For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உமா பாரதி கைதாகிறார்: ராஜினாமா ஏற்பு

By Staff
Google Oneindia Tamil News

போபால்:

மத்தியப் பிரதேச முதல்வர் உமா பாரதியைக் கைது செய்ய கர்நாடக போலீஸ் படைவிரைந்துள்ளதையடுத்து, அவர் இன்று தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் வழங்கவுள்ளார்.

தனக்கு எதிராக கர்நாடக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து முதலில் தனதுராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் உமா கொடுத்தார்.உண்மையிலேயே ராஜினாமா செய்வதாக இருந்தால் கடிதத்தை கவர்னரிடம் தான் உமா பாரதிஅளித்திருக்க வேண்டும் என காங்கிரஸ் கூறியது.

வாஜ்பாய்-அத்வானி ஆலோசனை:

இந் நிலையில் உமாவின் ராஜினாமா குறித்து இன்று பாஜக நாடாளுமன்றக் குழு கூடி விவாதித்தது.இதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி, நாயுடு, சுஷ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷிஉள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதில், கர்நாடக போலீசார் கைது செய்ய வந்து கொண்டிருப்பதால், உமா ராஜினாமா செய்வதைத்தவிர வேறு வழியில்லை என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கவர்னரிடம் ராஜினாமா கடிதத்தைத் தருமாறு உமா பாரதிக்கு பாஜக தலைமை உத்தரவுபிறப்பித்தது. இன்றே அவருக்கு பதிலாக வேறோருவர் முதல்வராகத் தேர்வு செய்யப்படுவார்என்றும், இதற்காக பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அருண் ஜேட்லி முன்னிலையில்நடக்கும் என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஜேட்லி இன்று போபால் சென்று உமா பாரதியை சந்தித்துப் பேசினார்.

கர்நாடக போலீஸ் படை:

இதற்கிடையே உமா பாரதியைக் கைது செய்ய தார்வாட் மாவட்ட எஸ்.பி. ரூபா தலைமையில் ஒருபெண் சப்-இன்ஸ்பெக்டர், இரு இன்ஸ்பெக்டர்கள் கொண்ட போலீஸ் படை மத்தியப் பிரசேத்துக்குவிரைந்துள்ளது.

போபாலுக்கு நேரடியாக விமானம் இல்லாததால் பெங்களூரில் இருந்து அந்தப் படை இன்று காலைமும்பை போய்ச் சேர்ந்தது. அங்கிருந்து இந்தப் படை போபாலுக்கு விமானத்தில் செல்கிறது.அவர்களிடம் உமா பாரதி சரணடைவார் என்று தெரிகிறது.

புதிய முதல்வர்:

இதற்கிடையே உமா பாரதியின் நெருங்கிய சகாவான ம.பி. உள்துறை அமைச்சர் பாபுலால் கெளர்அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது.

இந் நிலையில் டெல்லியில் நிருபர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் தரம் சிங்,

மதக் கலவரத்தைத் தூண்டிவிட்டதாக உமா பாரதி மீது போடப்பட்ட வழக்கில் இதுவரை 18 முறைநீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துவிட்டது. ஆனால், மத்தியப் பிரதேச போலீசாரின்ஒத்துழைப்பு கிடைக்காததால் அவரைக் கைது செய்ய முடியவில்லை.

இதனால் தான் எங்கள் மாநில போலீசாரை அங்கு போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்றார்.

உமாபாரதி மனு நிராகரிப்பு:

இதற்கிடையே தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி உமா பாரதி ஹூப்ளி நீதிமன்றத்தில்தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதனால் அவரது கைது நிச்சயமாகிவிட்டது.

நாடாளுமன்றத்தில் அமளி:

இந்த விவகாரத்தை பா.ஜ.க. இன்று மக்களவையில் கிளப்பியது. ஒரு மாநில முதல்வரை இன்னொருமாநில போலீசார் கைது செய்யும் சம்பவம் நாட்டில் இதுவரை நடந்ததில்லை. தேசியக் கொடிஏற்றியதற்காக இந்த தண்டனையா என்று கேட்டார் பா.ஜ.கவின் விஜய் குமார் மல்ஹோத்ரா.

அவருக்கு பதிலளித்த காங்கிரஸ் எம்.பிக்கள், தேசியக் கொடி ஏற்றியதற்காக அல்ல. மதக்கலவரத்தைத் தூண்டி அப்பாவி உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்ததற்காக என்றனர்.இதையடுத்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் நோக்கி கோஷமிட்டபடி இருந்தனர். அவையில்பெரும் அமளி நிலவவே அதை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஒத்தி வைத்தார்.

அதே போல மாநிலங்களவையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான சாவர்க்கர் விவகாரத்தைவைத்து பா.ஜ.கவினர் அமளியில் ஈடுபட்டனர். சாவர்க்கரை கேவலமாகப் பேசிய அமைச்சர்மணிசங்கர அய்யர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர்.

இதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சனை உருவாகி அமளி ஏற்பட்டது.இதையடுத்து ராஜ்யசபாவை ஒத்தி வைத்தார் பைரோன் சிங் ஷெகாவத்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X