For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விம்பிள்டன்: செரீனாவை வீழ்த்தி ஷரபோவா சாம்பியன்

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்:

விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ரஷியாவின் மரியா ஷரபோவா நடப்புச்சாம்பியன் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் 2 முறை விம்பிள்டன் பட்டம் வென்றவரும், முதல்நிலைவீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ், 13-ம் நிலை வீராங்கனை மரியா ஷரபோவாவுடன் மோதினார்.

இதில் ஷரபோவா 6--1, 6--4 என்ற நேர்செட்களில் செரீனா வில்லியம்ஸை எளிதாக வீழ்த்தினார்.

இதன்மூலம் ஷரபோவா விம்பிள்டன் பட்டம் வென்ற முதல் ரஷிய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.மேலும் இளம் வயதில் (17 வயது) பட்டம் வென்ற 2-வது வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்1997-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் 16 வயதில் விம்பிள்டன் பட்டத்தை வென்று உள்ளார்.

Sharapovaஇன்று நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரெர்,- ஆன்டிரோட்டிக்கை எதிர்கொள்கிறார்.

முன்னதாக ஆண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் ரோஜர் பெடரெர் (சுவிட்சர்லாந்து) 6--2, 6--3, 7--6,(8--6) என்ற நேர் செட்களில் செபாஸ்டியன் குரோஜெனை (பிரான்ஸ்) தோற்கடித்து இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றார்.

மற்றொரு அரை இறுதியில் ஆன்டி ரோட்டிக் (அமெரிக்கா) 6--4, 4--6, 7--5, 7--5 என்ற செட் கணக்கில் மரியோஅனிசிச்சை (குரோஷியா) தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

பயஸ்- நவரத்திலோவா இணை தோல்வி:

கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் இந்தியாவின் லியாண்டர் பயஸ்- அமெரிக்காவின்மார்ட்டினா நவரத்திலோவா இணை அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.

3-வது சுற்று ஆட்டத்தில் இந்த இணை 6--7(7--9), 7--6(7--5), 11--13 என்ற செட் கணக்கில் ஜிம்பாப்வேயின் வேய்ன்பிளாக்- காரா பிளாக் ஜோடியிடம் தோற்றது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X