For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விம்பிள்டன்: மீண்டும் பட்டத்தை வென்றார் ஃபெடரர்

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்:

விம்பிள்டள் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஆன்டி ரோடிக்கை வீழ்த்தி, நடப்புச்சாம்பியனான ரோஜர் ஃபெடரர் (சுவிர்ஸர்லாந்து) பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

அவர் 4--6, 7--5, 7--6, 6--4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஆன்டி ரோடிக்கை வென்றார்.

Federerஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இடையிடையே மழை குறுக்கிட்டதால் இரண்டு முறை ஆட்டம்நிறுத்தப்பட்டது. இரண்டரை மணி நேரம் நீடித்த ஆட்டத்தின் இறுதியில ஃபெடரர் பட்டத்தை வென்றார். இதன்மூலம் ரூ.5 கோடி பரிசுத் தொகை அவருக்குக் கிடைத்தது. ரோடிக்குக்கு ரூ.2.5 கோடி பரிசுத் தொகை கிடைத்தது.

தரவரிசையில் ஃபெடரர் முதல் நிலையிலும், ரோடிக் இரண்டாவது நிலையிலும் உள்ளனர். 22 ஆண்டுகளுக்குப்பிறகு தரவரிசையில் முதல் இரண்டு நிலைகளில் இருப்பவர்கள் இப்போதுதான் மோதியுள்ளனர். 1982-ல் நடந்தவிம்பிள்டன் இறுதி ஆட்டத்தில் இரண்டாவது நிலையில் இருந்த ஜிம்மி கானர்ஸ் முதல் நிலையில் இருந்த ஜான்மெக்கன்ரோவை வென்றார்.

ஃபெடரர் இதுவரை தான் விளையாடிய 3 கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிகளிலும் பட்டத்தை வென்றுள்ளார்ஃபடரர்.

வூட்பிரிட்ஜ் சாதனை:

ஆடவர் இரட்டையர் பட்டத்தை 9-வது முறையாக வென்று ஆஸ்திரேலியாவின் டோட் வூட்பிரிட்ஜ் புதிய சாதனைபடைத்தார்.

வூட்பிரிட்ஜ், ஜோனஸ் ஜோர்க்மான்(ஸ்வீடன்) ஜோடி 6--1, 6--4, 4--6, 6--4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின்ஜூலியன் நெளலி, செரீபியாவின் நீனாத் ஜிமோன்ஜிக் இணையை தோற்கடித்தது. இதன் மூலம் 3-வது முறையாகஇந்த ஜோடி ஆடவர் இரட்டையர் பட்டத்தை வென்றுள்ளது.

Stubbs and Black டோட் வூட்பிரிட்ஜ் ஏற்கெனவே மார்க் வூட்போர்டுடன் இணைந்து 6 முறை ஆடவர் இரட்டையர் பட்டத்தைவென்று இருக்கிறார். இதன் மூலம் 8 பட்டங்கள் வென்ற லெளரி தோதர்தி, ரெக்கி தோதர்தி ஜோடியின்சாதனையை வுட்பிரிட்ஜ் முறியடித்தார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் ஜிம்பாப்வேயின் காரா பிளாக், ஆஸ்திரேலியாவின் ஸ்டப்ஸ் இணை பட்டம்வென்றது. இவர்கள் 6--3, 7--6 (7--5) என்ற செட் கணக்கில் தென்னாப்பிரிக்காவின் லீசஸ் ஹூபர், ஜப்பானின் ஆய்சுகியாமா ஜோடியை வென்றது.

நவரத்திலோவா தோல்வி:

விம்பிள்டனில் அதிக பட்டங்களை வென்று சாதனை படைக்க வேண்டும் என்ற மார்ட்டினா நவரத்திலோவாவின்கனவு தகர்ந்தது.

நவரத்திலோவா (அமெரிக்கா) இதுவரை விம்பிள்டனில் 20 பட்டங்களை வென்று பில்லி ஜீன் கிங்கின்சாதனையை சமன் செய்துள்ளார். இந்த ஆண்டு ஒரு பட்டம் வென்று அச்சாதனையை முறியடிக்க வேண்டும் என்றுகனவுடன் நவரத்திலோவா ஆடத் தொடங்கினார். ஒற்றையர் போட்டியில் இரண்டாவது சுற்றிலேயேவெளியேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸுடன் இணைந்து ஆடி, 3-வதுசுற்றில் இந்த ஜோடி வெளியேறினார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் சக நாட்டு வீராங்கனை லிசா ரேமண்டுடன் இணைந்து போட்டியிட்டார். ஆனால்இந்த ஜோடி அரை இறுதியில் தென் ஆப்பிரிக்காவின் லீசல் ஹூபர், ஜப்பானின் ஆய் சுகியாமா ஜோடியிடம் 7--6(7--4), 7--5 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது. இதன் மூலம் நவரத்திலோவாவின் சாதனைக் கனவுதகர்ந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X