கர்நாடகத்துக்கு எதிராக திமுக கூட்டணி தீர்மானம்
சென்னை:
காவிரி நடுவர் மன்றத்தைக் கலைக்க கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை அனுமதிக்கக் கூடாது என்றுமத்திய அரசை வலியுறுத்தி சென்னையில் நடந்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் தலைமையில் இன்று காலை இக் கூட்டம்நடந்தது.
இதில், திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, இந்தியகம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், மதிமுக அவைத்தலைவர் எல்.கணேசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் நிதியமைச்சர் ப. சிதம்பரம், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுக மத்திய அமைச்சர்கள்ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி,
காவிரி நடுவர் மன்றத்தை கலைக்க கர்நாடகம் எடுக்கும் முயற்சிகளை அனுமதிக்கக் கூடாது, நதிகளைஇணைக்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தென்னக நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
திமுக எம்.பி. செ.குப்புசாமி தலைமையில் 7 பேர் கொண்ட செயலாக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுதமிழக திட்டங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட இலாகாக்களின் மத்திய அமைச்சர்களை சந்தித்து அதை விரைந்துநிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும். தேவைப்பட்டால் பிரதமரையும் இக் குழு சந்திக்கும்.
காவிரி நீர்ப் பிரச்சினையில் மத்திய அரசிடம் பொறுப்பை கொடுத்து விட்டு மாநில அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்கக் கூடாது. மத்திய அரசு மீது பழி போடக் கூடாது.
எம்.பிக்கள் தொகுதி நிதியிலிருந்து நலத் திட்டப் பணிகளுக்காக ஒதுக்கப்படும் பணத்தை தமிழக அரசுபயன்படுத்தாமல் இருப்பது குறித்து எம்.பிக்கள் புகார் தெரிவித்தனர். மக்களைப் பற்றி கவலைப்படுகிற அரசாகஇருந்தால் மத்திய அரசுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு தரும். இது தொடர்பாக மத்திய அரசு தமிழக அரசுக்குஅறிவுரை வழங்கியுள்ளது.
தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்கும் மத்திய அரசின் ஆணை இன்னும் இரு வாரத்திற்குள் வெளியாகும்.இது குறித்து மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் கடிதம் எழுதியுள்ளார். பொடா சட்டம் விரைவில் ரத்துசெய்யப்படும்.
ஆளுநரை மாற்றக் கோரி நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை என்றார் கருணாநிதி.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications