For Quick Alerts
For Daily Alerts
இலங்கை நீதிமன்றம் விடுதலை: 17 தமிழக மீனவர்கள் நாடு திரும்பினர்
ராமேஸ்வரம்:
இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுதாயகம் திரும்பினர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த 13 மீனவர்களும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் 2 நாட்களுக்கு முன்யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, படகு ஓட்டுனர்கள் 4 பேரைத் தவிர மற்ற அனைவரையும் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து 17 மீனவர்களும், கச்சத்தீவு அருகே இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.அவர்களை அதிகாரிகள் மண்டபம் பகுதிக்கு அனைத்து வந்து பின்னர் அவரவரர் ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.

