For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈவ் டீசிங்: பெண் சாப்ட்வேர் என்ஜினியர் பலி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காரில் வந்த வாலிபர்களால் விரட்டப்பட்ட ஸ்கூட்டரில் சென்ற பெண் கார் மோதி பரிதாபமாகப் பலியானார்.

கென்யாவைச் சேர்ந்த பெண் சாப்ட்வேர் என்ஜினியர் ஸ்டெப்னா அட்டோவா (25). இவரது தந்தை தென்ஆப்பிரிக்கர், தாயார் ஆங்கிலோ இந்தியப் பெண். பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தாயாருடன் சென்னை மந்தைவெளியில் வசித்து வந்தார். டைடல் பார்க்கில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில்பணியாற்றி வந்தார். நட்சத்திர ஹோட்டல்களில் நடக்கும் வீக் எண்ட் டிஸ்கோத்தே பார்ட்டிகளில் இவர் கலந்துகொள்வது வழக்கம்.

இரு தினங்களுக்கு முன் வழக்கம்போல் மயிலாப்பூரில் உள்ள ஹோட்டலில் பார்ட்டி முடித்துவிட்டு இரவு 12மணியளவில் தனது கைனடிக் ஹோண்டாவில் கிளம்பினார். அப்போது அதே ஹோட்டலில் பார்ட்டில் கலந்துகொண்ட ராஜா (21), வெங்டஷ்ே (24), நெஸ்லின் (16), டன்வர் (16) ஆகியோர் தங்களது ஹோண்டா சிட்டிகாரில் விரட்டினர்.

The car that hit Attovaஇந்த நால்வரும் பயங்கர போதையில் இருந்தனர். ராதாகிருஷ்ணன் சாலை நீல்கிரீஸ் அருகே ஸ்கூட்டர் மீதுபயங்க வேகத்தில் கார் மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட அட்டோவா அந்த இடத்திலேயேமண்டை சிதறி உயிரிழந்தார்.

இதையடுத்து காரை அங்கேயே விட்டுவிட்டு நால்வரும் தப்பியோட முன்றனர். அப்போது அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர்.

இதில் வெங்கடேஷ் தவிர மற்ற மூவரும் வசதி படைத்த குடும்பத்தினர். இந்த மூவருக்கும் வீட்டில் காசு வாங்கிக்கொண்டு காரில் ஊர் சுற்றுவது, குடிப்பது, விபச்சாரப் பெண்களை அனுபவிப்பது பிழைப்பாக இருந்து வந்துள்ளதுபோலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கட்டடத் தொழிலாளியான வெங்கடேஷ் இந்த பணக்கார வீட்டுப் பிள்ளைகளுடன் சேர்ந்து லூட்டி அடித்துவந்துள்ளார். அட்டாவோவுடன் உடலுறவு கொள்வதற்காகவே குடிபோதையில் அவரை 4 பேரும் காரில்விரட்டியதாகத் தெரியவந்துள்ளது.

இந் நிலையில் சம்பவ இடத்துக்கு இன்று சென்று பார்த்த புதிய போலீஸ் கமிஷ்னரான நடராஜ், இந்த வழக்கைபோக்குவரத்துப் போலீசாரிடம் இருந்து சட்டம்-ஒழுங்குப் பிரிவுக்கு மாற்ற உத்தரவிட்டார்.

Attovas scooterவாகனங்கள் தொடர்புடைய, சாலையில் நடந்த சம்பவம் என்பதால் போக்குவரத்து போலீசார் தான் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்தனர். ஆனால், இதில் ஈவ்-டீசிங், காரில் விரட்டிச் செல்லுதல், வெறித்தனமான விரட்டல்ஆகிய குற்றங்களும் அடங்கியிருப்பதால் இதை சட்டம்-ஒழுங்கு போலீஸ் விசாரணைக்கு மாற்றியுள்ளார்நடராஜன்.

இதையடுத்து மயிலாப்பூர் துணை கமிஷ்னர் சண்முக ராஜேஸ்வரன், உதவி கமிஷ்னர் முருகேசன் தலைமையிலானசட்டம்-ஒழுங்குப் பிரிவு டீம் இந்த வழக்கை விசாரிககவுள்ளது.

இச் சம்பவத்தை கொலைக்குச் சமமான வழக்காகக் கருதும்படி உத்தரவிட்ட கமிஷ்னர் நடராஜ், அந்த 4 வாலிபர்கள்மீதும் 304 செக்ஷனின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனால் அதிகபட்சம் 10 ஆண்டு வரைசிறை தண்டனை கிடைக்கச் செய்ய முடியும்.

போக்குவரத்துப் போலீஸ் விசாரித்து இருந்தால், வெறும் பைன் கட்டிவிட்டு 4 பேரும் ஜாமீனில் வெளியே வரும்சூழல் உருவாகியிருக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X