அதிமுக எம்பிக்கு நீதிபதிகள் கடும் கண்டனம்
சென்னை:
மத்திய அரசின் தணிக்கை அதிகாரி தீர்த்தனுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி தலைமையிலான பெஞ்சுக்கு மாற்ற வேண்டும் என்று அதிமுக கோக்கைவிடுத்துள்ளது.
தமிழக அரசின் ஆண்டுக் கணக்கு விவரங்கள் குறித்து சமீபத்தில் தீர்த்தன் பத்திரிக்கையாளர் கூட்டத்தில்விலாவாரியாக விவரித்தார். இதில் மாநில அரசால் ரூ. 11,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.இதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் தீர்த்தனின் பேட்டியை எதிர்த்து அதிமுக எம்.பி. பி.ஜி.நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது.
தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி தலைமையிலான பெஞ்ச் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்தவழக்கை நீதிபதிகள் அசோக் குமார், கற்பக விநாயகம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கும் என்று சுபாஷன்ரெட்டி அறிவித்தார்.
பின்னர் நீதிபதிகள் அசோக் குமார், கற்பக விநாயகம் ஆகியோர் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு விசாரிக்கஆரம்பித்தனர். அப்போது நாராயணன் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தீர்த்தன் மீதான இந்த வழக்கை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி தலைமையிலான பெஞ்ச்சே தொடர்ந்துவிசாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு நீதிபதிகள் அசோக் குமாரும், கற்பக விநாயகமும் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஒரு வழக்கைகுறிப்பிட்ட நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என்று கூறிய அவர்கள்,இருப்பினும் இந்தக் கோரிக்கை தொடர்பாக தலைமை நீதிபதிதான் முடிவெடுக்க வேண்டும் என்று அறிவித்தனர்.
இதையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை நகர மேம்பால ஊழல் வழக்கில், திமுக மேயராக அப்போது இருந்த மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டபோது, அவருக்கு சாதகமாக அப்போதைய சென்னை செஷன்ஸ் நீதிபதியாக இருந்த அசோக் குமார் நடந்துகொண்டதாக அதிமுக புகார் கூறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டு செசன்ஸ் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அசோக்குமாரின்வீட்டில் நள்ளிரவில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அந்தக் கைது நடத்தப்பட்ட விதத்தையும், கருணாநிதியைபோலீசார் நடத்திய விதத்தையும் அசோக்குமார் கடுமையாக கண்டித்திருந்ததும் நினைவுகூறத்தக்கது.
இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தின்போது அசோக்குமாரின் பெயரை பரிந்துரைப் பட்டியலில்இருந்து நீக்கவும் தமிழக அரசின் சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகப் பேசப்பட்டது. ஆனால், அதையும் மீறிஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியால் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் அசோக்குமார்.
இதற்கிடையே தமிழக அரசு தனது ஆண்டுக் கணக்கு வழக்கு விவரத்தை தனது இணையத் தளத்தில்விரிவாக வெளியிட்டுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications