For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

100 இளம் விஞ்ஞானிகள் பட்டியலில் 7 இந்தியர்கள்

By Staff
Google Oneindia Tamil News

ஹூஸ்டன்:

Srinidhi varadarajanஇந்திய வம்சாவளியைச் சேர்ந்ச 7 பேரை சிறந்த இளம் விஞ்ஞானிகளாக அமெரிக்காவின் மசாசூசெட்ஸ்தொழில்நுட்பக் கல்வி மையம் தேர்ந்தெடுத்துள்ளது.

அந்த மையம் வெளியிட்டுள்ள டெக்னாலஜி ரிவியூ சாதனைப் பட்டியலில் 100 இளம் விஞ்ஞானிகள் இடம்பிடித்துள்ளனர். இதில் 7 பேர் இந்தியர்கள்.

உலகின் மூன்றாவது அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கிய ஸ்ரீநிதி வரதராஜன், இதயத் துடிப்பைகண்காணிக்க, இருதயத்தில் பொறுத்தக் கூடிய கருவியைத் தயாரித்த ஆனந்த நடராஜன் ஆகியோர் இந்த 7 பேர்பட்டியலில் அடங்குவர்.

வரதராஜன் இப்போது விர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் டெராஸ்கேல் கம்யூட்டிங் பிரிவின் இயக்குனராகஉள்ளார். 33 வயதான ஆனந்த் நடராஜன் இன்பினிட்டி பயோ மெடிக்கல் நிறுவனத்தின் சி.இ.ஓவாக உள்ளார்.

1,100 ஆப்பிள் மெக்கின்தோஷ் கம்ப்யூட்டர்களை இணைத்து ஸ்ரீநிதி வரதராஜன் தயாரித்த சூப்பர் கம்ப்யூட்டர்தான் உலகிலேயே மூன்றாவது அதிவேகமான கம்ப்யூட்டர். இதற்காக அவர் செலவழித்த தொகை வெறும் 5மில்லியன் டாலர். மற்ற நாடுகள் தயாரித்துள்ள சூப்பர் கம்ப்யூட்டர்களின் விலை 100 மில்லியன் டாலர்களாகும்.

Anandh natarajanஇந்த இருவரைத் தவிர அனுஜ் பாத்ரா, ரமேஷ் ரஸ்கர், சைதலி சென்குப்தா, ரவி கானே, விக்ரம் குமார் ஆகியஇந்தியர்களும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இதில் அனுஜ் பாத்ரா (34) டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட் நிறுவனத்தின் சிஸ்டம் என்ஜினியராக உள்ளார். மிகக்குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தி அதி வேகமான, அல்ட்ரா வைட்பேண்ட் வயர்லெஸ் பரிமாற்றம் குறித்துஆராய்ச்சில் ஈடுபட்டுள்ளவர் இவர்.

ரமேஷ் ரஸ்கர் (34) மிட்சுபிஸி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர். சைதலி சென்குப்தா (34) டெக்ஸாஸ்இன்ஸ்ட்ரூமென்ட் நிறுவனத்தில் கம்யூனிகேசன் சிப்ஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ரவி கானே (32) மருத்துவ ஆராய்ச்சியாளர். ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிர் கிருமிக்கு எதிரான சக்தி வாய்ந்த மருந்தைகண்டு பிடித்துள்ளவர். இப்போது எச்.ஐ.வி. கிருமிக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில்ஈடுபட்டுள்ளார்.

விக்ரம் குமார் (28), இப்போது திமாகி என்ற நிறுவனத்தை போஸ்டனில் துவக்கி நடத்தி வருகிறார். நீரிழிவு,எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்களால் தாக்கப்பட்டவர்கள் தங்களை பராமரித்துக் கொள்வதற்கான இன்டராக்டிவ்சாப்ட்வேரை உருவாக்கியவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X