For Daily Alerts
Just In
2 குழந்தைகளை எரித்து தாயும் தற்கொலை
தேனி:
தேனி மாவட்டம் தேவாரம் அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக 2 குழந்தைகளை எரித்துக் கொன்று விட்டுதானும் தற்கொலை செய்து கொண்டார் ஒரு பெண்.
தேவாரம் பெருமாள்மலை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி இந்துமதி. இருவருக்கும் தினேஷ் என்ற3 வயது மகனும், ஹேமா என்ற 2 வயது மகளும் இருந்தனர்.
ரமேஷுக்கும், இந்துமதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். அதுபோலவே நேற்றும்மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனடைந்த இந்துமதி, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து இரு குழந்தைகள் மீதும் ஊற்றிதீவைத்து எரித்தார். பின்னர் தானும் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
தேவாரம் போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

