For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லையில் ஜெயலட்சுமி: சிபிஐ தீவிர விசாரணை

By Super
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

Jayalakshmiஜெயலட்சுமியை நெல்லைக்கு அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீஸார் மீது பாலியல் புகார்களைத் தெரிவித்துள்ள ஜெயலட்சுமியின் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

ஜெயலட்சுமியிடம் மதுரையில் 8 நாட்கள் விசாரணை நடத்திய சிபிஐ பின்னர் அவரது தந்தை மற்றும் தம்பியிடம்விசாரணை நடத்தியது.

இந் நிலையில் ஜெயலட்சுமியை சிபிஐ அதிகாரிகள் திடீரென நெல்லைக்கு அழைத்துச் சென்றனர்.பாளையங்கோட்டை காவலர் விடுதியில் வைத்து அவரிடம் டி.எஸ்.பி.ராஜசேகரை மணந்து கொண்டு குடும்பம்நடத்தியது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.

பின்னர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயலட்சுமி அடைக்கப்பட்டிருந்த நெல்லை கிளை சிறை,ஜெயலட்சுமி கணக்கு வைத்திருந்த வங்கி ஆகியவற்றிலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

டி.எஸ்.பி.ராஜசேகருடன் குடும்பம் நடத்தியது தொடர்பான சில ஆவணங்களையும், ஆதாரங்களையும் சிபிஐஅதிகாரிகள் சேகரித்துள்ளனர்.

ஜெயலட்சுமி ரூ. 27 லட்சம் மோசடி?

இதற்கிடையே தன்னிடம் ரூ. 27 லட்சத்தை ஜெயலட்சுமியும் அவரது குடும்பத்தினரும் மோசடி செய்துவிட்டதாகசங்கரன்கோவிலைச் சேர்ந்த பஞ்சு வியாபாரியான பிரகாஷ் மூர்த்தி என்பவர் மதுரையில் முகாமிட்டுள்ள சிபிஐஅதிகாரிகளிடம் இன்று ஒரு புகார் மனுவைக் கொடுத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பிரகாஷ் மூர்த்தி கூறுகையில், கடந்த 1995ம் ஆண்டு ஜெயலட்சுமி, அவரது தந்தைஅழகர்சாமி, சகோதரர் சீனிவாசன் மற்றும் ராஜாராம் ஆகியோர் என்னை அணுகினார்கள். தங்களை பஞ்சுவியாபாரம் செய்பவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

பின்னர் என்னிடம் பஞ்சு வாங்கினார்கள். அதன் மொத்த மதிப்பு ரூ. 37 லட்சம் ஆகும். இதில் அவர்கள் ஓரளவுப்பணத்தை மட்டுமே கொடுத்தார்கள். மீதள்ள ரூ. 27 லட்சம் பணத்தை அவர்கள் திருப்பித் தரவில்லை. இதற்காகராஜாராம் 11 காசோலைகளைக் கொடுத்தார். அவை அனைத்தும் வங்கிக் கணக்கில் பணமில்லாத காரணத்தால்திரும்பி வந்து விட்டன.

கடைசியாக ஜெயலட்சுமியும் மற்றவர்களும் என்னிடம் பாக்கி வைத்த பணம் 27 லட்சத்து 14,896 ரூபாய் 46பைசாவாகும். இந்தத் தொகை மற்றும் இத்தனை ஆண்டுக்கான வட்டியுடன் சேர்த்து ரூ. 1 கோடி பணத்தைஜெயலட்சுமி குடும்பத்திடமிருந்து வசூலித்துத் தர வேண்டும் என்று சிபிஐ அதிகாரிகளிடம் கோரிக்கைவிடுத்துள்ளேன்.

எனது புகாரை சிபிஐ அதிகாரிகள் வாங்கிக் கொண்டனர். தேவைப்பட்டால் விசாரணைக்கு அழைப்பதாகதெரிவித்துள்ளனர் என்றார் பிரகாஷ் மூர்த்தி.

இவர் போலீசாரால் செட்-அப் செய்யப்பட்ட ஆள் என முன்பே ஜெயலட்சுமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X