For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யூரோ 2004: அரையிறுதியில் போர்ச்சுகல்

By Staff
Google Oneindia Tamil News

லிஸ்பன்:

Portugal teamயூரோ 2004 கால்பந்தாட்டத்தின் முதல் காலிறுதிப் போட்டியில் போர்ச்சுகல் 6-5 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்துஅணியைத் தோற்கடித்து, அரையிறுதிக்கு முன்னேறியது.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சமநிலையில் இருந்தன. இதனையடுத்துபெனால்டி கார்னரில் போர்ச்சுகல் இங்கிலாந்தை விட அதிகமாக ஒரு கோல் அடித்து ஆட்டத்தை வென்றது.

இந் நிலையில் லீக் ஆட்டத்தில் செக். குடியரசிடம் 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியுற்று ஜெர்மனிகாலிறுதி வாய்ப்பை இழந்தது.

டி பிரிவில் இரண்டு வெற்றிகளைப் பெற்றிருந்த செக். குடியரசு ஏற்கெனவே காலிறுதி வாய்ப்பை பெற்றிருந்தது.ஜெர்மனி தான் ஆடிய 2 ஆட்டங்களிலும் டிரா கண்டிருந்ததால், செக். குடியரசு உடனான ஆட்டத்தில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது.

ஆனால் 2-1 என்ற கோல் கணக்கில் செக். குடியரசு வெற்றி பெற்றதால், ஜெர்மனி போட்டி தொடரில் இருந்துவெளியேறியது.

ஜெர்மனி 3 முறை ஐரோப்பிய சாம்பியன் பட்டம் வென்ற அணி என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனிதோல்விடைந்ததை அடுத்து அணியின் பயிற்சியாளர் ரூடிவாலா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

ஜெர்மனியை வென்ற செக், குடியரசு காலிறுதியில் டென்மார்க் உடன் மோதுகிறது. இன்றிரவு நடைபெறும்மற்றொரு காலிறுதியில் பிரான்ஸ்-கிரீஸ் அணிகள் மோதுகின்றன. லீக் போட்டியில் போர்ச்சுகலுக்கு அதிர்ச்சிதோல்வியளித்தது. மற்றொரு போட்டியில் ஸ்பெயினுடனான ஆட்டத்தை டிரா செய்து காலிறுதி வாய்ப்பைபெற்றது. முன்னாள் சாம்பியனான பிரான்ஸ் 2 வெற்றிகளுடன் பி பிரிவில் முதலிடம் பெற்று காலிறுதிக்குநுழைந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X