இட்டுக் கட்டப்பட்ட கதையாகவேத்தோன்றுவதாக தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னையில் போலீஸாரால் வெங்கடேசன் பண்ணையார்சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர் தங்களைத் தாக்கியதாககவும், தற்காப்புக்காகவே திருப்பிச் சுட்டதாகவும்போலீஸார் கூறுவதை நம்ப முடியவில்லை. இதுகுறித்து தனி விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும்.
போலீஸாரால் சுட்டுக் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாகமக்கள் மனதில் பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதற்கு பதில் அளிக்க வேண்டியது அரசுமற்றும் போலீஸின் கடமையாகும்.
திமுக பேச்சாளர் வெற்றிகொண்டானை நள்ளிரவில் கைது செய்து மரபுகளை உடைத்து எறிந்துள்ளனர். அவதூறாகபேசியிருந்தால் அவர் மீது வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும். அதன் பிறகே கைது செய்யப்பட்டிருக்கவேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வரும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் சிலர். ஆனால்வானிலையில்தான் மாற்றம் வருமே தவிர, தமிழக காங்கிரஸ் தலைமையில் எந்தவித மாற்றம் வராது.


