For Daily Alerts
அதிமுகவில் இணைந்த மாஜி திமுக எம்.எல்.ஏ
சென்னை:
முன்னாள் திமுக எம்.எல்.ஏ. துரை, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை இருந்தவர்துரை. தீவிரமான திமுக உறுப்பினராக இருந்து வந்த துரை தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், முன்னாள் எம்.எல்.ஏ. துரை, அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து அவரதுமுன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
அவருடன் வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகர காமராஜர் தேசிய காங்கிரஸ் தலைவர் ஆர்.எஸ்.ஞானசேகரன்உள்ளிட்ட பலரும் அதிமுகவில் இணைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.


