For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிராவில் முடிந்த ஆஸ்திரேலியா-இலங்கை டெஸ்ட்

By Staff
Google Oneindia Tamil News

கெய்ன்ஸ்:

ஆஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில்முடிவடைந்தது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றது.

Australian teamஆஸ்திரேலியா மற்றும்- இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி கெய்ன்ஸ்நகரில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 517 ரன்கள் குவித்தது. அடுத்த ஆடிய இலங்கை 455ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

62 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலியா 9 விக்கெட்கள் இழப்புக்கு 292 ரன்சேர்த்து டிக்ளேர் செய்தது.

ஆஸ்திரேலியா அணியின் மேத்யூ ஹைடன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்தார் (117 மற்றும் 132). இதுவரை20 சதங்களைக் குவித்துள்ளார் ஹைடன். இலங்கை தரப்பில் உபல் சந்தானா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

355 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி மிகவும் தடுமாறியது.அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்தன. ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களேஎடுத்தது. இதனால் 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி (527 விக்கெட்டுகள்) இலங்கை வீரர் முத்தையா முரளீதரன்படைத்திருந்த சாதனையை வார்னே சமன் செய்தார். வார்னேவின் 527-வது விக்கெட் உபுல் சந்தனா.

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வார்னே தட்டிச் சென்றார். முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாஏற்கனவே வெற்றி பெற்று இருந்தால் 1--0 என்ற கணக்கில் தொடரை அந்த அணி கைப்பற்றியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X