For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாறனுக்கு தபால் தலையா?: ஜெ. ஆச்சரியம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நாட்டுக்கு எந்த சேவையும் செய்யாத முரசொலி மாறனுக்கு எதற்கு நினைவு தபால் தலைவெளியிட்டார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

Karunanidh and Sonia in Stamp release functionஅவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சமீபத்தில் மத்திய கப்பல்போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு சென்னை துறை முகத்தில்தனது துறையின் சார்பில் விழா நடத்தி, அதில் எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத கருணாநிதியைசிறப்பு விருந்தினராக அழைத்தார். கருணாநிதியும் அதில் கலந்து கொண்டார். எந்தத் தகுதியின் கீழ்கருணாநிதி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்றே தெரியவில்லை.

இப்போது மீண்டும் ஒரு மத்திய அரசு விழாவை தனது குடும்ப விழாவாக மாற்றியிருக்கிறார்கருணாநிதி.

குடும்ப நாடங்கங்களின் வரிசையில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனைகெளரவிக்கும் வகையில் அவரது நினைவு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி திமுகதலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தேறியிருகிறது.

மத்திய தபால்துறையால் வெளியிடப்படும் அஞ்சல் தலை இப்படியா வெளியிடப்பட வேண்டும்?

இந்த நிகழ்ச்சிக்கான சுமார் ஒரு லட்சம் அழைப்பிதழ்களை அஞ்சல் தலை ஒட்டாமலேயேதிமுகவினருக்கு இலவசமாக வினியோகிக்குமாறு தபால்துறை ஊழியர்களைகட்டாயப்படுத்தியுள்ளனர். அரசு விளம்பரம் வெளியிடுவதில் சிக்கனத்தைப் பற்றி உபதேசம்செய்யும் கருணாநிதி, இந்த விழாவுக்கான விளம்பரங்கள் குறித்து கவலைப்பட்டாரில்லை.

இந்த நிகழ்ச்சிக்கான விழா அழைப்பிதழும் இது ஒரு குடும்ப விழா என்பதை எடுத்துக்காட்டிவிட்டது. ஸ்டாலின் வரவேற்புரையாற்ற, கருணாநிதி முக்கிய உரையாற்ற, கருணாநிதியின்குடும்பப் பாதுகாவலாரான ஆற்காடு வீராசாமி நன்றி நவில இது ஒரு குடும்ப விழா என்பதுபறைசாற்றப்பட்டுவிட்டது.

இந்த குடும்ப நிகழ்ச்சி, மத்திய அரசு விழாவாக அரசு செலவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில்கெளரவ விருந்தினராக பங்கேற்ற சோனியா காந்திக்கு கருணாநிதி மற்றும் மாறனின் குடும்பவரலாறு நன்றாகவே தெரியும்.

தோல்வியடைந்த தோஹா உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில், மாறன் பேசிய பேச்சை வைத்துஅவரை ஒரு பொருளாதார வித்தகராகப் புகழ்வது வியப்பைத் தருகிறது. அந்த தோஹா மாநாடேதோல்வியைத் தழுவிட்டது தான் உண்மை நிலை.

அந்த ஒரு நிகழ்ச்சியைத் தவிர நாட்டுக்காக வேறு எந்த நல்ல முயற்சியையும் எடுக்காத மாறனுக்குஅஞ்சல் தலை வெளியிட்டு கெளரவப்படுத்துகிறார் சோனியா.

அஞ்சல் தலை வெளியீடு என்பது மிக முக்கியமான நிகழ்ச்சி. அந்த வகையில்கெளரவப்படுத்தப்படுபவர் அவர் பங்கேற்ற துறையில் சாதனை படைத்தவராக இருக்க வேண்டும்.

ஆனால், தந்திர அரசியல், பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாறனுக்கு இந்த விழாநடத்தப்பட்டுள்ளது.

தேசிய கட்டுமானப் பணியில் எந்தப் பங்களிப்பும் இல்லாத முரசொலி மாறனுக்கு அஞ்சல் தலைவெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை சோனியாவின் ஆசியோடு திமுக தான்நடத்தியிருக்கிறது. இதன்மூலம் மகாத்மா காந்தி, அம்பேத்கர் போன்ற நாட்டின் நிர்மாண சிற்பிகளின்வரிசையில் மாறன் இடம் பெற்றுவிட்டார் என்று நாம் நம்ப வேண்டுமாம் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.

மத்திய தபால்துறை அமைச்சர் பொறுப்பை தயாநிதி மாறன் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில், மேடையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுகதலைவர் கருணாநிதி, முரசொலி மாறனின் மனைவி மல்லிகா, மகன்களான தயாநிதி மாறன், கலாநிதிமாறன், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய சோனியா, தமிழக மக்களின் அமோக ஆதரவோடு 40 தொகுதிகளையும் எங்கள்கூட்டணி வென்றதால் தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடிந்தது. இதற்காக தமிழக மக்களுக்கு நன்றிதெரிவித்துக் கொள்கிறேன்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சென்னை கடல்நீர் குடிநீராக்கும் திட்டம், சேது சமுத்திரத் திட்டம்ஆகியவை விரைவில் நிறைவேற்றப்பட அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.

பொடா சட்டம் இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே ரத்து செய்யப்படும்.

மாறன் விட்டுச் சென்ற பணிகளை, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அவரது மகன்தயாநிதி மாறன் தொடர்கிறார் என்றார்.

முன்னதாக நடந்த முரசொலி மாறன் சிலை திறப்பு நிகழ்ச்சியில் ரஜினி மன்றத் தலைவர்சத்யநாராயண ராவும் கலந்து கொண்டு அரசியல் புருவங்களை உயரச் செய்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X