For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தலில் போட்டியிட தயார்: முத்துலட்சுமி

By Staff
Google Oneindia Tamil News

மேட்டூர்:

திராவிடக் கட்சி வாய்ப்பளித்தால் 2006 சட்டசபை தேர்தலில் போட்டியிடத் தயார் என்று வீரப்பனின் மனைவிமுத்துலட்சுமி கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

வீரப்பனுடன் எனக்கு 16 வயதில் திருமணம் நடந்தது. அப்போது அவருக்கு வயது 39. வீரப்பன் கொலையாளிஎன்பது எனக்குத் தெரியும். ஆனால் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் என்பது தெரியாது.

எனது பிரச்சினைகள் விரைவில் தீர்ந்துவிடும். அதன்பிறகு அஸ்ஸாம் மாநிலம் சென்று விடலாம் என்றுதிருமணத்துக்கு முன்னர் வீரப்பன் தெரிவித்தார். திருமணத்துக்கு 6 மாதத்துக்கு முன்பிருந்தே எங்களது வீட்டில்தான்அவர் தங்கியிருந்தார்.

திருமணமான அடுத்த நாளே, அவர் பதுக்கி வைத்திருந்த சந்தனக் கட்டைகளைப் போலீஸார் பறிமுதல்செய்துவிட்டனர். அதனால், நாம் அஸ்ஸாம் போக முடியாது. உனக்கு ரூ.3 லட்சம் பணம் மற்றும் நகைகள்தருகிறேன். வேறு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணம் செய்து கொள். என்னுடன் காட்டிற்கு வந்துகஷ்டப்பட வேண்டாம் என்று வீரப்பன் கூறினார்.

ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன். வனப் பகுதியில் அவருடன் 4 ஆண்டுகள் குடும்பம் நடத்தினேன்.அப்போது வீரப்பனுடன் 80 பேருக்கு மேல் இருந்தனர்.

நான் 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, காட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன். அதிரடிப்படையினரின்பாதுகாப்பில்தான் முதல் குழந்தை பிறந்தது. 6 மாதத்துக்குப் பின்னர் மீண்டும் காட்டுக்குள் சென்றுவிட்டேன்.காட்டுக்குள்ளேயே 2-வது குழந்தையும் பிறந்தது.

என் கணவரைச் சந்தித்து 3 ஆண்டுகளாகிறது. கடந்த மாதம் குழந்தைகள் படிப்பிற்காக அதிரடிப்படை எஸ்.பி.சண்முகவேலைச் சந்தித்து, பண உதவி பெற்றேன். பிரம்மகுமாரி அமைப்பு மூலம், அப்துல் கலாமைச் சந்தித்துப்பேசி, வீரப்பனை சரணடைய வைக்கலாம் எனத் நினைத்திருந்தேன். அதற்குள் அவர் கொல்லப்பட்டுவிட்டார்என்றார்.

ஆங்கில நாளிதழ் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில், அரசியலில் ஈடுபட நான் ஆர்வமாகஇருக்கிறேன். 2006 தேர்தலில் வாய்ப்பளித்தால் போட்டியிடத் தயார். திராவிட முன்னேற்றக் கழகம்வாய்ப்பளிக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.

வி.ஏ.ஓ.வுக்காக காத்திருந்த முத்துலட்சுமி:

இதற்கிடையே வீரப்பனின் இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக தர்மபுரி மாவட்டம் ஓடகத்தூர் கிராமப்பஞ்சாயத்துக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்திற்கு தனது உறவினர்களுடன் முத்துலட்சுமிசென்றார்.

ஆனால் அங்கு கிராம நிர்வாக அதிகாரி இல்லை. நீண்ட நேரம் காத்திருந்து பார்த்த முத்துலட்சுமி, அதிகாரிவருவது போலத் தெரியாததால், ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பி தர்மபுரி அருகே உள்ள ஓடைப்பட்டிகிராமத்திற்கு சென்றார்.

அங்கு தான் வசித்து வந்த வாடகை வீட்டில் இருந்த சில பொருட்களை எடுத்துக் கொண்டு மீண்டும் தனது சொந்தஊருக்குத் திரும்பினார். ஓடைப்பட்டி வீட்டில்தான் கடந்த 6 மாதமாக முத்துலட்சுமி வசித்து வந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இந் நிலையில், சென்னையைச் சேர்ந்த பாட்சா என்பவர் தலைமை நீதிபதிக்கு ஒரு மனுவை பேக்ஸ் மூலம்அனுப்பியுள்ளார். இதை பொது நல மனுவாக விசாரிக்கக் கோரியுள்ள அவர், வீரப்பன் கொலை குறித்துஅதிரடிப்படையினர் சொல்லும் விஷயங்களை வைத்து 9 சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X