For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உத்தராஞ்சல்: பஸ் விபத்தில் 13 தமிழக யாத்ரீகர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

டெஹ்ரா டூன்:

தமிழக யாத்ரீகர்களுடன் பத்ரிநாத் நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்தவிபத்தில் பஸ்சில் பயணம் செய்த 5 பெண்கள் உள்பட 13 பேர் பலியாயினர்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள மகாலட்சுமி டிராவல்ஸ் என்ற நிறுவனம் பல்வேறு மாநிலங்களில் உள்ள புண்ணியதலங்களுக்கு பக்தர்களை அழைத்துச் சென்று வருகிறது. ரயில் மற்றும் பஸ்களில் இவர்கள் அழைத்துச்செல்லப்படுகின்றனர்.

பல்வேறு மாநிலங்களில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் இணைந்து கூட்டாக இந்த பயணத்தை நடத்துகின்றன.

இவ்வாறு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 120 பேர் வட மாநிலங்களில் புண்ணிய தலங்களில் சுற்றுப் பயணம்மேற்கொண்டிருந்தனர். பல தலங்களை பார்வையிட்ட பக்தர்கள் டெல்லியிலிருந்து பத்ரிநாத்துக்கு 5 பஸ்களில்கிளம்பினர்.

உத்ராஞ்சல் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள சில திருத்தலங்களைப் பார்த்து விட்டு பத்ரிநாத்கோயிலுக்கு இன்று காலை மலைப் பாதையில் அந்த பஸ்கள் சென்றன.

ஜோஷிமத் என்ற இடத்துக்கு அருகே ரிஷிகேஷ்- பத்ரிநாத் நெடுஞ்சாலையில் நர்சிங் கோவிலுக்கு அருகேகுறுகலான மலைப் பாதையில் அந்த பஸ்கள் திரும்பின. அப்போது 29 பேருடன் சென்று கொண்டிருந்த ஒரு பஸ்சாலையை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பஸ்சில் பயணம் செய்த 13 பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். மேலும் 16 பேர்படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடக உள்ளது. அவர்கள்கோபேஸ்வாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த ராமமூர்த்தி, சியாமளா, சீத்தாராமன் (மூவரும் ஒரே குடும்பத்தைச்சேர்ந்தவர்கள்), ராவ், அவரது மனைவி சுபத்ரா, சுந்தரராஜன், சுந்தரமய்யர், விசாலாட்சி, ராஜா, கோவையைச்சேர்ந்த ராஜன், காமாட்சி ஆகியோர் உள்பட 13 பேர் பலியாகிவிட்டனர்.

மேலும் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பலியானவர்களின் உடல்கள் நாளை டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படுகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X