For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தடகளம்: இந்தியா மோசமான தொடக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ஏதென்ஸ்:

ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது.

ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தடகள போட்டிகள் இன்று தொடங்கின. குண்டு எறிதலில் இந்தியாவின் சார்பில் பகதூர்சிங் கலந்து கொண்டார். ஆனால் போட்டியில் வழங்கப்படும் மூன்று வாய்ப்புகளில் ஒன்றில் கூட விதிகளுக்குஉட்பட்டு அவர் குண்டை வீசவில்லை. இதையடுத்து தகுதி சுற்றில் கடைசி இடத்தைப் பிடித்து போட்டியில் இருந்துவெளியேறினார்.

நீச்சலில் தோல்வி:

மகளிருக்கான 100 மீட்டர் பெண்கள் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் இந்திய வீராங்கனை சிகா டாண்டன்தோல்வியுற்றார். இன்று நடந்த தகுதி சுற்றுப் போட்டியில் 100 மீட்டர் தூரத்தை 59.70 விநாடிகளில் கடந்து,சிகாவினால் ஏழாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டஒரே ஒருவர் சிகாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரீனா குமாரி தோல்வி:

வில்வித்தையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ரீனா குமாரி சீனாவின் சி சூ யுவானிடம் 148-166என்ற புள்ளிக் கணக்கில் தோற்றார்.

களமிறங்குகிறார் மல்லேஸ்வரி:

கடந்த ஒலிம்பிக்கில் 69 கி.கி., பிரிவில் வெண்கலம் வென்ற மல்லேஸ்வரி, இம் முறை 63 கி.கி. பிரிவில்பங்கேற்கிறார். 63 கி.கி. பிரிவில் இந்தியாவின் சார்பில் மற்றொரு வீராங்கனையான பிரிதிமா குமாரியும்பங்கேற்கிறார்.

கா-லி--று-திக்-கு ப-யஸ், பூ-ப-தி த-கு-தி:

ஒலிம்பிக் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் காலிறுதிக்கு இந்தியாவின் பயஸ் - பூபதி இணை தகுதி பெற்றது.

இரண்டாவது சுற்று ஆட்டத்தில் , ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் சுவிஸ் வீரர் ரோஜர்பெடரர், அவரது சக வீரர் வெஸ் அலெக்ரோ இணையை எதிர்த்து பயஸ், பூபதி இணை விளையாடியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-2 , 7-6 என்ற நேர் செட்களில் பயஸ், பூபதி இணை வெற்றி பெற்றது. இந்தவெற்றி மூலம் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ஹாக்கியில் வெற்றி

ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியா, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.

ஹாலந்துக்கு எதிரான முதல் போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் தோற்ற இந்தியா, தென் ஆப்ரிக்காவுடனானபோட்டியில் அபாரமாக விளையாடியது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் தென் ஆப்ரிக்கா ஆதிக்கம் செலுத்தியது. 8, 12வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டுகோல்களை அடித்தது. முதல் பாதி முடிவில் அந்த அணி 2-1 என்ற முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் நமது வீரர்கள் மேலும் ஒரு கோல் அடித்து சமன் செய்தார். ஆட்டத்தின் கடைசி ஐந்துநிமிடங்களில் நமது வீரர்கள் மிக அற்புதமாக விளையாடி, 2 கோல்கள் அடுத்தடுத்து அடித்து வெற்றி பெற்றனர்.

பாட்மின்டனில் தோல்வி:

பாட்மின்டன் ஆடவர் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் நிகில் கனிட்கர் டென்மார்க்கின் பீட்டர்கேடிடம் 10-15, 6-15 என்ற நேர் செட்களில் தோல்வியை தழுவினார்.

துப்பாக்கி சுடுதலில் வெள்ளி பதக்கம்:

ஒலிம்பிக் போட்டி வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் (24) இந்தப் பதக்கத்தை வென்றார். இந்தியா பெறும்முதல் வெள்ளிப் பதக்கம் இது தான்.

இந்திய ராணுவத்தின் முன்னாள் மேஜரான சிங், டபுள் ட்ராப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 179புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

ஐக்கிய அரபு நாடுகளின் ஷேக் அகமத் அல்-மக்தும் 189 புள்ளிகள் வென்று தங்கப் பதக்கத்தைவென்றார். சீனாவின் வாங் ஷாக் வெண்கலம் வென்றார்.

பதக்கப் பட்டியல்: டாப் 10

1. சீனா- 10 தங்கம்- 6 வெள்ளி- 2 வெண்கலம்

2. அமெரிக்கா 6- 7- 6

3. ஆஸ்திரேலியா 6- 3- 5

4. ஜப்பான் 6- 2- 1

5. உக்ரைன் 3- 1- 1

6. ரஷ்யா 2- 5 -5

7. இத்தாலி 2- 3- 2

8. பிரான்ஸ் 2- 2- 4

9. கிரீஸ் 2- 0- 1

10. ருமேனியா 2- 0- 1

இந்தியா ஒரு வெள்ளியுடன் பதக்கப் பட்டியலில் 26வது இடத்தில் உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X