For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விநாயகர் சதுர்த்தி: சென்னையில் பலத்த பாதுகாப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விஷமிகள் நாச வேலைக்குத் திட்டமிட்டுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்துபலத்த பாதுகாப்புக்கு காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

வருகிற 18ம் தேதி தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் தமிழகத்தில்பதற்றம் நிறைந்த பகுதிகளாக அறியப்பட்டுள்ள சென்னை, கோவை மற்றும் முக்கிய நகரங்கள் அனைத்திலும் கடும்பாதுகாப்புக்கு காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

குறிப்பாக சென்னையில் மிக பலத்த பாதுகாப்புக்கு காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக சட்டம்,ஒழுங்குக்கான கூடுதல் டிஜிபி அலுவலகத்திலிருந்து சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்ட காவல்துறைஅலுவலகங்களுக்கு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கட்டளைகள் அனுப்பப்பட்டுள்ளன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று நாச வேலையில் ஈடுபட இஸ்லாமியபாதுகாப்புப் படை என்ற அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் இந்துஇயக்கங்களைச் சேர்ந்தவர்களைத் தாக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

எனவே இந்து இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், முக்கியப் பிரகர்கள் ஆகியோரது உயிருக்கும், உடமைக்கும்ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், விநாயகர் சிலை வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் 2 போலீஸார் 24 மணி நேரம்பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

விநாயகர் சிலை ஊர்வலத்தை பல்வேறு இந்து அமைப்புகள் நடத்துவதால் அவர்களுக்கான பாதைகளைதெளிவாக வரையறுத்துத் தெரிவிக்க வேண்டும். ஊர்வலம் நடக்கும் பாதைகளை காவல்துறையினரே முடிவுசெய்து அறிவிக்க வேண்டும்.

அனுமதி அளிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும். வேறு பாதையில் செல்லஅனுமதிக்கப்படக் கூடாது. விநாயகர் சிலைகள், ஊர்வலம் செல்லும் பாதைகளில் வெடிகுண்டுகள்வைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து தீவிர சோதனை நடத்திட வேண்டும். வாகனங்கள் ஏதும் ஊர்வலத்திற்குள்ஊடுறுவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

விநாயகர் சிலை ஊர்வலங்களை வீடியோ படம் எடுக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது.

கடலில் கரைக்கத் தடை:

இதறிற்கிடையே பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட் விநாயகர் சிலைகளை மெரீனா கடலில் கரைக்க உயர் நீதிமன்றம் விதித்துள்ளதடையை தீவிரமாக அமல்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.

பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்யப்படும் இந்த பிரமாண்டமான சிலைகள் நீரில் கரைவதில்லை. இதனால் இந்த சிலைகளை இரும்புக்கம்பிகளால் போட்டு உடைப்பதும், கிரேன்கள் மூலம் தூக்கி கடலில் எறிவதும் நடந்து வருகிறது. இது ஆன்மிகவாதிகளின்மனம் புண்படச் செய்வதோடு, சிலையில் கரையாத பாகங்கள், வண்ணங்களால் கடற்கரையின் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.

இதனால் கடலில் சிலைகளைக் கரைக்க கடந்த ஆண்டே உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதை கடந்த ஆண்டு போலீசார் சரியானமுறையில் அமல்படுத்தவில்லை. இந் நிலையில் இந்த ஆண்டு தடையை தீவிரமாக அமல்படுத்துவது என காவல்துறை முடிவுசெய்துள்ளது.

பகுதிவாரியாக பெரிய சிலை வைப்பவர்களை அழைத்து போலீசார் இப்போதே பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளனர்.

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலையைத் தவிர்க்கவும், சிலையின் உயரம் 7 அடிக்கு மிகாமலும் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்திவருகின்றனர்.

மேலும் விநாயகர் சிலை ஊர்வலகத்தின்போது குடித்துவிட்டு வருவது, தம் அடித்தபடியே ஊர்வலத்தில் பங்கேற்பது போன்றவற்றைத்தவிர்க்குமாறும் போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X