For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊர்வலமாய் வரப் போகும் அதிரடிப்படையினர் !

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Nehru stadium

நேரு ஸ்டேடியத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்
வீரப்பனை வீழ்த்திய தமிழக அதிரடிப்படை வீரர்களுக்கு நாளை சென்னையில் நடைபெறவுள்ள பாராட்டுவிழாவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

தமிழக அதிரடிப் படைக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவை ரத்து செய்யக் கோரியும் அதற்காகும் செலவு மற்றும்அதிரடிப் படைக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 22 கோடி பரிசு ஆகியவற்றை வீரப்பன் வேட்டையின்போது அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரி சிவக்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

தனது மனுவில், திமுக ஆட்சியில் நேரு விளையாட்டு அரங்கில் அரசு விழா நடத்த முயன்றபோது, இந்தஅரங்கத்தை விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் வழக்குத்தொடரப்பட்டது. அதை உயர் நீதிமன்றமும் ஏற்று, விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கே இந்த அரங்கை பயன்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு மாறாக இப்போது தமிழக அரசு அங்கு கலை நிகழ்ச்சி நடத்தவுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

அவருக்கு முன்பாக தலித் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதிலும், இந்தவிழாவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

சிவக்குமாரின் மனுவை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்இன்று விசாரித்தது. விசாரணைக்கு பின், அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு உதவுவதுதொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேசமயம், அதிரடிப்படை பாராட்டு விழாவுக்குத் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். இதனால்,திட்டமிட்டபடி நாளை அதிரடிப்படையினருக்கு பாராட்டு விழா நடக்கிறது.

இதற்கிடையே நாளை முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் நடக்கும் பாராட்டு விழாவில் பங்கேற்கபல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிரடிப் படையினரின் குடும்பத்தினர் போலீஸ் வாகனங்கள் மூலம்சென்னைக்கு அழைத்து வரப்பட்டவண்ணம் உள்ளனர்.

அவர்கள் தங்குவதற்காக நூற்றுக்கனக்கான லாட்ஜுகளில் ரூம்கள் புக் செய்யப்பட்டுள்ளன. அவர்கள்சென்னையை சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை மாலை 3.30 மணிக்கு அதிரடிப்படைப் போலீசார் 18 (கூட்டுத் தொகை 9) வாகனங்களில் முத்துசாமிபாலத்தில் இருந்து விழா நடக்கும் நேரு விளையாட்டு அரங்குக்கு ஊர்வலமாக அழைத்து வரப்படுகின்றனர்.கைகளில் துப்பாக்கிகளுடன், சீருடையில் அவர்கள் வருவர்.

4 மணிக்கு இந்த ஊர்வலம் ஸ்டேடியத்தை அடையும். இந்த வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர்ஜெயலலிதா ஏற்பார். பின்னர் விழா ஆரம்பமாகும். டான்ஸ் மாஸ்டர் கலாவின் தலைமையில் 150 சினிமா துணைநடிகர், நடிகைகள் ஆட உள்ளனர்.

25 வீரர்களுக்கு பரிசுகளை முதல்வர் வழங்கியதும் ஒரு ஆடல் நிகழ்ச்சி நடக்கும். பின்னர் மீண்டும் 25 பேருக்குவிருது, மீண்டும் ஒரு டான்ஸ் என நிகழ்ச்சி கோலாகலமாக நடக்கவுள்ளது.

Stadium

நிகழ்ச்சிக்குத் தயாராகும் உள்ளரங்கம்
8,000 பேர் வரை அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிக்கவும், இவர்கள் அனைவருக்கும் வகையான உணவுகள் வழங்கவும்ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Mail this to a friend  Post your feedback  Print this page 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X