For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாஸ் ஏன்ஜெல்ஸ்: ஒன் நைட் பார் இந்தியா

By Staff
Google Oneindia Tamil News

இந்தியாவில் எய்ட்ஸ், டிபி, மலேரியா நோய்களுக்கு எதிரான உலகளாவிய நிதி திரட்டும்முயற்சியின் ஒரு பகுதியாக லாஸ் ஏன்ஜெல்சில் இந்திய மேற்கத்திய இசைக் கலைஞர்களின் ஒன்நைட் பார் இந்தியா என்ற கூட்டு இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

One night for india Logoஆகஸ்ட் 21ம் தேதி நடக்கும் இந்த நிகழ்ச்சியின் மூலம் வசூலாகும் நிதி, UCLA AIDS Institute மற்றும்ஒன் நைட் பவுண்டேசன் மூலமாக இந்தியாவில் நோய்க் கட்டுப்பாட்டுக்காகசெலவிடப்படவுள்ளது.

லாஸ் ஏன்ஜெல்ஸ் நிகழ்ச்சியில் கர்ஷ் காலே, நிதின் சானே, நிக்கி பெஞ்சமின், டினா சுகந்த், செப் சபாஉள்ளிட்டோரும், மேற்கத்திய இசைக் கலைஞர்களான மைக்கேல் பிராஞ்ச், கிம்பர்லி லோகேஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஹாலிவுட் கலைஞர்களும் இந்திய சமூக மற்றும் தொழில்துறை முன்னணி பிரமுகர்களும் இதில்பங்கேற்கவுள்ளனர். வில்டர்ன் எல்.ஜி. தியேட்டரில் நடக்கும் இந் நிகழ்ச்சியில் 2,400 பேர் மட்டுமேஅனுமதிக்கப்படவுள்ளனர்.

இந்த இசை நிகழ்ச்சியை உலகம் முழுவதும் டிவிக்களில் பின்னர் ஒளிபரப்பவும்திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கான டிக்கெட் கட்டணம் 35 டாலரில் இருந்து 105 டாலர் வரை. விஐபி பேக்கேஜ் டிக்கெட்விலை 500 டாலரில் இருந்து 1,000 டாலர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியைக் காணவும், அதன்மூலம் இந்தியாவின் நோய் எதிர்ப்புத் திட்டங்களுக்கு உதவவும்விரும்புவோர், www.onenightforindia.com இணையத் தளத்தின் மூலமாக டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

உலகில் தென் ஆப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக எய்ட்ஸ் தாக்குதல் அதிகமுள்ள நாடு இந்தியா.இங்கு தற்போது 45 லட்சம் எஸ்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். இதைக் கட்டுப்படுத்தத் தவறினால்வரும் 2020ல் இந்த எண்ணிக்கை 2.5 கோடியாக உயரும் அபாயம் உள்ளதாக உலக நல அமைப்புஎச்சரித்துள்ளது.

எய்ட்ஸ் நோய்க்கு வாக்சீன் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள UCLA AIDSInstitute, ஒன் நைட் பவுண்டேசன் மூலமாக இந்தியாவுக்கு உதவவும் முன் வந்துள்ளது.

இந்த அமைப்புகளுடன் அமரேடியா மற்றும் ஹாலிபாலி புரடொக்ஷன்ஸ் ஆகியவையும் இணைந்துஒன் நைட் பார் இந்தியா என்ற இந்த இசை நிகழ்ச்சியை நடத்தி இந்திய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக்காகநிதி திரட்டுகின்றன.

இந் நிகழ்ச்சி மற்றும் இந்த அமைப்புகளின் முயற்சிகள் குறித்த முழு விவரங்களைப் பெறகீழ்கண்டோரை தொடர்பு கொள்ளலாம்.

Pawan Mehra
Ameredia
415.618.0212
[email protected]

Sam Jhans
Ameredia
415.618.0212
[email protected]

Lindsay Hurtt
One Night for India
310-903-3697
[email protected]

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X