சமூகத்தை சீர்திருத்தியவை திராவிட இயக்கங்கள்: கே.ஆர்.நாராயணன்
சென்னை:
சமூக சீர்திருத்த வரலாற்றில் திராவிட இயக்கம் பெரும் திருப்புனையாக இருந்ததாக முன்னாள் குடியரசுத் தலைவர்கே.ஆர்.நிாராயணன் தெவித்தார்.
திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில், கலைஞர் கரூவூலம் மற்றும் திராவிடஇயக்க வரலாற்று காட்சியகம் ஆகியவற்றை முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் இன்று திறந்துவைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டு இருந்த இனத்தினரை மீட்டு, அவர்களுக்கு நல்வாழ்வு அளித்ததில் திராவிடஇயக்கங்களுக்கு பெரும் பங்கு உண்டு. சமூக சீர்திருத்த வரலாற்றில் திராவிட இயக்கத்தின் பங்கு மிகப் பெரியது.
அண்ணாவின் தலைமையிலும், பின்னர் கருணாநிதியின் தலைமையிலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டமக்களின் மேம்பாட்டுக்காக திமுக பாடுபட்டுள்ளது. பெரியார் பெயரில் சமத்துவபுரம், பெண்களுக்கும் சொத்தில்சம பங்கு உள்ளிட்ட பல்வேறு புரட்சித் திட்டங்களை, சட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி. இதற்காகஅவரை பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
இன்று திராவிட இயக்கங்களுக்கும் நாட்டின் மதசார்பின்மைக்கும் பெரும் அச்சுறுத்தல் கிளம்பியுள்ளது. அதைஎதிர்த்துப் போராட வேண்டிய பொறுப்பு திராவிட இயக்கங்களுக்கு உண்டு.
மதத்தின் பெயரால் மக்களைத் துண்டாட, பிரிக்க ஆளுமை வர்க்கம் முயன்றபோதெல்லாம் அதை எதிர்த்துதிராவிட இயக்கங்கள் கொடுத்த குரலை மறக்க முடியாது. திராவிட இயக்கங்கள் தான் சமூக நீதியைக் கொண்டுவந்தன. ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் வாங்கிக் கொடுத்தன. ஆளுமை வர்க்கத்தினரிடம் இருந்துதாழ்த்தப்பட்டவர்களைக் காத்தன.
மதப் பிரிவினைகள் மட்டுமின்றி ஜாதி வேறுபாடுகளையும் எதிர்த்த இயக்கம் திராவிட இயக்கம். கல்வி என்பதுஒரு சாராருக்குத் தான் சொந்தம் என்ற அசாதாரணமான நிலைமை நிலவியபோது அதை உடைத்து எறிந்துஅனைவருக்கும் கல்வி கிடைக்கவும், சம நீதி கிடைக்கவும் திராவிட இயக்கங்கள் மேற்கொண்ட போராட்டங்களைமறக்க முடியாது.
நாட்டின் சமூப் பொருளாதார வளர்ச்சியில் திராவிட இயக்கங்களின் பங்கு மிகப் பெருமையானது. அளவிடமுடியாதது. பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கப் போராடியவர் பெரியார். இதனால் தான் அவருக்கு தந்தைபெரியார் என்ற அடைமொழியே தரப்பட்டது.
தேவதாசி முறையை ஒழித்தவர் தந்தை பெரியார். இதற்காக திராவிட இயக்கங்கள் பெரும் நன்றிக்கு உரியவை.மகாத்மா காந்தி ஒழிக்கப் போராடிய தீண்டாமையை முதலில் ஒழித்துக் காட்டியவை திராவிட இயக்கங்கள் தான்என்றார் கே.ஆர்.நாராயணன்.
பின்னர் பேசிய கருணாநிதி,
கல்வி, அரசுப் பணிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல்வேறுசட்டங்களை கொண்டு வந்தது அன்றைய நீதிக் கட்சி. பிற்படுத்தப்பட்டு, தாழ்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தமக்களுக்காக தொடங்கப்பட்டதே திராவிட இயக்கம்.
என்னை பெரிதும் பாதித்தவர்கள் இரு நாராயணன்கள். ஒருவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன். இன்னொருவர்கே.ஆர். நாராயணன். 1997ம் ஆண்டில் பெரும் ஓட்டு வித்தியாசத்தில் கே.ஆர். நாராயணன் ஜனாதிபதியாகத்தேர்வு செய்யப்பட்டது தான் சமூக நீதிப் புரட்சியின் முக்கிய காலகட்டம்.
திராவிட இயக்கத்தின் பொற்காலத்தை எதிர்கால சமுதாயம் அறிந்து கொள்ளவே இந்த அருங்காட்சியகம்அமைக்கப்பட்டது. இது ஒரு வரலாற்றுச் சின்னமாக விளங்கும் என்றார்.
முன்னதாக இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கே.ஆர்.நாராயணன், அவரது மனைவி உஷாவுடன் நேற்றிரவுசென்னை வந்தார்.
|
கருணாநிதியிடம் டாக்டர் பட்டத்தை காட்டும் ஸ்டாலின்
டாக்டர் பட்டத்துடன் திரும்பிய ஸ்டாலின்:
ஐரிஷ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற லண்டன் சென்றிருந்த ஸ்டாலின் நேற்று சென்னை திரும்பினார்.பட்டத்துடன் ஊர் திரும்பிய ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

