For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலட்சுமி: சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

Jayalakshmi மேலும் ஜெயலட்சுமிக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

போலீஸ் அதிகாரிகளுடன் தனக்கு இருந்த படுக்கை அறை தொடர்புகள், பணத் தொடர்புகள் உள்பட அனைத்துவிஷயங்களையும் போட்டு உடைத்தார் ஜெயலட்சுமி.

மேலும் தென் மாவட்ட நைனா அமைச்சர், தமிழ் அமைச்சர் ஆகியோருடனும் ஜெயலட்சுமிக்குத் தொடர்புஇருந்ததாகவும், திமுக முக்கியப் புள்ளிக்கும் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ரயிலில் தனி கூபே எடுத்துப் பயணம் செய்த ஒரு அமைச்சருக்கு மதுரையில் இருந்து சென்னை வரை கம்பெனிகொடுத்துள்ளார் ஜெயலட்சுமி. அரசியல் புள்ளிகள் தவிர கோட்டை அதிகாரிகள், தொழிலதிபர்கள்ஆகியோருடனும் ஜெயலட்சுமிக்கு தொடர்பு இருந்து வந்துள்ளது.

இந்த உண்மைகள் வெளிவராமல் தடுக்கும் வகையில் ஜெயலட்சுமிக்கு எதிராக சில மோசடி வழக்குகளைப் பதிவுசெய்துள்ள காவல்துறை அவரைக் கைது செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.

இந் நிலையில் தனது உயிருக்கே கூட ஆபத்து இருப்பதாகவும் கூறியுள்ள ஜெயலட்சுமி, இந்த செக்ஸ், பண,கடத்தல், தொடர்புகள், தன்னுடன் மோதல் ஏற்பட்டவுடன் விபச்சார வழக்கில் கைது செய்தது, தன்னை மும்பைவிபச்சார விடுதியில் விற்க போலீஸ் அதிகாரிகள் முயன்றது ஆகிய அனைத்து விவகாரங்கள் குறித்தும் சிபிஐவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

தனது மகளையும் தனது குடும்பத்தினரையும் போலீஸ் அதிகாரிகள் கடத்திச் சென்று சித்திரவதை செய்ததாகவும்,இந்த விஷயத்தில் முழு உண்மைகளை வெளிக் கொண்டு வர சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றுஜெயலட்சுமியின தந்தை அழகிரி சாமியும் நீதிமன்றத்தில் தனியாக மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியம், நீதிபதி டி.வி. மாசிலாமணி ஆகியோர், ஜெயலட்சுமிவிவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க இன்று உத்தரவிட்டனர்.

சிபிஐ துணை இயக்குனர் அந்தஸ்திலான ஒரு அதிகாரி இந்த விசாரணையை நடத்த வேண்டும் என்றும்உத்தரவிட்டனர்.

Jayalakshmi and Malaisamy தங்கள் உத்தரவில் நீதிபதிகள் கூறியதாவது:

ஒட்டுமொத்த காவல்துறை மீதான இந்த பாலியல் தொல்லை, கடத்தல் புகார்கள் பெரும் கவலை அளிக்கிறது.குற்றம் சாட்டப்பட்டவர்களே போலீஸ் அதிகாரிகள் தான் என்பதால் இதில் சிபிஐ விசாரணை அவசியமாகிறது.

போலீஸ் மீது ஜெயலட்சுமி கூறியுள்ள அனைத்து புகார்கள் குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும். விசாரணை எந்தநிலையில் உள்ளது என்பது குறித்து இரண்டு மாதத்தில் நீதிமன்றத்திடம் சிபிஐ ஒரு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

ஜெயலட்சுமி சுட்டிக் காட்டிய 21 போலீஸ் அதிகாரிகள் மட்டுமல்லாது அவரால் பெயர் வெளியிடப்படாத மற்றஅதிகாரிகள், மற்றவர்கள் குறித்தும் சிபிஐ முழு விசாரணை நடத்த வேண்டும்.

போலீஸ் அதிகாரிகளால் தான் பகடைக்காயக பயன்படுத்தப்பட்டது குறித்தும், பாலியல்ரீதியில் தான்துன்புறுத்தப்பட்டது குறித்தும் ஜெயலட்சுமி தாக்கல் செய்த அபிடவிட்டையே புகாராக எடுத்துக் கொண்டு சிபிஐதனது விசாரணையை ஆரம்பிக்கலாம்.

ஜெயலட்சுமி வீட்டிலேயோ அல்லது தான் விரும்பிய இடத்திலோ தங்கி இருக்கலாம். அவருக்கு போலீசார் உரியபாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த வழக்கில் ஜெயலட்சுமியோ, போலீசாரோ அல்லது குற்றம் சாட்டப்பட்டமற்றவர்களோ எப்போது வேண்டுமானாலும் இந்த நீதிமன்றத்தை அனுகலாம்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.

திமுக மாஜி அமைச்சருடன் ஜெயலட்சுமிக்கு தொடர்பு?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X