மத்திய அரசை கண்டித்து சவப் பெட்டியுடன் காங்கிரசார் போராட்டம்
சென்னை:
மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் வாஜ்பாய் சரியான பதில்தராததைக் கண்டித்தும், மத்தியில் ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசின் கொள்கைகளைக்கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் அகில இந்திய செயலாளர் ஜி.கே.வாசன்,மாநிலத் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர்இதில் கலந்துகொண்டனர்.
மெமொரியல் ஹால் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் சவப் பெட்டியும் வைக்கப்பட்டிருந்தது. தேசிய ஜனநாயககூட்டணி அரசு செத்து விட்டது என்பதை காட்டுவதற்காக இந்த சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது.
மதுரையில் நடந்த போராட்டத்தில் செயல் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். இதில் நூற்றுக்கணக்கானகாங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய இளங்கோவன், காங்கிரசுக்குள் ஆயிரம் சண்டை இருக்கும். அதற்கு யாருடைய அறிவுரையும்தேவையில்லை. எங்கள் பிரச்சனைகளை நாங்களே தீர்த்துக் கொள்வோம். சண்டையில்லாத கட்சி ஏதாவதுஇருக்கிறதா?.
ஆளும் கட்சியினரைப் போல லஞ்சப் பணத்தை பகிர்ந்து கொள்வதிலா நாங்கள் மோதிக் கொள்கிறோம்?
சோனியா வெளிநாட்டவர் என்கிறது பா.ஜ.க. அப்படிப் பார்த்தால் அத்வானி கூட பாகிஸ்தானைச் சேர்ந்தவர்தானே. அதற்கு என்ன செய்வது என்றார் இளங்கோவன்.

