For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நதிகளை தேசியமயமாக்க வேண்டும்: வைகோ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டிக் காக்கவும், அனைத்து மாநிலங்களும் நதி நீரை சரியாக பங்கிட்டுக் கொள்ளவும்வசதியாகவும், மாநிலங்களுக்கு இடையே ஓடும் அனைத்து நதிகளையும் தேசியமயமாக்க வேண்டும் என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தனது 1,000 கி.மீ., 42 நாள் மறுமலர்ச்சி நடை பயணத்தை சென்னையில் கைதுடன் முடித்த வைகோ, தீவுத்திடலில்நடந்த அக் கட்சியின் பெரியார்- அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:

டெல்லியுடனான நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தை பஞ்சாப் மாநிலம் திடீரென ஒருதலைப்பட்சமாக ரத்து செய்துள்ளது.இது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல. அந்தக் காரியத்தைச் செய்த காங்கிரஸ் முதல்வர் அம்ரிந்தர் சிங்கை பிரதமர்மன்மோகன் சிங் கண்டிக்க வேண்டும்.

அம்ரிந்தர் சிங் போன்றவர்களின் செயல்கள் ஒருமைப்பாட்டையே கேள்விக்குறியாக்கிவிடும்.

இதைத் தவிர்க்க மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகள் அனைத்தையும் தேசியமாக்கி, அதை தனதுகட்டுப்பாட்டில் மத்திய அரசு எடுத்துக் கொள்ள முன் வர வேண்டும். இதைத் தவிர நதி நீர்ப் பிரச்சனைகளைத் தீர்க்கவேறு வழியே கிடையாது.

நாட்டின் தீபகற்ப நதிகளை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர்பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி அறிவித்துள்ளார். இத் திட்டத்தின்படி, ஒரிஸ்ஸாவின் மகாநதியையும் தமிழகத்தின்தாமிரபரணியையும் இணைக்கும் திட்டத்தை முதலில் மத்திய அரசு கையில் எடுக்க வேண்டும்.

தமிழகத்துக்கு நீரைத் தர மறுக்கும் கர்நாடகம் ரூ. 5,000 கோடி செலவில் காவிரியில் புதிய பாசனத் திட்டங்களைஅமலாக்கி வருகிறது. இதன்மூலம் இருக்கும் நீரையெல்லாம் தானே உபயோகித்துவிட்டு தமிழகத்தைபாலைவனமாக்க முயல்கிறது.

இரண்டொரு நாட்களில் பிரதமரை நான் சந்திக்க இருக்கிறேன். கர்நாடகத்தின் காவிரிப் பாசனத் திட்டங்களுக்குஅனுமதி தரக் கூடாது என்று அப்போது அவரிடம் வலியுறுத்துவேன்.

சேது சமுத்திரத் திட்டத்துக்காக அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் நான் வலியுறுத்தியது உண்மை. இதனால் இத்திட்டம் விரைவுபடுத்தப்பட்டதும் உண்மை. அதே நேரத்தில் நான் தான் இந்தத் திட்டத்துக்கே காரணம் என்றுதனிப்பட்ட முறையில் உரிமை கொண்டாட மாட்டேன்.

1870ம் ஆண்டில் இருந்தே பல்வேறு அரசியல் கட்சிகளும், தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் அவ்வப்போதுவலியுறுத்தி வந்தத் திட்டம் இது. எனது ஆசான் அறிஞர் அண்ணாவின் கனவுத் திட்டம் இது.

ஆனால், இலங்கையின் எதிர்ப்பால் பிரதமராக இருந்த நேரு இத் திட்டத்தைக் கைவிட்டார். அண்ணாவைத்தொடர்ந்து கருணாநிதியும் இத் திட்டத்துக்காக பலமுறை போராடியிருக்கிறார்.

தமிழக அரசுக்கு தொல்லை தருவதே வைகோவுக்கு வேலையாகிவிட்டது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. இந்தக்குற்றச்சாட்டை ஜெயலலிதா நிரூபித்தால், அவர் தரும் எந்த தண்டனையையும் ஏற்க நான் தயார். மக்களிடம்மன்னிப்பு கேட்கவும் நான் தயார்.

சென்னைக்குள் நடை பயணத்தை போலீஸ் தடுத்து, அதை நாங்கள் எதிர்த்து, ஏதாவது அசம்பாவித சம்பவம்நடந்துவிடும் சூழல் இருந்ததால் தான், அதைத் தவிர்க்க நான் எனது நடை பயணத்தைக் கூட இரவில் நடத்திமுடித்தேன்.

மனதில் திடம் இருந்ததால், கால்களுக்கு மான்களின் பலம் இருந்ததால், இதயத்தில் சிங்கத்தின் உறுதி கிடைத்தது.இதனால் சென்னைக்குள் 16 கி.மீ. தூரத்தை இரவில் 2 மணி நேரத்தில் கடந்தோம்.

கர்நாடகத்தில் தமிழ்த் திரைப்படங்களைத் திரையிட விடாமல் தடை விதித்திருக்கிறார்கள். இது கடும்கண்டனத்துக்குரியது.

கருணாநிதி அமைத்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தொடரும். ஜெயலலிதா எத்தனைத் திட்டங்கள்போட்டாலும் இனி வெல்லவே முடியாது என்றார் வைகோ.

ரத்த வங்கிகள்:

மதிமுக தொண்டர்களைக் கொண்டு மாவட்டங்கள்தோறும் ரத்த வங்கிகள் அமைக்கப்படும் என்று அறிவித்தவைகோ, சுமார் 1 லட்சம் தொண்டர் படையைக் கொண்டு ஊரக வளர்ச்சித் திட்டங்களை அமலாக்கப்போவதாகவும் அறிவித்தார்.

என்.ராம்:

நிகழ்ச்சியில் இந்து ஆங்கில நாளிதழின் ஆசிரியர் என்.ராம் பேசுகையில், இலங்கை விவகாரத்தில் வைகோவின்நிலைக்கும் எனக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனாலும் அவரை பொடாவில் கைது செய்தது பெரும்தவறாகவே கருதுகிறேன் என்றார்.

முதன்முதலாக எவரெஸ்ட் சிகரம் ஏறிய இந்தியரான மன்மோகன் சிங் கோஹ்லி, எம்.எஸ். உதயமூர்த்தி, இயக்குனர்சேரன், வலம்புரிஜான் உள்ளிட்ட பலரும் பேசினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X