For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிட்டனில் அரசியல் தஞ்சம் தேடும் 2,500 இந்தியர்கள்

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்:

சுமார் 2,500 இந்தியர்கள் பிரிட்டனில் அரசியல் புகலிடம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில்பெரும்பாலனவர்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள்.

ஆனால், பிரிட்டனுக்குள் வெளிநாட்டவர் வர அனுமதி அளிப்பதில் அந்நாட்டு அரசு கெடுபிடியைஅதிகரித்துள்ளதால் இவர்களது விண்ணப்பங்கள் முடங்கிக் கிடப்பதாக பிரிட்டிஷ் உயர் அதிகாரிகள்தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா செல்ல டிக்கெட் எடுத்துவிட்டு, வழியில் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்கும்பஞ்சாபியர்கள் தங்களது பயண ஆவணங்கள், பாஸ்போர்ட்டை அழித்துவிட்டு, தாங்கள் இந்தியாவில்கொடுமைப்படுத்தப்பட்டதால் தப்பி வந்ததாகக் கூறி, பிரிட்டனில் அரசிடம் தஞ்சம் கேட்கின்றனர்.

இந்த மோசடி வேலைக்கு பல ஏஜெண்டுகள் உதவியாக உள்ளதாகக் கருதும் பிரிட்டிஷ் அரசு, பயணஆவணங்களை அழிப்பவர்களுக்கு 2 வருடம் சிறை தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பிரிட்டனுக்கு வந்த இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளில் 5 பேர் காணாமல் போய்விட்டார்கள். அவர்களில் 3 பேரைக் கண்டுபிடித்து பிரிட்டன் திரும்ப இந்தியாவுக்கு அனுப்பிவிட்டது. ஆனால்,மற்ற இருவர் பற்றி எதுவும் தெரியவில்லை. அவர்கள் பிரிட்டனிலேயே வேறு பெயர், அடையாளங்களுடன் வாழஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.

பிரிட்டனில் புகலிடம் தேடுபவர்களில் பெரும்பான்மையினர் இந்தியர்கள்தான். இவர்கள் தவிர சோமாலியா,ஜிம்பாப்வே, சீனா, பாகிஸ்தான், ஈரான், ஈராக், துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் காங்கோ ஆகியநாடுகளிலிருந்தும் பெருமளவில் பிரிட்டனில் புகலிடம் தேடுகின்றனர்.

பிரிட்டனில் யாரும் முறைகோடக நுழைவதைத் தடுக்க, பிரிட்டன் வழியாக பயணம் செய்யும் இந்தியா,அங்கோலா, பங்களாதேஷ், கேமரூன், லெபனோன் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் விசா (டிரான்சிட் விசா)பெற வேண்டும் என அந் நாடு உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 15ம் தேதி முதல் இந்த விதி அமலுக்குவந்துள்ளது.

பிரிட்டன் வழியாக அமெரிக்கா, கனடா நாடுகளுக்குச் செல்பவர்கள் இந்த டிரான்சிட் விசா பெறத்தேவையில்லை. ஆனால், பிற நாடுகளுக்குச் செல்பவர்கள் டிரான்சிட் விசா பெற்றால் தான் பிரிட்டன் வழியாகப்பறக்க முடியும்.

கடந்த சில நாட்களுக்கு முன் பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் டேவிட் பிளங்கெட் புகலிடம் தேடிவருபவர்களுக்கான விதிமுறைகளை வெளியிட்டார். அதில் உரிய காரணமின்றி, பயணத்திற்கான ஆவணங்கள்இல்லாமல் பிரிட்டனுக்குள் நுழைபவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக, பிரிட்டனில் வசிக்க அனுமதி கோரி காத்திருந்த 15,000குடும்பங்களுக்கும் பிரிட்டனில் பணி செய்து வாழ அனுமதி அளித்துள்ளார் பிளங்கெட். ஆனால், 2,500இந்தியர்களின் மனுக்களும் இன்னும் ஏற்கப்படவில்லை.

இதனால் அவர்கள் தொடர்ந்து பிரிட்டனில் இருக்க முடியுமா என்பது சந்தேகத்துக்குரியதாகியுள்ளது.

புகலிடம் தேடி வருபவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகளையும் ரத்து செய்துவிட பிரிட்டன் முடிவுசெய்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X