For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலஸ்தீன தந்தை அராபத் உடல் அடக்கம்

By Staff
Google Oneindia Tamil News

கெய்ரோ:

பாலஸ்தீனத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட யாசர் அராபத் நேற்று அதிகாலை பாரிஸ் மருத்துவமனையில் மரமணடைந்ததையடுத்துஇன்று அவரது உடல் அடக்கம் நடக்கிறது.

பாரிஸ் மருத்துவமனையில் மரணமடைந்த அவரது உடலுக்கு பிரான்ஸ் நாட்டு ராணுவத்தின் சார்பில் இறுதி மரியாதைகள் வழங்கப்பட்டன.பின்னர் அவரது உடல் சிறப்பு விமானத்தில் எகிப்து தலைநகர் கெய்ரோ கொண்டு வரப்பட்டது.

அங்கு விமான நிலையத்தின் அருகே உள்ள மாபெரும் பள்ளி வாசலில் அவரது உடலுக்கு இறுதியஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. அதில்ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு அராபத்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து அவரது உடல் பாலஸ்தீனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அராபத்தின் உடலை அவர் பிறந்த ஜெருசலேமில் அடக்கம்செய்ய அனுமதி தர இஸ்ரேல் அரசு மறுத்துவிட்டது.

இதையடுத்து ரமல்லாவில் உள்ள பாலஸ்தீன அரசு தலைமையகத்தில் அராபத்தின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. அராபத்தின்மரணச் செய்தி வெளியானதில் இருந்து பாலஸ்தீனத்தில் பெரும் சோகம் கவ்வியுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் அழுதபடி அமர்ந்திருப்பதையும், நெஞ்சில் அடித்துக் கொண்டு பதறுவதையும் காண முடிந்தது. பலர்துப்பாக்கிகளால் வானத்தை நோக்கி சுட்டு அராபத் வாழ்க என கோஷமிட்டனர்.

பாலஸ்தீன மக்களுக்கு தனி நாடு காணும் அவரது கனவு கடைசி வரை நிறைவேறாமல் போய்விட்டது. இந்த மரணத்தையடுத்துபாலஸ்தீனத்திலும் இஸ்ரேலிலும் பலவித ராணுவக் கட்டுப்பாடுகளை இஸ்ரேல் அரசு அமலாக்கியுள்ளது.

மறைந்த அராபத்துக்கு இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோர்கெய்ரோ சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந் நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் திட்டமிட்டிருந்தார். ஆனால், பாதுகாப்புக் காரணங்களால் இந்தத்திட்டம் கைவிடப்பட்டுவிட்டது.

தூதரகத்தில் சிங், சோனியா அஞ்சலி:

இதற்கிடையே இன்று டெல்லியில் உள்ள பாலஸ்தீன தூதரகத்துக்குச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், அங்கு யாசர் அராபத்தின் மறைவுக்குஅஞ்சலி செலுத்தினார். அங்குள்ள புத்தகத்தில் தனது இரங்கல்களை எழுதினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய சிங், இந்தியாவின் மிகநெருங்கிய நண்பரை இழந்துவிட்டோம் என்றார்.

பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அங்கு வந்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,இந்திய மக்களின் மனதில் சிறப்பான இடம் யாசர் அராபத்துக்கு எப்போதும் உண்டு. தன் நாட்டு மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட மாபெரும் உள்ளம் கொண்ட மனிதர்.

இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி காலம் தொட்டு எங்கள் குடும்பத்தின் மீது தனிப்பட்ட பாசம் கொண்டிருந்தார். அவரது மறைவு எங்கள்குடும்பத்துக்கும் தனிப்பட்ட வகையில் பெரிய இழப்பாகும் என்றார்.

யாசர் அராபத்துக்கு அஞ்சலி செலுத்த ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் அமைச்சர்கள்கெய்ரோவிலும் பாலஸ்தீனத்திலும் குவிந்துள்ளனர்.

கருணாநிதி, வைகோ இரங்கல்:

அராபத் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலஸ்தீன மக்களின் வாழ்வுக்காக தனது வாழ்வை பணயம் வைத்து பாடுபட்ட பெருமகன் யாசர் அராபத் மறைந்தசெய்தி கேட்டு உலகமே கண்ணீர் வடித்துக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், வீரம், தியாகம் நிறைந்த மகத்தான போராட்டத்தை நடத்திய அராபத் மறைந்தார்என்ற செய்தி நெஞ்சைப் பிளக்கிறது.

இரண்டரையாண்டுகளாக அராபத் வசித்த வீட்டைச் சுற்றிலும் பீரங்கித் தாக்குதல், அதிரடித் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் அரசு அவருக்கு மரணபயமூட்ட நினைத்தது. ஆனால் அதையெல்லாம் தாங்கிக் கொண்டு நல்ல உணவு, காற்றோட்டம் இல்லாமல் அவரது உடல் நலம் கொஞ்சம்கொஞ்சமாக நலிந்தது.

லட்சியத்துக்காகவே இறுதி வரையிலும் போராடி உயிரைத் தியாகம் செய்துள்ளார் அராபத். அந்த வரலாற்று நாயகனுக்கு வீர வணக்கம் என்றுகூறியுள்ளார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X