For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக முதல்வருடன் விஜயக்குமார் சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

வீரப்பனை சுட்டுக் கொன்றது குறித்து கர்நாடக முதல்வர் தரம்சிங்கை இன்று நேரில் சந்தித்து தமிழகசிறப்பு அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் விளக்கினார்.

பெங்களூர் சென்ற விஜயக்குமாரை தரம்சிங்கும், துணை முதல்வர் சித்தராமையாவும் பூங்கொத்துவழங்கி பாராட்டினர். பின்னர் அவர்களிடம் வீரப்பன் கொல்லப்பட்டது குறித்து விளக்கம் தந்தார்விஜய்குமார்.

பின்னர் தரம்சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக மற்றும் கர்நாடகஅதிரடிப்படையினரின் கூட்டு முயற்சி காரணமாகவே வீரப்பன் வீழ்த்தப்பட்டுள்ளான். வீரப்பன்சுட்டுக் கொல்லப்பட்டதன் மூலம் தமிழக, கர்நாடக மக்கள் மட்டுமல்லாது நாட்டு மக்கள்அனைவருமே மகிழ்ந்து போயுள்ளனர் என்றார்.

இதையடுத்து விஜயக்குமாரும், கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் ஜோதி பிரகாஷ் மிர்ஜியும்முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவையும் சந்தித்தனர். இதையடுத்து நிருபர்களிடம்பேசிய கிருஷ்ணா,

எனது ஆட்சியின்போது ராஜ்குமார் கடத்தப்பட்டார். அந்த 108 நாட்களும் நான் அடைந்தவேதனைக்கு அளவே இல்லை. வீரப்பனைப் பிடிக்க பா.ஜ.க. அரசு போதிய உதவியைவழங்கவில்லை. இப்போது விஜய்குமாரும், மிர்ஜியும் வீரப்பனை ஒழித்ததன் மூலம் நாட்டுக்கேபெருமை சேர்த்துவிட்டனர் என்றார்.

ராஜ்குமாரை மீட்க வீரப்பனுக்கு பணம் தரப்பட்டதா என்று நிருபர்கள் கேட்டபோது கடுப்பானகிருஷ்ணா, மத்திய அரசின் ஆடிட்டரிடம் மாநில அரசு கொடுத்த வரவு, செலவு கணக்கைப் போய்பாருங்கள். பணம் ஏதும் தந்தோமா என்று தெரியும் என்றார்.

இதையடுத்து விஜயக்குமார் நிருபர்களிடம் பேசுகையில், வீரப்பன் தற்கொலை செய்து கொண்டதாககூறப்படுவதில் சற்றும் உண்மை இல்லை. வீரப்பனை அதிரடிப்படையினர் தூரத்தில் இருந்துசுட்டாலும் கூட அவனது நெற்றியை துளைத்துக் கொண்டு குண்டு சென்றதால் அவன் உடனடியாகமரணமடைந்து விட்டான்.

தன்னைத் தானே சுட்டுக் கொல்லும் நிலையில் வீரப்பன் இருக்கவில்லை. இதை நான் உறுதியாகக் கூறமுடியும். கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் மிர்ஜி மற்றும் கர்நாடக அதிரடிப்படையினர் மிகுந்தஒத்துழைப்பு கொடுத்த காரணத்தால்தான் வீரப்பனை எளிதாக வீழ்த்த முடிந்தது.

வீரப்பனைப் பிடித்ததோடு எங்கள் வேலை முடிந்துவிட்டது. அவனது பணத்தைத் தேடுவது எங்கள்வேலையல்ல. அது அப் பகுதி போலீசாரின் வேலை. எங்களுக்கு அடுத்த என்ன வேலையை அரசுதருகிறதோ அதைச் செய்வோம்.

வீரப்பனின் சிறிய கூட்டாளிக் கும்பல்கள் ஆங்காங்கே இருக்கலாம். அவர்களை போலீசார்கவனித்துக் கொள்வர். ஆபரேசன் குக்கூன் 6 மாத்துக்கு முன்பு தான் ஆரம்பித்தது, கடைசி 2மாதங்களில் மிகத் தீவிரமானது.

எங்கள் முதலமைச்சர் ஜெயலலிதா மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். எந்த கால கட்டத்திலும் எனக்குஅவர் நெருக்குதல் தந்ததில்லை.

வீரப்பனை போலியான எண்கெளன்டரில் கொல்லப்பட்டதாக முத்துலட்சுமி கூறுவது அடிப்படை இல்லாதகுற்றச்சாட்டு. வீரப்பனின் உடலைத் தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை செயய வேண்டும் என்று கோரமுத்துலட்சுமிக்கு முழு உரிமை உண்டு. இதை முடிவு செய்ய வேண்டியது மாஜிஸ்திரேட் தான் என்றார்.

ராஜ்குமாரை மீட்க வீரப்பனுக்குப் பணம் தரப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் சொல்ல விஜய்குமார்மறுத்துவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X