தைப்பூசம்: முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் வெள்ளம்
மதுரை:
தைப்பூசத்தையொட்டி முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் மிகக் கோலாகலமான விழா நடந்தது. ஆலயங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு முருகனை வழிபட்டனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நேற்று நடந்த தைப்பூசத்தையொட்டி சிறப்பு அபிஷேங்களும், ஆராதனைகளும் நடந்தன. பின்னர் லட்சக்கணக்கானோர் வடம் பிடிக்க தேரோட்டமும் நடந்தது.
காவடி எடுத்தும், அலகு குத்தியும் முருகப் பெருமானுக்கு பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்காணோர் பாத யாத்திராைக பழனி வந்தனர்.
பல நாடுகளில் இருந்தும் தமிழர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இன்று முருகனின் மூன்றாம் படை வீடான திருவாவின்குடியில் பால வேலாயுத சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது.
இதே போல திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் ஆகிய முருகனின் படை வீடுகளிலும் மிகக் கோலாலகமாக தைப்பூசம் கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கானோர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் விஸ்வரூப தீபாராதனைகளை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்து முருகப் பெருமானின் அருள் பெற்றனர். பின்னர் முருகன் மயில்வாகனத்தில் எழுந்தளிரு வீதி வலம் வந்தார்.
தமிழகம் தவிர மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் தைப்பூச விழாவையொட்டி முருகனில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளும், தேரோட்டமும் நடந்தது.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!











Click it and Unblock the Notifications