For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் கடத்தல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த பெண் கவுன்சிலரையும் அவரது மகளையும்அதிமுகவினர் கடத்திச் சென்று விட்டதாக அவரது கணவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்தக் கடத்தலைஎதிர்த்து காங்கிரசார் நடத்திய தர்ணா போராட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால் ராயபுரத்தில்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ராயபுரம் 19வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் தெய்வநாயகி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர்சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார்.

இந் நிலையில் சுதந்திர தினத்தையொட்டி காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சிக்குதனது கணவருடன் வந்த தெய்வநிாயகி, கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் முன்னிலையில் மீண்டும் காங்கிரஸில்இணைந்தார்.

ஆனால், நேற்று மாலை முதல் தெய்வநாயகியையும், அவரது மகள் தமிழ்ச் செல்வியையும் (5 வயது)காணவில்லை. அவர்களை அதிமுகவினர்தான் கடத்திச் சென்றிருக்க வேண்டும் என தெய்வநாயகியின் கணவர்ராஜன் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சேர்ந்து தனது மனைவி மற்றும் மகளை கடத்திச் சென்றதாக தனது புகாரில் அவர்தெரிவித்துள்ளார். ஆனால், இந்தப் புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ தலைமையில் காங்கிரசார் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதையடுதத்து அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி, மனோ உள்பட 10 பேரை கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஏராளமான காங்கிரசார் காவல் நிலையத்தின் முன் குவியவே கைதானவர்களை போலீசார் விடுவித்தனர்.

பெண் கவுன்சிலர் மகளுடன் கடத்தப்பட்டது, தர்ணா, கைதுகள், தடியடியால் ராயபுரம் பகுதியில் பரபரப்புநிலவுகிறது.

இதற்கிடையே பெண் கவுன்சிலர் கடத்தப்பட்டது குறித்து காவல்துறை ஆணையருடன் காங்கிரஸ் தலைவர் வாசன்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது இன்று இரவுக்குள் இருவரையும் மீட்கநடவடிக்கை எடுப்பதாக கமிஷ்னர் உறுதியளித்ததாகத் தெரிகிறது.

இந் நிலையில் அதிமுக கவுன்சிலர் வெற்றிவேலின் ஆதரவாளர்கள் தான் தனது மனைவி, மகளைக்கடத்தியுள்ளதாக ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

மாநகராட்சியில் அதிமுகவுக்கு 76 கவுன்சிலர்களும், எதிர்க் கட்சிகளுக்கு 74 கவுன்சிலர்களும் உள்ளனர். இப்போதுதெய்வநாயகி காங்கிரசில் இணைந்துள்ளதால் இரு தரப்பினருமே சம பலத்தை அடைந்துள்ளனர். இதனால் துணைமேயர் உள்ளிட்ட மாநகராட்சியின் ஆட்சிப் பொறுப்பை அதிமுக இழக்கும் நிலையில் உள்ளது.

இதனாலேயே அவர் கடத்தப்பட்டுள்ளதாக காங்கிரசார் கூறுகின்றனர்.

இன்று நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் வாசன்,

கவுன்சிலர் கடத்தப்பட்ட விஷயத்தில் போலீசாரிடம் இருந்து பொறுப்பான பதில் கிடைக்கவில்லை. இந்தக்கடத்தலே அதிமுகவினரால் தான் நடத்தப்பட்டுள்ளது. தெய்வநாயகியுடன் அவரது மகளும் கடத்தப்பட்டுள்ளார்.அவருக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாக கணவர் அஞ்சுகிறார்.

சுதந்திர தினத்தன்று ஒரு கவுன்சிலரே சுதந்திரமாக நடமாட முடியாத அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளது. தெய்வநாயகியை மீட்க போலீஸ் தவறுமானால் மாபெரும் போராட்டத்தில் காங்கிரஸ்இறங்கும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X