கீதையை அவமதித்துவிட்டார் கருணாநிதி: பா.ஜ.க.
சென்னை:
கண்ணனையும், பகவத் கீதையையும் விமர்சனம் செய்த திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக போராட்டம்நடத்தப் போவதாக பாஜக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக் கட்சியின் மாநில செயலாளர் எச்.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாஜக கூட்டணியில் இருந்தபோது, நான் இந்துக்களுக்கு விரோதி அல்ல. திமுக கடவுள் மறுப்பு இயக்கமும் அல்லஎன்றெல்லாம் பேசிய கருணாநிதி, கடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றி காரணமாக இப்போது இந்துமதத்தை மறுபடியும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்.
கிருஷ்ண ஜெயந்திக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து கூறியது கண்டு பொறுக்காமல் பகவத் கீதையை பற்றியும்கண்ணனைப் பற்றியும் நா கூசுகிற வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
கிருஷ்ண ஜெயந்திக்கு பிரதமர் மன்மோகன்சிங் கூட வாழ்த்து தெரிவித்தார். ஆனால் கிறிஸ்தவ, முஸ்லீம்பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லும் பழக்கம் கொண்டிருக்கும் கருணாநிதி, கடந்த 5 வருடங்களாகக்கிடப்பில் போட்டிருந்த, இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தும் பழக்கத்தை இப்போது மீண்டும் கையில்எடுத்துள்ளார்.
பகவத் கீதையின் மறுபக்கத்தை படித்து விட்டு பெரியாரின் 125-வது ஆண்டு விழாவை கொண்டாடுங்கள் என்றுஅவர் கூறியுள்ளார். அந்த விழாவைக் கொண்டாடுவதற்கு முன்பு பெரியாரின் மறுபக்கத்தையும், கருணாநிதியின்மறுபக்கத்தையும் பற்றி மக்கள் தெரிந்து கொண்டு முடிவு செய்வார்கள்.
கண்ணனை விமர்சித்த கருணாநிதிக்கு ஏசுநாதரைப் பற்றியோ, முகமது நபியைப் பற்றியோ விமர்சித்து பேசும்தைரியம் இருக்கிறதா? அவர் திமுக தலைவர் மட்டுமல்ல இந்து விரோத சக்திகளின் தலைவர் என்பதையும் தனதுஅறிக்கையில் நிரூபித்து இருக்கிறார்
கருணாநிதியின் இந்து விரோத நிலைப்பாட்டை காங்கிரசும் ஏற்று கொள்கிறதா என்பதை அக்கட்சியின் தலைவர்வாசன் தெளிவு படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அக் கட்சியும் இந்து விரோத கட்சியாக கருதப்படும்.
இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் கருணாநிதியின் செயல்பாடுகளைக் கண்டிக்கும் வகையில்போராட்டம் நடத்த கட்சி நிர்வாகிகள் விரைவில் கூடி முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார்.
மகாபாரதத்தில் ஜாதிகளை நிர்ணயிக்கும் வர்ணாஸ்ரம தர்மம் தூக்கிப் பிடிக்கப்படுவதாகக் கூறியுள்ள கருணாநிதி,அது தொடர்பாக திக தலைவர் கி.வீரமணி எழுதியுள்ள புத்தகத்தில் இருந்து சில வரிகளை சுட்டிக் காட்டியிருந்தார்.மேலும் ஜாதி பேதங்களுக்கு எதிரான பெரியாரின் வழி வந்த திராவிடக் கட்சியின் தலைவராக இருந்து கொண்டுகிருஷ்ண ஜெயந்திக்கு முதல்வர் ஜெயலலிதா எப்படி வாழ்த்துத் தெரிவிக்கலாம் என்றும் கருணாநிதி கேள்விஎழுப்பியிருந்தார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications