For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக மா.செ. மீது பெண் கற்பழிப்பு புகார்

By Staff
Google Oneindia Tamil News

ஊட்டி:

நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளரும், தேயிலை வாரிய தலைவருமான சீனிவாசன் மீது ஒரு பெண் கற்பழிப்பு புகார்கொடுத்துள்ளார்.

குன்னூர் ஒய்.டபுள்யு.சி.ஏ. ரோட்டில் வசித்து வரும் பசுவராஜ் என்பவரது மகள் மகேஸ்வரி. இவர் நீலகிரி எஸ்.பி. மகேஸ்வர்தயாளை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கு 15 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கணவரின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் ஊர் பொதுமக்கள்மத்தியில் விவாகரத்து ஆனது. எனது தந்தை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

அதன்பின் எனது வீடு, சொத்து எல்லாவற்றையும் என் உடன்பிறந்தவர்கள் பறித்துக் கொண்டனர். அவற்றை மீட்க வழக்கறிஞர்என்ற முறையில் சீனிவாசனை நாடினேன். அவர் வழக்கு சம்பந்தமாக விசாரணை என்று கூறி காரில் அழைத்துச் சென்று ஆசைவார்த்தை கூறி, காரிலேயே பலவந்தமாக என்னை நாசப்படுத்தி விட்டார்.

அதன்பின் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி பலமுறை என்னுடன் உறவு கொண்டார். அதன்பின் சீனிவாசனிடம்திருமணம் செய்து கொள்ளுமாறு பலமுறை கேட்டுக் கொண்டேன்.

அதற்கு சீனிவாசன், உன்னைத் திருமணம் செய்தால், என்னுடைய அரசியல் செல்வாக்கு போய்விடும் என்று கூறி மறுத்துவிட்டார்.அதனையடுத்து அவரது மனைவி அனிதாவிடம் இது குறித்து முறையிட்டேன்.

இதனால் ஆத்திரமான சீனிவாசன், என்னை கொன்று விடுவேன் என்று மிரட்டத் தொடங்கினார். கடந்த அக்டோபர் 15ம் தேதிகாலை, சீனிவாசனின் அலுவலகத்திற்கு என்னை வரவழைத்து அவரும், அவரது மனைவி அனிதா, வேலைக்காரி, டிரைவர்என்று எல்லோரும் சேர்ந்து அடித்து துன்புறுத்தினார்கள்.

அப்போது சீனிவாசன் என் கன்னத்தில் மிக முரட்டுத்தனமாக அடித்ததில், எனது இடது காது கேட்காமல் போய் விட்டது. அதோடுஎன் வசமிருந்த ஆதாரங்கள் அனைத்தையும் அழித்து விட்டனர். மேலும் கட்சியில் உள்ள சிலரின் தூண்டுதலால் தான் நான்அப்படி நடந்து கொண்டேன் என்று எழுதி தரச்சொல்லி மிரட்டி சீனிவாசன் வாங்கி வைத்துள்ளார்.

நடந்த சம்பவத்தை போலீஸில் புகார் கொடுத்தால் என்னுடைய குடும்பத்தையே அழித்து விடுவதாகவும், என்னுடையசகோதரனை பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பி விடுவேன் என்றும் சீனிவாசன் மிரட்டுகிறார். அதையும் மீறி நான்போலீசுக்கு சென்றபோது, சமாதானமாகிப் போய்விடுமாறு அறிவுறுத்தி அனுப்பிவிட்டார்கள்.

எனவே எனக்கும் என் குடும்பத்தினருக்கும் தக்க பாதுகாப்பு தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவிடமும் மனு கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X