For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"செக்ஸ் வக்கிர" துணைவேந்தருக்கு நீதிமன்றம் 2 நாள் கெடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மருமகளை செக்சுக்கு அழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சேலம் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சேதுபதிராமலிங்கம், தனது மருமகளை சமாதானப்படுத்த நாளை வரை (புதன்கிழமை) சென்னை உயர்நீதிமன்றம் கெடுவிதித்துள்ளது.

அதற்குள் சுமூக முடிவு காணாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி கற்பக விநாயகம்எச்சரித்துள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருப்பவர் சேதுபதி ராமலிங்கம். இவர் மீது மருமகள் சங்கீதாகொடுத்துள்ள புகாரில், சேதுபதி தன்னை சேலையைப் பிடித்து உருவியும், படுக்கையில் தள்ளியும்பாலியல்ரீதியாக பலமுறை துன்புறுத்தியதாகவும், வரதட்சணை கேட்டு மாமனார் மற்றும் குடும்பத்தினர்சித்திரவதை செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்முன் ஜாமீன் கோரி குடும்பத்தோடு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார் சேதுபதி ராமலிங்கம்.

இந்த மனுவை நீதிபதி கற்பக விநாயகம் விசாரித்து வருகிறார். மனு விசாரணைக்கு வந்தபோது, சேதுபதிராமலிங்கம் தனது குடும்பத்தோடு ஆஜரானார். மருமகள் சங்கீதாவும் கோர்ட்டில் ஆஜரானார்.

அப்போது பேசிய நீதிபதி கற்பகவிநாயகம், சங்கீதா அமெரிக்காவில் உள்ள தனது கணவருக்கு எழுதிய கடிதங்கள்மூலம் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ளதும், சேதுபதி ராமலிங்கத்தின் குடும்பத்தினரால்துன்புறுத்தப்பட்டதும் தெளிவாகத் தெரிகிறது.

சேதுபதி ராமலிங்கம் கூறுவது போல சங்கீதா மன நிலை பாதிக்கப்பட்டவராகத் தெரியவில்லை. அவர் மிகவும்தெளிவாகவே உள்ளார்.

பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க வேண்டியவர் தனது குடும்பத்தையே சரியாக நிர்வகிக்கவில்லை என்பதுதெரிகிறது.

புதன்கிழமை வரை சேதுபதி ராமலிங்கத்திற்கு கோர்ட் அவகாசம் கொடுக்கிறது. அதற்குள், சங்கீதாவை அவர்சமாதானப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டி வரும்.

இந்த அவகாசம் கொடுக்கப்படுவதன் முக்கிய நோக்கம், எந்த விதத்திலும் சங்கீதாவின் திருமண வாழ்க்கைபாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று கோர்ட் கருதுவதால் தானே தவிர, வேறு எந்த நோக்கமும் கிடையாது.

சேதுபதி ராமலிங்கம் கைது செய்யப்படுவதும், செய்யப்படாததும் சங்கீதாவின் கையில்தான் உள்ளது என்றார்நீதிபதி.

சமீபகாலமாக பல அருமையான தீர்ப்புகளால் தமிழகத்தையே தனது பக்கம் திரும்ப வைத்துள்ளார் நீதியரசர் கற்பகவிநாயகம். இந்த முறை மிக சிக்கலான வழக்கிலும் கூட, பெண்ணின் திருமண வாழ்க்கையை மனதில் கொண்டு,பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு கண்டிட முயன்றுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X