For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோட்டை ராணி: ஜெவுக்கு கோலிவுட் கோலாகல விழா

By Staff
Google Oneindia Tamil News
Ravi and Sridevi
சென்னை:

திருட்டு விசிடி ஒழிப்பு மற்றும் தமிழ்த் திரையுலகுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவித்த சலுகைகளுக்குப் பாராட்டு தெரிவிக்கும்வகையில் திரையுலகின் அனைத்து சங்கங்களின் சார்பாகவும் சென்னையில் பாராட்டு விழா நடந்தது.

கலைத்தாய்க்கு கலை உலகின் நன்றி விழா என்ற பெயரில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த பிரமாண்டமானநிகழ்ச்சியில் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் தவறாமல் பங்கேற்றனர்.

விழாவுக்கு வந்த ஜெயலலிதாவை நடிகர் விஜயகாந்த், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளிதரன் ஆகியோர் வரவேற்றுஅழைத்து வந்தனர்.

ரஜினி-கமலின் பச்சை சால்வை:

Teja and Sibi
பூரண கும்ப மரியாதையுடன் ஜெயலலிதா வரவேற்கப்பட்டார். ரஜினிகாந்த், ஜெயலலிதாவுக்கு புன்னகையுடன் வணக்கம்தெரிவித்தார். பதிலுக்கு ஜெயலலிதாவும் வணக்கம் சொன்னார். பின்னர் ரஜினி, கமல் ஆகியோர் இணைந்து ஜெயலலிதாவுக்குராசியான பச்சை நிற சால்வையை அணிவித்தனர். கூடவே விஜய்காந்துக்கும் இருந்தார்.

இதையடுத்து குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் கச்சேரியுடன் விழா தொடங்கியது.

இதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. நிகழ்ச்சிகளைக் காண மேடையின் கீழே வந்து முதல் வரிசையில் அமர்ந்தார்ஜெயலலிதா. அவருக்கு இரு பக்கமும் இயக்குனர் பாலசந்தரும், தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணனும் அமர்ந்தனர்.

சசி அண்ட் கோ:

Sasikala and Familyசரவணனையொட்டி ரஜினி, கமல், விஜய்காந்த் ஆகியோருக்கு சீட்டிங் அரேஞ்மெண்ட் செய்யப்பட்டிருந்தது. இரண்டாவதுவரிசையில் அமைச்சர்கள் அமர்ந்திருந்தனர்.

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் தனது குடும்பத்தினருடன் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

பிரபல முன்னணி பாடகர், பாடகிகளின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினர். இதையடுத்து நடந்த கலை நிகழ்ச்சியில் ஜெயம் ரவி,ஸ்ரீதேவி ஆகியோர் ஜெயலலிதாவைப் புகழும் பாடலுக்கு ஆடினர்.

கோட்டைக்கு ராணி நீங்கதானுங்க...

வாங்க வாங்க.. கோட்டை ராணி நீங்க தானுங்க என்ற ப.விஜய்யின் அந்தப் பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசைஅமைத்திருந்தார்.

வீராணம் வென்றாய் வீரப்பனை கொன்றாய்...

இதையடுத்து வீராணம் வென்றாய், வீரப்பனைக் கொன்றாய் என்ற ஜெயலலிதா வாழ்த்துப் பாடலுக்கு மும்தாஜ்-ராபர்ட்ஆகியோர் ஒரு டான்ஸ் போட்டனர்.

இந்த ஆடல் நிகழ்ச்சியின்போது நடிகைகள், நடிகைகள் வரிசையாக மேடையின் ஒரு பக்கத்தில் ஏறி, ஜெயலலிதாவுக்குபணிவான வணக்கத்தை தெரிவித்துவிட்டு, இன்னொரு பக்கமாக இறங்கிச் சென்றனர்.

பின்னர் கலைத் தாய்க்கு வாழ்த்து என்ற பெயரில் தானே எழுதிய கவிதையை நடிகர் விவேக் வாசித்தார்.

அந்தக் கவிதையை ஜெயலலிதா வாய் விட்டு ரசித்து சிரித்தார்.

இதையடுத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சிவாஜி கணேசன் ஆகியோரின் படங்களிலிருந்து பாடல்களுக்கு தேஜா ஸ்ரீ, சிபி, சிந்துதுலானி, எஸ்.ஜே.சூர்யா, சாயாசிங், ரீமா ஆகியோர் ஆடினர்.

Sneha and Dhanuhநீ வர வேண்டும் என்று எதிர்பார்த்தேன் என்ற பாடலுக்கு மும்தாஜும்- பாய்ஸ் பரத்தும் ஆடினர்.

இதைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடந்தது.

லட்சிய தேவதையே.. தனுஷ் டான்ஸ்

அடுத்ததாக லட்சிய தேவதையே நன்றி, வெற்றியின் நாயகியே நன்றி என்ற வித்யாசாகரின் தடாலடி இசை ஜெ வாழ்த்துப்பாடலுக்கு தனுஷ் நடமானடினார்.

விழாவில் நடிகை சரோஜா தேவி, பெப்சி திரைப்பட ஊழியர் சங்க உறுப்பினர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்படவினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X