சுகன்யா வழக்கு: டிவி, பத்திரிக்கைகளுக்கு தடை
சென்னை:
நடிகை சுகன்யா விவாகரத்து வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிடவோ, பிரசுரிக்கவோ கூடாது என்று சன் டிவி, தினத்தந்தி,தினமலர், தினகரன் ஆகியவற்றுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சுகன்யாவின் விவாகரத்து வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந் நிலையில் தனது விவாகரத்து வழக்குவிசாரணை தொடர்பான செய்திகளை, சன் டிவி, தினத்தந்தி, தினமலர், தினகரன் ஆகியவை செய்தியாக வெளியிட தடை விதிக்கக் கோரிசுகன்யாவின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி அசோக்குமார் விசாரித்தார். அப்போது சன் டிவி மற்றும் 3 பத்திரிக்கைகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்செய்தி வெளியிடுவதை தடை செய்ய சட்டத்தில் இடம் கிடையாது என்று வாதிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, குடும்ப நீதிமன்றச் சட்டத்தில், செய்கிகளைப் பிரசுரிக்க தடை கிடையாது என்பது உண்மைதான். இருப்பினும்,இந்து திருமணச் சட்டம் 22வது பிரிவின் கீழ் ஒரு பெண்ணின் திருமணம் தொடர்பான செய்திகளைப் பிரசுரிக்கத் தடை விதிக்க முடியும்என்றார்.
பின்னர், சுகன்யாவின் விவாகரத்து வழக்கு விசாரணை குறித்த விவரங்களை அது முடியும் வரை சன் டிவி, தினமலர், தினத்தந்தி, தினகரன்ஆகியவை வெளியிடக் கூடாது என்று தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.



திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!