For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருமகளுக்கு செக்ஸ் தொல்லை தரும் துணைவேந்தர்

By Staff
Google Oneindia Tamil News

தர்மபுரி:

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கம் தன்னிடம் பாலியல்ரீதியில் தவறாக நடக்கமுயன்றதாக அவரது மருமகள் சங்கீதா போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சங்கீதா தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரியய்யா மற்றும் மாநில சட்டப்பணிகள் உறுப்பினர்-செயலாளர் நீதிபதி அக்பர் அலியிடம் கொடுத்துள்ள புகாரில்,

கிருஷ்ணகிரியை அடுத்த மோரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த எனக்கும், சேலம் பெரியார் பல்கலைக்கழகதுணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்தின் மகன் ராஜவேல் சேதுபதிக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி திருமணம்நடந்தது.

திருமணத்திற்காக எனது தந்தை ரூ. 2 லட்சம் ரொக்கம், 100 பவுன் நகை வரதட்சணையாகக் கொடுத்தார். பிறகு ஒருகார் வாங்கித் தருவதாகவும் உறுதியளித்திருந்தார். திருமணம் நடந்த 7வது நாளை எனது கணவர் ராஜவேல்சேதுபதி அமெரிக்காவில் கலிபோர்னியாவுக்கு வேலைக்கு சென்று விட்டார்.

திருமணத்திற்குப் பின் நான் எனது மாமனாரின் வீடான துணைவேந்தர் இல்லத்தில் தங்கினேன். அப்போதுஅடிக்கடி என்னிடம் தவறாக நடக்க யன்றார் எனது மாமனார். எனது மாமியார், கோவையில் உள்ள அவரது மகள்வீட்டுக்கு அடிக்கடி சென்று விடுவார். அவர் சென்ற பின்னர், என்னிடம் தவறாக நடக்க முயல்வார் எனது மாமனார்.

இது குறித்து கணவரிடம் தொலைபேசியில் தெரிவித்தேன். அவரோ எங்கள் வீட்டில் சொல்வதைக் கேட்டு நடஎன்று கூறிவிட்டார்.

மாமனாரின் தொல்லைகள் குறித்து எனது தந்தையிடம் கூறினேன். அவர் பெரும் அதிர்ச்சியடைந்தார்.இதற்கிடையே, எனது கணவர் ஏற்கனவே கல்யாணமாகி விவாகரத்தானவர் என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்தது.இதை எங்களது குடும்பத்தினடம் சொல்லாமல் மறைத்து விட்டனர்.

இந் நிலையில், எனது நாத்தனார் டாக்டர் மீனாட்சி அனுராதா மற்றும் அவரது கணவர் டாக்டர் பரமேஸ்வரன்ஆகியோர் சேலத்தில் உள்ள துணைவேந்தர் இல்லத்திற்கு வந்து, வரதட்சணையாக கேட்ட காரையும், கூடுதலாக ரூ.2 லட்சம் பணத்தையும் விரைவில் கொடுக்கா விட்டால் நடப்பதே வேறு என்று மிரட்டி விட்டுச் சென்றனர்.

எனது நிலைமை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. எனது மாமனார், மாமியார் ஜோதி, நாத்தனார், அவரதுகணவர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என் கணவருடன் என்னை சேர்த்து வைக்கவும் உதவ வேண்டும் என்று தனது புகாரில் கூறியிருந்தார் சங்கீதா.

இந்த மனுவை கிருஷ்ணகிரி டி.எஸ்.பிக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கண்காணிப்பாளர் பெரியய்யா உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

  • குடும்பத்தோடு முன் ஜாமீன் கோரும் துணைவேந்தர்
  • Mail this to a friend  Post your feedback  Print this page 
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X