For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 இந்தியர்கள் தலைக்கு இன்றிரவு 8.30 வரை கெடு நீட்டிப்பு

By Staff
Google Oneindia Tamil News

பாக்தாத்:

Indian hostage at gun pointதங்கள் பிடியில் இருக்கும் 3 இந்தியர்களின் தலைக்கு நேற்றிரவோடு முடிவடைந்த கெடுவை இன்றிரவு 8.30 மணிவரை இராக்கிய தீவிரவாதிகள் நீட்டித்துள்ளனர்.

இதற்கிடையே, தீவிரவாதிகளின் நிபந்தனைப்படி குவைத் நிறுவனம் இராக்கில் இருந்து வெளியேற ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த மாதம் 21ம் தேதி 3 இந்தியர்கள் உள்பட 7 பேரை சிறை பிடித்தனர் இராக்கைச் சேர்ந்த கருப்புக் கொடிகள்என்ற தீவிரவாதிகள். இவர்கள் இராக்கில் அமெரிக்கப் படையினருக்கு உணவு சப்ளையில் ஈடுபட்டிருக்கும்குவைத்தைச் சேர்ந்த கல்ப் லிங்க் நிறுவனத்தின் லாரி டிரைவர்களாகவர்.

இவர்களை விடுவிக்க வேண்டுமானால், கல்ப் லிங்க் நிறுவனம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், பலூஜாவில்அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்ட 250 ஈராக் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும், குவைத்சிறையில் இருக்கும் இராக் வீரர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற நிபந்ைதனைகளை தீவிரவாதிகள்விதித்தனர்.

Iraqi negotiator Dulaimiதங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் 7 பேரையும் ஒவ்வொருவராக கொல்லப் போவதாக தீவிரவாதிகள்மிரட்டல் விடுத்தனர். இதற்கு கெடுவும் விதித்தனர். மேலும் தங்களுடன் இந்தியாவும், கல்ப் லிங்க் நிறுவனமும்பேச்சு நடத்த வசதியாக துலாய்மி என்ற தூதரையும் நியமித்தனர்.

அவருடன் பேச்சு நடத்தப்பட்டதன் விளைவாக இந்தியர்களின் தலைக்கு விதிக்கப்பட்ட கெடுவை இரண்டு முறைதீவிரவாதிகள் நீட்டித்தனர். இன்று மூன்றாவது முறையாக கெடுவை நீட்டித்துள்ளனர். துலாய்மியுடன் குவைத் லாரிநிறுவனம் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறது. துலாய்மிக்கு உதவியாக ஓமன் நாட்டு இந்திய தூதர் தல்மீஸ்அகமதுவும் நேற்றிரவு சிறப்பு விமானத்தில் பாக்தாத் அனுப்பப்பட்டார்.

இன்று அதிகாலை பாக்தாத் சென்ற அவர் துலாமியுடன் இணைந்து குவைத் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தையில்ஈடுபட உள்ளார். இந் நிலையில் இராக்கில் இருந்து வெளியேறவும், பலூஜா நகரில் அமெரிக்கப் படையினரால்கொல்லப்பட்ட 250 குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் குவைத் லாரி நிறுவனம் ஒப்புக் கொண்டது.

இந்தக் தகவல் துலாய்மி மூலமாக தீவிரவாதிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியர்களின்தலைக்கு கெடுவை தீவிரவாதிகள் நீட்டித்துள்ளனர்.

The Iraqi militants with Indian and kenyan, Egyptian hostagesஅதே நேரத்தில் குவைத் சிறையில் இருக்கும் இராக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையைநிறைவேற்ற முடியாத நிலை இருப்பதாக குவைத் நிறுவனம் தீவிரவாதிகளிடம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தீவிரவாதிகளுடன் மீண்டும் ஒரு சுற்று பேச்சு நடத்தப்படும் என்றும்துலாய்மி அறிவித்துள்ளார்.

இந் நிலையில், குவைத் நிறுவனம் தனது லாரிகளை இராக்கில் இருந்து வெளியேற்ற ஆரம்பித்துவிட்டதாகவும்தெரிகிறது. அதே நேரத்தில் பணயக் கைதிகளாக உள்ள தனது ஊழியர்கள் 7 பேரும் பத்திரமாக திரும்பி வந்தபின்னரே நஷ்டஈட்டுத் தொகையைத் தருவது குறித்து முடிவெடுப்போம் என்று அந்த நிறுவனம் கூறிவிட்டது.

இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் அகமத், கெடுவை தீவிரவாதிகள்நீட்டித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பேச்சு நடந்து வருவதால் கெடுவை ஒட்டுமொத்தமாக நீக்கதீவிரவாதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X