சுயநிதி கல்லூரிகள் வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை:
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்க ஒற்றைச் சாளர முறையைப்பின்பற்ற வேண்டியதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சுப்பிரமணி கமிட்டி விதித்த ஒன்பது நிபந்தனைகளை ரத்து செய்யக் கோரி சுயநிதி பொறியியல் கல்லூரிகளின்கூட்டமைப்பு, அகில இந்திய மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் சங்கத்தின் சார்பில் சென்னைஉயர்நீதிமன்றத்தல் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முருகேசன் தனது தீர்ப்பில் கூறியதாவது:
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்க்க ஒற்றைச் சாளர முறையைப்பின்பற்ற வேண்டும் என்ற சுப்பிரமணி கமிட்டியின் நிபந்தனை ரத்து செய்யப்படுகிறது.
அதேநேரத்தில் பெரும்பான்மை சமூகத்தவர் நடத்தும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில்மாணவர்களைச் சேர்க்கும் போது அரசின் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற சுப்பிரமணிகமிட்டியின் நிபந்தனை ஏற்கப்படுகிறது.
சிறுபான்மையினர் நடத்தும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களைச்சேர்க்கும்போது இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றத் தேவையில்லை. 70 சதவீத இடங்களில் அவர்களதுசமூகத்தைச் சார்ந்த மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம். நிரப்பப்படாத இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில்மாணவர்களை அரசு சேர்க்கும்.
மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சேர்த்துக் கொள்ளலாம்.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வின் வினாத்தாளைப் போலவே சுயநிதி பொறியியல்கல்லூரிகளின் வினாத்தாளும் இருக்க வேண்டும் என்று சுப்பிரமணி கமிட்டி விதித்த நிபந்தனை ரத்துசெய்யப்படுகிறது.
சுயநிதி பொறியியல் கல்லூரிகள் நடத்தும் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் அவுட் ஆகிவிட்டால், அத் தேர்வுமுழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் அதன்பிறகு, அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வின்அடிப்படையிலேயே சுயநிதி கல்லூரிகள் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்ட நிபந்தனைஏற்கப்படுகிறது.
சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சார்பில் மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வை ஜூலை மாதம் 24, 25-ம்தேதிகளில் நடத்தி, தேர்வு முடிவுகளை 5-ம் தேதிக்கு முன்னதாக வெளியிட வேண்டும் என்று தனது தீர்ப்பில் நீதிபதிமுருகேசன் கூறினார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுய நிதி பொறியியல் மற்றும் மருத்துவர் கல்லூரிகள் சங்கத்தின் சார்பில்அதன் தலைவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி நாளை விசாரிப்பார் என்று தெரிகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications