அடுக்கடுக்காய் அவதூறு வழக்குகள்: கைதாகி, விடுதலையாகி, கைதாகி, மீண்டும் விடுதலையான வெ.கொ!
கடலூர்:
விழுப்புரம் கூட்டத்தில் முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில்விடுவிக்கப்பட்டதிமுக பேச்சாளர் வெற்றி கொண்டான், சிறையிலிருந்து வெளியே வந்ததும், மற்றொரு அவதூறுவழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால், அதிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்ததால் அவரை வேறுவழியில்லாமல் போலீசார் விடுவித்தனர்.
விழுப்புரத்தில் நடந்த திமுக மாநாட்டில் தலைமைக் கழகப் பேச்சாளரும் முன்னாள் எம்.பியுமான வெற்றிகொண்டான், கருணாநிதி கைது செய்யப்பட்டது குறித்துப் பேசினார்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு அவதூறு ஏற்படும் விதத்தில் பேசியதாக வெற்றிகொண்டான்மீது விழுப்புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து சனிக்கிழமை இரவில் கைது செய்தனர். கடலூர் சிறையில்அடைத்தனர்.
நேற்று (திங்கள்கிழமை) அவருக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து கடலூர்சிறையிலிருந்து வெற்றி கொண்டான் விடுதலை செய்யப்பட்டார். அவரை திமுக எம்.பி. ஆதிசங்கர் மற்றும்எம்.எல்.ஏ. புகழேந்தி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினர் வரவேற்று அழைத்து வந்தனர்.
சிறை வாசலில் இருந்து வெளியே வந்த வெற்றி கொண்டானை சுற்றி வளைத்த கடலூர் போலீசார், அவர் மீதுவந்தவாசி காவல் நிலையத்தில் இன்னொரு அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறினர்.
வந்தவாசியில் நடந்த திமுக கூட்டத்தில் முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைதுசெய்ய அந்த நகர போலீசார் வந்து கொண்டிருப்பதாகவும், இதனால் காவல் நிலையத்துக்கு வருமாறும் கூறினர்.ஆனால், தன்னைக் கைது செய்யக் கூடாது என வெற்றிகொண்டான் வாதிட்டார். திமுகவினருக்கும் போலீசாருக்கும்இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது.
அப்போது கடும் வெயில் மற்றும் பசி காரணமாக வெற்றிகொண்டட் மயங்கி விழுந்தார்.
இந் நிலையில் அங்கு வந்து சேர்ந்த வந்தவாசி போலீசார், தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளிவித்து அவரைகடலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினரை போலீசார்விரட்டியடித்தனர்.
பின்னர் வந்தவாசிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதுஜாமீன் கேட்டு வெற்றிகொண்டானின் வக்கீல் மனு செய்தார். அதை ஏற்ற நீதிபதி வெற்றி கொண்டானைஉடனடியாக விடுவிக்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு வெற்றி கொண்டான் விடுதலையானார்.
ஜாமீனில் விடுதலையானவரை மீண்டும் இன்னொரு வழக்கில் சிறை வாசலிலேயே வைத்து கைது செய்துள்ளதுஅதிமுக அரசு.
அதே நேரத்தில் நீதிமன்ற உதவியுடன் ஜாமீனில் விடுதலையாகி, அதே நாளில் மீண்டும் கைதாகி, மீண்டும்ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் வெற்றி கொண்டான்.

