For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பன் சமாதியில் பறந்த பா.ம.க. கொடி அகற்றம்

By Staff
Google Oneindia Tamil News

மேட்டூர்:

சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனின் சமாதியில் பறக்க விடப்பட்டிருந்த பா.ம.க கொடியை அக் கட்சியின் நிர்வாகிகள்அகற்றினர்.

மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்ட வீரப்பனின் சமாதியின் மீது திடீரென பா.ம.க. கொடி பறந்தது. இதையடுத்துகொளத்தூர் ஒன்றிய பா.ம.க. செயலாளர் தலைமையில் வந்த அக் கட்சியினர் கொடியை அகற்றினர்.

வேண்டுமென்றே இந்தக் கொடியை நட்டு, வீரப்பனும் பா.ம.கவுக்கும் தொடர்பு இருந்ததைப் போன்ற தோற்றத்தைஏற்படுத்த சிலர் முயல்வதாக அக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

பணத்தை எடுக்க முயல வேண்டாம்..

இதற்கிடையே காட்டுப் பகுதியில் வீரப்பன் பணத்தோடு கண்ணி வெடிகள், குண்டுகளையும் பதுக்கிவைத்திருப்பதால் பணத்தை எடுக்கச் சென்று உயிர்ப் பலியாகிவிட வேண்டாம் என பொது மக்களுக்கு போலீசார்கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டுக்குள் போக வேண்டாம் என்ற போலீசாரின் தொடர் எச்சரிக்கைகளையும் மீறி பலர் வீரப்பனின்புதையலைத் தேடி காட்டுக்குள் சென்றவண்ணம் உள்ளனர். குறிப்பாக கொளத்தூர், பென்னாகரம், பர்கூர் பகுதிகாடுகளில் இவர்கள் புகுந்து ஆங்காங்கே தோண்டிப் பார்த்தவண்ணம் உள்ளனர்.

பல இடங்களில் வீரப்பன் கண்ணி வெடிகளையும் பதுக்கி வைத்திருப்பதால், இந்த ஆபத்தான செயலில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமான நிலையங்களில் பாதுகாப்பு:

இதற்கிடையே வீரப்பனின் சாவுக்குப் பழி வாங்கும் வகையில் தமிழ்த் தீவிரவாதிகள் விமான நிலையங்களில் பதில்தாக்குதல் நடத்தலாம் என உளவுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து பெங்களூர், சென்னை, மும்பை விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விஜய்குமார் பேட்டி:

ஆனால், வீரப்பனுக்காக யாரும் பதிலடித் தாக்குதல்கள் எல்லாம் நடத்த மாட்டார்கள் என அதிரடிப்படையின்தலைவர் விஜய்குமார் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், வீரப்பன் தமிழ்த் தீவிரவாதியே கிடையாது, அவன் ஒரு பணம் பிடுங்கும் கடத்தல்காரன்.இவனுக்காக யாரும் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பில்லை. தமிழ்த் தீவிரவாதிகளையே கூட அவன் சரியாகநடத்தவில்லை என்பது தான் எங்களுக்குக் கிடைத்த தகவல்.

ராஜ்குமாரைக் கடத்தியபோது தான் தமிழ்த் தீவிரவாத அமைப்புகளின் உதவி வீரப்பனுக்குத் தேவைப்பட்டது.அந்த வேலை முடிந்தவுடன் அவர்களையே வீரப்பன கேவலமாகத் தான் நடத்தினான்.

அவன் யாரையும் முழுமையாக நம்பவில்லை, அவனது செயல்களால சேத்துக்குளி கோவிந்தன் கூட எரிச்சலாகத்தான் இருந்தான். வீரப்பனுக்கு பயந்து தான் அவனுக்கு உதவினார்களே தவிர, அவன் மீதான அன்பாலோ அல்லதுஈர்ப்பாலோ அல்ல. இதனால் இப்போது அவனது சாவுக்கு யாரும் பதில் தாக்குதல் எல்லாம் நடத்த மாட்டார்கள்.

இருந்தாலும் வெள்ளைதுரை, சரவணன், முருகேசன் போன்ற வீரப்பனின் கும்பலில் ஊடுருவியஅதிரடிப்படையினருக்கு போதிய பாதுகாப்பு தரப்பட்டுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X