For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விம்பிள்டன்: வீனஸ் வில்லியம் அதிர்ச்சி தோல்வி

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்:

விம்பிள்டன் டென்னிஸில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சித்தோல்வியடைந்தார்.

இரண்டாவது சுற்றுப் போட்டியில், 6-7, 6--7 என்ற நேர் செட்களில் குரோஷியா வீராங்கனை கரோலினா ஸ்பிரமிடம்தோல்வியடைந்தார்.

அதேபோல் முன்னணி வீராங்கனைகளான பிரான்சின் மேரி பியர்ஸ் 2-6, 5-7 என்ற செட்களில் ஸ்பெயினின் வெர்ஜினா ரோனாபாஸ்கலிடமும், ஸ்பெயினின் கோன்சிதா மார்ட்டினஸ் 4-6, 6-7 என்ற செட்களில் வெனிசுலாவின் மிலாகுரோசிடமும் தோல்விஅடைந்தனர்.

Mary Pierceமற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெனிபர் கேப்ரியாட்டி 6-2, 6-2 என்ற செட்களில் லக்சம்போர்க்கின் கிளாடின்செக்ஹாலையும், பிரான்சின் அமிலி மவுரிஸ்மோ 6-2, 6-3 என்ற செட்களில் குரோஷியாவின் ஜெலினா கோஸ்டானிக்கையும்வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆண்களில் பிரிவில் முதல்நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-1, 6-2, 6-0 என்ற நேர் செட்களில்கொலம்பியாவின் அலெக்சாண்ட்ராவைத் தோற்கடித்து 3வது சுற்றில் நுழைந்தார்.

உலகின் ஆறாம் நிலை வீரரான கார்லோஸ் பெரைரா (ஸ்பெயின்), ஆஸ்திரேலியாவின் ஸ்டெபானுடனான ஆட்டத்தில் கடுமையானபோராட்டத்துக்குப் பின் 4-6, 7-5, 5-7, 7-6, 8-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றில்நுழைந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X