For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கன மழைக்கு இடையே விண்ணில் பாயந்தது பி.எஸ்.எல்.வி.: செயற்கைக் கோளை செலுத்தியது

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீஹரிகோட்டா:

இந்தியா தனது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை இன்று விண்ணில் ஏவியது. அந்த ராக்கெட் ரிசோர்ஸ்சாட்(ஐ.ஆர்.எஸ்- பி 6) என்ற இயற்கை வள ஆராய்ச்சி செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தாவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்று காலை 10.22மணிக்கு பி.எஸ்.எல்.வி. ஏவப்பட்டது.

கன மழைக்கு இடையே இந்த ராக்கெட் ஏவப்பட்டது. கடும் காற்றும் வீசியபோதும் கூட திட்டமிட்டி ராக்கெட்டைஇஸ்ரோ செலுத்திவிட்டது.

44.4 மீட்டர் உயரமும், 294 டன் எடையும் கொண்ட இந்த பி.எஸ்.எல்.வி-சி 5 ராக்கெட் ,1360 கிலோ எடைகொண்ட ரிசோர்ஸ்சாட் செயற்கைக் கோளை துருவ வட்டப் பாதையில் (Polar synchronous orbit)செலுத்தியது. ஏவப்பட்ட 17வது நிமிடத்தில் செயற்கைக் கோளை பூமியில் இருந்து 817 கிலோ மீட்டர் உயரத்தில்செலுத்தியது பி.எஸ்.எல்.வி.

8வது முறையாக தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலில் 1,000 கிலோ எடை கொண்ட செயற்கைக் கோள்களை ஏவும் திறனுடன் தான் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்வடிவமைக்கப்பட்டது. பின்னர் அதன் திறன் அதிகரிக்கப்பட்டது. இதன்மூஸம் ஒரே நேரத்தில் பல செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் அளவுக்கு பி.எஸ்.எல்.வியின் சக்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட்டைக் கொண்டு 36,000 கிலோ மீட்டர் உயரத்தில், புவி வட்டப் பாதையில் (Geo synchronousorbit) கூட செயற்கைக் கோளை செலுத்த முடியும்.

நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப இந்த ராக்கெட்டையே பயன்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இன்று செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வியின் முதல் ஸ்டேஜ் பூஸ்டர் தான் உலகிலேயே மிகப் பெரிய திடஎரிபொருளால் இயங்கும் ராக்கெட்டாகும். 138 டன் எடை கொண்ட ஹைட்ராக்சில் டெர்மினேட்டட் பாலிபூடாடியேன் என்ற திட எரிபொருள் இதில் பயன்படுத்தப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X