For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கைது வாரண்ட்.. நள்ளிரவில் திடீர் நடைபயணம்.. நடுரோட்டில் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Vaikoபோலீஸாரின் தடையை முறியடிக்கும் விதமாக நேற்று நள்ளிரவில் சென்னை நகருக்குள் பாதயாத்திரைமேற்கொண்ட வைகோ, தீவுத் திடல் அருகே கைது செய்யப்பட்டார். சுமார் 7 மணி நேரம் போலீஸ் நிலையத்தில்வைக்கப்பட்டிருந்த அவர் இன்று பகலில் விடுதலை செய்யப்பட்டார்.

சென்னை நகருக்குள் நடைபயணம் மேற்கொள்ள வைகோவுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். ஆனால்,அதையும் மீறி நடை பயணம் நடக்கும் என்று அறிவித்திருந்தார். இன்று காலை நடை பயணமாக சென்னை நகரில்வலம் வந்து மாலையில் தீவுத் திடலில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க இருந்தார் வைகோ.

இந் நிலையில் நேற்றிரவு பரங்கிமலை பொதுக் கூட்டத்தில் வைகோ பேசினார். பின்னர் பரங்கிமலைகன்டோன்மென்ட் திருமண மண்டபத்தில் தங்கச் சென்றார். தொண்டர்களுடன் உணவருந்திவிட்டு தூங்கச்சென்றார்.

கைது வாரண்டுடன் வந்த எஸ்.பி:

நள்ளிரவு 12.15 மணிக்கு செங்கை கிழக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சங்கர் அங்கு வந்தார்.வைகோவை கைது செய்வதற்கான வாரண்ட்டை அவரிடம் தந்தார். ஆனால், எங்கள் பயணம் அமைதியாகஇருக்கும். யாருக்கும் சிறு தொல்லையும் வராது என்ற வைகோ, கைது வாரண்டை பெற்றுக்கொள்ளமறுத்துவிட்டார்.

இதையடுத்து உயரதிகாரிகளுக்குத் தகவல் தந்துவிட்டு, அவர்களின் மறு உத்தரவுக்காக திருமண மண்டபத்தின்வாசலில் சங்கர் ஏராளமான போலீஸாருடன் காத்திருந்தார்.

Vaikoதிடீரென தொடங்கிய பயணம்:

போலீஸ் அதிரடியாய் புகுந்து வைகோவைக் கைது செய்யலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டதால், திருமண மண்டபகேட்டை தொண்டர்கள் இழுத்து மூடினர்.

12.30 மணிக்கு மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் அங்கு வந்தார். இருவரும் சிறிது நேரம் தனியேஆலோசனை நடத்தினர்.

நள்ளிரவு 1.15 மணிக்கு தொண்டர்களிடம் வந்த வைகோ, வாங்க.. நடக்கலாம் என்றார். 5 நிமிடத்தில்ஆயிரக்கணக்கான தொண்டர்களும் சீருடை, மதிமுக கொடிகளுடன் தயாராகிவிட, 1.20 மணிக்கு வைகோசென்னைக்குள் திடீர் நடை பயணத்தைத் துவக்கினார்.

போலீஸ் செய்த பவர்-கட்:

இதை எதிர்பார்க்காத போலீசார் பின்னாடியே ஓடி வந்தனர். அடுத்த சில நிமிடங்களில் அப் பகுதியில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. போலீஸ் உத்தரவின்பேரில் மின்துறை இந்த வேலையைச் செய்ததாக மதிமுகவினர்கூறினர். கும் இருட்டில் வைகோவின் பயணம் நூற்றுக்கணக்கான டார்ச் லைட்கள் ஒளியில் தொடர்ந்தது.

கிண்டி கத்திப்பாரா சந்திப்பு அருகேயும், மேம்பாலம் அருகேயும் வைகோவை போலீசார் தடுத்து நிறுத்தமுயற்சித்தனர். ஆனால் அவர்களை விலக்கிவிட்டு வைகோ நடைபயணத்தை தொடர்ந்தார்.

அரணாய் மாறிய தொண்டர்கள்:

இதையடுத்து முன்வரிசையில் செல்வதைத் தவிர்த்துவிட்டு தொண்டர்களுக்கு மத்தியில் நடக்க ஆரம்பித்தார்வைகோ. தொண்டர்கள் அரண்போல வைகோவை சூழ்ந்திருந்ததால் போலீஸாரால் மீண்டும் அவரை நெருங்கமுடியவில்லை.

இந் நிலையில் தொண்டர்களையும் மீறி வைகோவை நெருங்கி வந்த போலீசாரை தொண்டர்கள் தள்ளிவிட பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் ஒதுங்கிக் கொண்டனர்.

வைகோவின் நள்ளிரவு திடீர் நடை பயணம் குறித்து நகர காவல் நிலையங்களுக்கு எல்லாம் தகவல் தரப்பட,தூக்கத்தை தொலைத்துவிட்டு பரபரப்பாயினர் போலீஸார்.

Vaiko and Kohli

முதன்முதலாய் எவரெஸ்ட் சிகரம் ஏறிய இந்திய வீரர் மன்மோகன் சிங்கோஹ்லி வைகோவை வாழ்த்தியபோது
வழிமறித்த போலீஸ் வேன்கள்:

கிண்டி செல்லம்மாள் கல்லூரி அருகே ஒரு போலீஸ் ஜீப்பும், இரு வேன்களும் ரோட்டில் குறுக்கே மீண்டும்நிறுத்தப்பட்ட அவற்றின் இடைவெளியில் புகுந்து நடந்தார் வைகோ. அவரைத் தொடர்ந்து தொண்டர்களும்கோஷமிட்டபடியே முன்னேறினர்.

ராஜ்பவன், காந்தி மண்டபம், மத்திய கைலாஷ், அடையார், மலர் மருத்துமனை, சத்யா ஸ்டுடியோ, பட்டினப்பாக்கம்என இரவு நேரத்தில் வைகோ போட்ட வேக நடைக்கு இணையாக தொண்டர்கள் ஓட வேண்டியிருந்தது.

அதுவரை போலீசாரும் பின்னாலேயே வந்தனர். லைட் ஹவுஸ் வழியாக எம்.ஜி.ஆர். சமாதியைத் தாண்டிஅதிகாலை 3.45 மணிக்கு அண்ணா சமாதியை அடைந்தார் வைகோ. சமாதி பூட்டப்பட்டிருந்ததால் அஞ்சலிசெலுத்த முடியவில்லை, இதையடுத்து தீவுத்திடல் நோக்கி நடக்க ஆரம்பித்தார் வைகோ.

எதிர்கொண்ட சைலேந்திர பாபு:

தீவுத் திடலுக்கு அருகே நேப்பியர் பாலத்தை வைகோவும் தொண்டர்களும் நெருங்கியபோது நூற்றுக்கணக்கானபோலீசார் அங்கு இவர்களை எதிர் கொண்டனர். பாலத்தை சுத்தமாக அடைத்து போலீஸ் வானங்களும்நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது முன்னேறி வந்த வைகோவிடம் வந்த இணை கமிஷ்னர் சைலேந்திர பாபு, சார்உங்கள் நடை பயணத்துக்கு போலீஸ் அனுமதி இல்லை. இதனால் தொண்டர்களை கலைந்து போகச் சொல்லுங்கள்என்றார்.

Vaikoஆனால், வைகோ முடியாது என்று மறுத்துவிட, அப்ப உங்களை கைது செய்ய வேண்டியிருக்கும் என்றார்.இதையடுத்து போலீசாருக்கும் வைகோ தரப்பும் இடையே வாக்குவாதம் மூண்டது. என்னுடன் நடந்து வந்ததொண்டர்கள் மீது போலீஸ் கை பட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று கூறிய வைகோ நடு ரோட்டில்அமர, தொண்டர்களும் உட்கார்ந்தனர்.

நேரம் போய்க் கொண்டே இருக்க, காலை 5 மணியளவில், சார் உங்களை மட்டும் கைது செய்றோம்.தொண்டர்ளை கைது செய்ய மாட்டோம் என்றார் சைலேந்திர பாபு.

கதறி அழுத தொண்டர்கள்:

இதை ஏற்றுக் கொண்ட வேனில் ஏறிய வைகோ, தொண்டர்கள் தீவுத் திடலுக்குச் செல்ல எந்த இடைஞ்சலும்செய்யக் கூடாது என்றார். அதை சைலேந்திர பாபு ஏற்றுக் கொண்டார்.

வைகோ கைதானபோது எங்களையும் கைது செய்யுங்கள் என தொண்டர்கள் கதறி அழ ஆரம்பித்தனர். அவர்களைசமாதானப்படுத்திய வைகோ, தீவுத் திடலில் நான் வந்தாலும் வராவிட்டாலும் நாம் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டம் நடக்கும். அதில் கலந்து கொள்ளுங்கள் என்றார்.

வைகோவுடன் அவரது பி.ஏ. அடைக்கலம் மற்றும் 5 முக்கிய சீருடைத் தொண்டரணி நிர்வாகிகளும் கைதாவதாகக்கூறி வேனில் ஏறினர்.

வைகோ பேட்டி:

போலீஸ் வேனில் ஏறி நின்று நிருபர்களிடம் பேசிய வைகோ, எனது தொண்டர்களின் பாதுகாப்பிற்காக இந்தக்கைதை ஏற்கிறேன். ஜனநாயகத்தின் குரல்வளையை தொடர்ந்து நெரிக்கிறார் ஜெயலலிதா. ஆகஸ்ட் 5ம் தேதிநடை பயணத்தைத் தொடங்கிய நாங்கள், அண்ணா பிறந்த நாளில் அவரது சமாதியின் அருகே இருக்கநினைத்தோம்.

ஜெயலலிதாவின் தடையையும் மீறி எங்கள் நடை பயணம் லட்சியத்தை அடைந்துவிட்டது. போலீசார் வெறும்கருவி தான், அவர்களை குறை சொல்லிப் பயனில்லை என்றார்.

காவல் நிலையத்தில்...

Vaikoபின்னர் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு வைகோவும், அவருடன் கைது செய்யப்பட்டவர்களும்கொண்டு செல்லப்பட்டனர்.

இந்தத் தகவல் அறிந்து ஆயிரக்கணக்கான மதிமுகவினர் காவல் நிலையத்தின் எதிரே குவிந்தனர். ஆனால், போலீஸ்நிலையத்தின் இரு வாசல்களையும் போலீசார் மூடிவிட்டனர். இதனால் நிருபர்கள் உள்பட யாரும் உள்ளே செல்லமுடியவில்லை.

தீவுத் திடல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாநிலம் முழுவதும் இருந்தும் சென்னை வந்த தொண்டர்களும்சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் முன் குவிய ஆரம்பித்தனர். இதையடுத்து அங்கு பெரும் எண்ணிக்கையில்போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

விடுதலை:

வைகோ மீது இந்திய தண்டனைச் சட்டம் 188, 143வது பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இந்தப் பிரிவுகளில் கைதானவர்களுக்கு காவல் நிலையத்திலேயே ஜாமீன் வழங்கலாம். இந் நிலையில் அவரைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமலேயே, இன்று பகல் 12.20 மணியளவில் போலீசார் விடுவித்தனர்.

விடுதலையாகி வெளியே வந்த வைகோவை தொண்டர்கள் ஆராவாரமாக வரவேற்றனர். இதையடுத்து அவர்கட்சியின் தலைமை அலுவலகமாக தாயகத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

மதிமுக அலுவலகத்தில்...

மதிமுக அலுவலகத்தில் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:-

தமிழ்நாட்டில் அமைதி நிலவ வேண்டும்; யாருக்கும் எந்த கஷ்டம் வரக்கூடாது என்பதில் ஜெயலலிதாவை விடஎங்களுக்கு பல மடங்கு அக்கறை உண்டு.

சென்னை நகரில் ஊர்வலத்துக்குதான் தடை. நாங்கள் ஊர்வலமாக வரவில்லை; சாலையோரமாகவே மூன்று,மூன்று பேராக நடந்து வந்தோம். அதுவும் கூட்ட நெரிசல் இல்லாத சாலைகள் வழியேதான் வந்தோம். போலீஸ்எங்கள் மீது பழி போட திட்டமிட்டிருப்பது தெரிய வந்ததால்தான், நள்ளிரவில் போக்குவரத்து இல்லாத நேரத்தில்யாருக்கும் கஷ்டம் இல்லாமல் செய்தோம்.

சட்ட விரோதமான கைது என்பதால்தான் போலீசாருக்கு நான் ஒத்துழைக்க மறுத்தேன். காவல் துறையை தர்மசங்கடத்துக்கு ஆளாக்க வேண்டும் என்பதற்காக, மூன்று மூன்று பேராக தொண்டர்களை தீவுத் திடலுக்குள்அனுமதியுங்கள், நான் கைதாகிறேன் என்று கூறினேன்.

அதன்படி தொண்டர்கள் தீவுத் திடலுக்குள் சென்ற பின்னரே நானும், என்னுடன் 6 பேரும் கைதானோம். இன்றிரவுதீவுத் திடல் பொதுக் கூட்டத்தில் பேசுவேன் என்றார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X