இந்திய அமைச்சரை கேவலப்படுத்திய அமெரிக்கா !
டெல்லி: பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது அமெரிக்கா சென்ற ஜார்ஜ் பெர்னாண்டஸை அந்நாட்டு அதிகாரிகள் விமான நிலையத்தில், இருமுறை உடைகளை அகற்றி சோதனை நடத்தியவிவரம் இப்போது வெளியாகியுள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது, அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றபெர்னாண்டசுக்கு டல்லஸ் விமான நிலையத்தில் இந்தக் கதி ஏற்பட்டது.
இதனை பெர்னாண்டஸ் வெளியில் கூறிக் கொள்ளவில்லை. ஆனால், சமீபத்தில் அமெரிக்கவெளியுறத்துறை முன்னாள் துணை அமைச்சர் ஸ்ட்ரோப் டால்போட் எழுதியுள்ள புத்தகத்தில் இந்தவிவரத்தை வெளியிட்டுள்ளார்.
2002ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு அரசுப் பயணமாக சென்றபோதும், 2003ம் ஆண்டில் பிரேசில்செல்லும் வழியில் டல்லஸ் விமான நிலையத்தில் இறங்கியபோதும் பெர்னாண்டஸ் கடுமையாகசோதனையிடப்பட்டார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் என்பது தெரிந்தும் இச் சோதனைகளுக்கு அவர் உட்படுத்தப்பட்டார்.
இச் சம்பவங்கள் நடந்து சில மாதங்கள் கழித்து பெர்னாண்டசை டெல்லியில் அவரதுஅலுவலகத்தில் ஸ்ட்ரோப் டால்போட் சந்தித்தபோது, மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்களைஅமெரிக்கர்களாக நீங்கள் நடத்தும் விதமே இது தான் என்று பெர்னாண்டஸ் வெறுப்புடன்கூறியதாகவும் தனது புத்தகத்தில் டால்போட் எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகம் வெளியானதி இருந்து இந்த விவகாரம் மெதுவாக பெரிதாகி வருகிறது.
சமீபத்தில் பெங்களூர் வந்த முன்னாள் துணைப் பிரதமர் அத்வானியிடம், உங்களது கட்சியின்ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த பெர்னாண்டசுக்கு அமெரிக்காவில் இந்தக் கதிஏற்பட்டுள்ளதே என்று நிருபர்கள் கேட்டபோது,
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்கர்கள் பாதுகாப்பு விஷயத்தில் தீவிரமாக உள்ளனர்.பெர்னாண்டசின் ஷூக்களை கழற்றிப் பார்த்திருப்பாக்கள், அதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்என்று பதில் கேள்வி கேட்டார் அத்வானி.
ஆனால், ஷூக்களை மட்டுமல்ல, முழு உடலையும் சோதனையிட்டார்கள் என்று டால்போட்கூறியுள்ளார்.
இந் நிலையில் இப்போது இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை அமைச்சர்ரிச்சர்ட் ஆர்மிடேஜ், இச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், பெர்னாண்டசுக்கு இப்படிஒரு நிலை ஏற்பட்டதை அறிந்து அதிர்ந்து போனதாகவும் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று அத்வானியை சந்தித்த பின் நிருபர்களிடம் பேசிய ஆர்மிடேஜ், எனது நண்பர்பெர்னாண்டசுடன் பேசினேன். அவருக்கு நேர்ந்த அவமானத்துக்காக எனது நாட்டின் சார்பில்வருத்தத்தையும் தெரிவித்தேன் என்றார்.
இந் நிலையில் டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெர்னாண்டஸ் உடைகளைக் களைந்து சோதனையிடப்படவில்லை. மெட்டல் டிடெக்டர் கருவியால்சோதனையிடப்பட்டபோது அவரது பையில் இருந்த சாவியால் ஒலி கிளம்பியது. இதையடுத்துபையில் என்ன இருக்கிறது என்று கேட்கப்பட்டது.
இந்திய-அமெரிக்க உறவை வலுப்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர் பெர்னாண்டஸ். அவரைஅமெரிக்கா மறக்க முடியாத நண்பராகவே கருதுகிறது.
அப்படியே, அவருக்கு ஏதாவது தவறு நேர்ந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்றுகூறியுள்ளது.
ஆனால், தன்னை அமெரிக்க விமான நிலையத்தில் அந் நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் மோசமாகநடத்தியது உண்மையே என்று கூறியுள்ள பெர்னாண்டஸ், இனி ஜென்மத்திலும் மீண்டும்அமெரிக்காவுக்குப் போக மாட்டேன் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இன்று தொலைக்காட்சி ஒன்றின் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்,எனது ஆட்சியின்போது அமெரிக்காவில் பெர்னாண்டசுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டது குறித்துஎனக்குத் தெரிய வரவேயில்லை என்றார்.